
Cube Desktop ஆனது ஒன்றுக்கு மேற்பட்ட virtual desktop க்களை முப்பரிமான (3D) முறையில் உருவாக்கக் கூடிய ஒரு மென்பொருளாகும். இதன் முலம் நமது கணணியில் ஆறு desktop க்களை உருவாக்கிக் கொள்ள முடியும் இதன் மூலம் கணணித் திரையில் பணிபுரியும் அளவைக் கூட்டிக் கொள்ள முடியும்.
இம் மென்பொருளை Install பண்ணியதும் ( கீழே உள்ள படத்தில் காட்டியவாறு ) Task bar இல் 1 2 3 4 5 6 என இலக்கமிடப்பட்டிடுக்கும். அந்த இலக்கத்தில் click செய்து குறிப்பிட்ட desktop க்கு செல்ல முடியும். இந்த மென்பொருளில் ஒவ்வொரு Desktop க்கும் விரும்பிய Wallpaper, Icon களைத் தனித்தனியாகப் போட்டு வைத்துக் கொள்ளலாம் என்பது இதன் சிறப்பாகும்.
விரும்பிய desktop இல் விரும்பிய Icon களைப் போட்டுக் கொள்வதற்கு படத்தில் காட்டியவாறு Task bar இல் வலப்புறத்தில் வரும் இம் மென்பொருளின் Icon இல் right click...