
கூகிளின் வளர்ச்சியால் தலையை சொறிந்து கொண்டிருந்த மைக்கிரோசொப்ருக்கு கொஞ்சம் ஆறுதலான விடயம் அண்மையில் அதனால் மிக பிரமாண்டமாக வெளியிடப்பட்ட Windows 7 விற்பனை கொடிகட்டி பறப்பதுதான்.பெருமளவான Vista மற்றும் Windows XP பாவனையாளர்கள் Windows 7 க்கு மாறிவருவது குறிப்பிடத்தக்கது. ஐப்பசி 22 ல் Windows 7 வெளியிடப்பட்ட பிறகு அதன் விற்பனை, 2007 தை மாதத்தில் Windows Vista வெளியிடப்பட்டபோது அதன் விற்பனையிலும் பார்க்க 234% உயர்வாக இருப்பதாக தரவுகள் கூறுகின்றன.Net Application எனும் நிறுவனம் அண்மையில் கணிணி இயங்கு தளங்களின் பாவனை தொடர்பாக, இணைய உலாவிகளிடமிருந்து பெறப்பட்ட தரவுகளை கொண்டு மேற்கொண்ட ஆய்வொன்றில், NetApplication நிறுவனத்தால் ஆய்வு நடத்தப்பட்ட அனைத்து கணினி களிலும் கார்த்திகை 1 ம் திகதி 3.6% ஆனவை Windows 7 இயங்குதளத்தை கொண்டிருந்த்து. இது Windows...