
கூகுல் சார்ந்த புதுமையான மற்றும் வியக்க வைக்கக்கூடிய சேவை ஒன்று அறிமுகமாகியுள்ளது.மர்ம்மான கூகுல்(மிஸ்டிரி கூகுல்)இது தான் அந்த சேவை.கருப்பு நிற பின்னணியில் தேடல் காட்டத்திற்கு மேல் நிலவு மின்னிக்கொண்டிருக்க ஒரு வித அமாணுஷ்ய தன்மையோடு காட்சி தரும் இந்த சேவையில் என்ன சிறப்பு என்றால் நிங்கள் குறிப்பிட்ட ஒரு பதத்தை சொல்லி தேடும் போது வழக்கமாக கூகுல் செய்வது போல அதற்கு பொருத்தமான தேடல் முடிவுகள் தோன்றுவதற்கு பதிலாக கிளி சீட்டை பொருக்கி எடுப்பது போல எங்கிருந்தோ எடுக்கப்பட்ட ஒரு முடிவு வந்து நிற்கும்.அநேகமாக உங்களுக்கு முன் கூகுலில் தேடிய நபர் பார்த்த இணையபக்கம் மர்ம கூகுலால் காட்டப்படும்.ஒரு மெலிதான ஆச்சர்யத்தை அளித்து நீங்கள் பார்க்க வாய்ப்பில்லாத புதிய தளத்தை உங்கள் பார்வைக்கு வைத்து புதிய அனுபவம் அளிப்பதே இந்த சேவையிப்...