November 16, 2009

விண்வெளியில் மின்சாரம் தயாரிப்பு

உண்மை அறிந்த மனிதனிடம் தான் இந்த பிரபஞ்சமே புதைந்திருக்கிறது என்று சித்தர்களும் ஞானியர்களும் தெரிவிப்பது உண்டு. மின் சக்தியே விஞ்ஞான வளர்ச்சிக்கு அதிமுக்கியமான ஒன்றாக இருந்து வருகிறது என்று சொன்னால் அது மிகையாகாது. மின்சாரம் கண்டுபிடித்த விஞ்ஞானி மைக்கேல் பாரடே நம்முடைய அபார வளர்ச்சிகளுக்கெல்லாம் ஒரு காரணகர்த்தா. நீர், நிலக்கரி, அலை மற்றும் அணு சக்தி போன்றவற்றின் உதவியுடன் இப்போது நமக்கு மின்சாரம் கிடைக்கிறது. காற்றும் அதற்கு விதிவிலக்கல்ல. காற்றின் மூலம் குறைந்த செலவில் அதிக மின்சக்திகளைப் பெற விஞ்ஞானிகள் இடைவிடாமல் முயற்சி செய்துகொண்டிருக்கின்றனர். தற்பொழுது உலகம் முழுவதிலும் 50 ஆயிரம் மெகா வாட் மின்சாரம் உபயோகப்படுத்தப்படுகிறது. இது 50 நியூகிளியர்...

மேம்படுத்தப்பட்ட நினைவகத்துடன் ஐபாட்

ஐ-பாட் கருவி தயாரிப்பில் சிறந்து விளங்கும் ஆப்பிள் நிறுவனம், நினைவகத் திறன் மேம்படுத்தப்பட்ட புதிய ஐ-பாட் மற்றும் ஐ-போன்களை அறிமுகப்படுத்தி உள்ளது. இதன்படி 16 ஜிபி நினைவக திறன் கொண்ட புதிய ஐ-போன் (iPhone) 499 டாலருக்கு விற்பனை செய்யப்படுகிறது. இதற்கு முன்பு 8 ஜிபி நினைவகம் உள்ள ஐ-போன்கள் மட்டுமே புழக்கத்தில் இருந்தது.இதேபோல் ஐ-பாட் டச் (iPod Touch) கருவியும், 32 ஜிபி நினைவகத் திறனுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் விலையும் 499 டாலர் என ஆப்பிள் நிறுவன செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.இதற்கு முன் புழக்கத்தில் இருந்த ஐ-பாட் டச் கருவிகள், 16 மற்றும் 8 ஜிபி நினைவகத் திறன் மட்டுமே கொண்டவை என்பது குறிப்பிடத்தக்கது.ஆப்பிள் நிறுவனத்தின் ஆன்லைன் மற்றும் சில்லரை விற்பனை மையங்களிலும், அமெரிக்காவின் ஏடி&டி விற்பனை மையத்திலும் புதிய ஐ-போன்கள் கிடைக்கும்...

"சந்திரனில் தண்ணீர்" நாஸா அறிவிப்பு

அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா சமீபத்தில் நடத்திய ஆய்வுகளில், நிலவில் குறிப்பிடத்தக்க அளவு தண்ணீர் இருப்பது தெரியவந்துள்ளது. பூமியின் துணைக்கோளான சந்திரனில் தண்ணீர் இருப்பதாக நாஸா ஆய்வு மையம் அறிவித்துள்ளது. நீண்டகாலமாக இந்த ஆராய்ச்சி இடம்பெற்றுவந்ததாகவும் அண்மைய ஆய்வுகளால் ஆதாரத்துடன் நிரூபிக்கக் கூடியதாக உள்ளதாகவும் அந்த மையம் குறிப்பிட்டுள்ளது. இந்தியா அனுப்பிய சந்திராயன்-1 ஆய்வுக்கலத்தில் இணைக்கப்பட்டிருந்த ஆய்வு உபகரணங்கள் நிலவில் தண்ணீர் இருப்பதை கடந்த சில மாதங்களுக்கு முன் உறுதி செய்தது. இது விண்வெளி ஆய்வில் முக்கிய மைல்கல்லாக கருதப்பட்டது. இதையடுத்து கடந்த சில வாரத்திற்கு முன் ராக்கெட்டை நிலவில் மோதச் செய்து அப்போது ஏற்படும் அதிர்வு மூலம் நிலவின் மேற்பரப்பை தகர்த்து அதில் தண்ணீர் இருக்கிறதா? என்ற ஆய்வு நாசா மேற்கொண்டது....

ஐ-போனுக்கு ( i -Phone) மைக்ரோசாப்ட் அப்ளிகேஷன்

தலைப்பு தவறு என்று எண்ணுகிறீர்களா! ஆமாம், மைக்ரோசாப்ட் நிறுவனம் ஐ போனுக்கு அப்ளிகேஷன் புரோகிராமினைத் தருமா என்ன? என்று நீங்கள் வியப்பது தெரிகிறது. ஆனால் உண்மை அதுதான். மைக்ரோசாப்ட் லைவ் லேப்ஸ் அத்தகைய ஒரு புரோகிராம் ஒன்றைத் தருகிறது. ஸீ ட்ரேகன் என இதற்குப் பெயர் இட்டுள்ளது. இதன் மூலம் ஐ போன் பயன்படுத்துபவர்கள் 3ஜி அல்லது வை–பி வழியாக பெரிய அளவிலான போட்டோ லைப்ரேரிகளை எளிதாகப் பெற்று காண முடியும். இந்த சாப்ட்வேர் தொகுப்புடன் 50 படங்கள் இணைத்துத் தரப்படுகின்றன. சில படங்கள் 10 கிகா பிக்ஸெல்கள் அளவில் மிகப் பெரியதாக உள்ளன. இதில் சில சாட்டலைட் மூலம் எடுத்த படங்கள், சில ஸ்பேஸ் போட்டோக்கள், சில அதிக ரெசல்யூசனில் உள்ள கலைப் படங்களாகும். இந்த சாப்ட்வேர் தொகுப்பின் மிக முக்கிய அம்சம் என்னவென்றால் இது முற்றிலும் இலவசம். ஒரு சின்ன மாற்றம் இருந்தாலும்...

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Bluehost Review