கொடிய வியாதிகளில் ஒன்றான புற்றுநோயில் பல வகைகள்
உள்ளன. அவற்றில் ரத்தப்புற்றுநோய் குறிப்பிடத்தகுந்தது. இதன் பாதிப்பும் எய்ட்ஸ் போலவே ரத்த வெள்ளையணுக்களை அழித்து, உடலில் நோய் எதிர்ப்பு சக்தியே இல்லாமல் செய்து விடும். மேலும் எலும்புகளையும் தாக்கும். நாளடைவில் ரத்த சிவப்பணுக்களையும் தாக்கி அனிமீயா எனப்படும் மற்றொரு வியாதியையும் தூண்டிவிடும்.

ரத்தப் புற்றுநோயானது சீரான முறையில் வளர்ச்சி அடையாமல் தாறுமாறாக பெருகி கோரமான பாதிப்புகளை ஏற்படுத்தும். எனவே இதை கட்டுப்படுத்துவதும் சிரமமாக இருந்து வந்தது.
இங்கிலாந்தில் மட்டும் ஆண்டு தோறும் 7 ஆயிரம் பேர் இந்த கொடிய வியாதியால் பாதிக்கப்பட்டு சுமார் 4 ஆயிரம் பேர் இறந்து வந்தனர். இதன் பாதிப்பை கட்டுப்படுத்த நடந்து வந்த ஆய்வுகள் தற்போது கைகொடுத்து உள்ளன.
புற்று நோய்க்கான காரணங்கள் இதுவரை ஆராய்ச்சியாளர்களுக்கு தெளிவில்லாமலே இருந்து வந்தது. புகைப் பழக்கத்தாலும், கதிர்வீச்சு பாதிப்பாலும், ஒருவித வைரஸ் களின் தாக்குதலாலும் புற்றுநோய் ஏற்படுவதாகவே அறியப்பட்டு இருந்தது. தற்போதுதான் புற்றுநோயோடு தொடர்பு உடைய ஜீன்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
கேம்ப்பிரிட்ஜ் பல் கலைக் கழகத்துக்கு உட்பட்ட குர்டான் இன்ஸ்டிட் ஆய்வாளர்கள், ரத்தப் புற்றுநோயான லுக்கேமியாவை ஏற்படுத்தும் ஜீன்களை அடையாளம் கண்டுள்ளனர். இந்த ஜீன்களுக்கு ஜேக்-2 என்று பெயரிடப்பட்டு உள்ளது.

ஆரம்பத்தில் இந்த ஜேக்2 ஜீன்கள் செல்களின் உட்புறத்தோல் என்றே கருதப்பட்டது. ஆனால் இவற்றுக்கு ரத்தப்புற்றுநோயுடன் தொடர்புடையது தெரியவந்துள்ளது. ஒரு வித நொதி இந்த ஜீன்கள் உருவாக காரணமாக இருக்கின்றன. இந்த ஜீன்கள் மற்ற ஜீன்களின் மேல் ஆதிக்கம் செலுத்தி, புரத மூலக்கூறுகளை ஹிஸ்டோன் என்னும் மூலக்கூறாக மாற்றிவிடுகிறது. ஜேக் 2 ஜீன்களில் ஒழுங்கற்ற மாறுதல் ஏற் படும்போது மற்ற செல்களும் பாதிக்கப்பட்டு புற்றுநோய் உருவாக காரணமாகிறது.
எனவே ஜேக்-2 ஜீன்களை கட்டுப்படுத்தி, ரத்தப் புற்றுநோய்க்கு தீர்வு காணலாம் என்று தெரியவந்துள்ளது. விரைவில் தீர்வு ஏற்படும் என்று நம்பலாம்.