
துஷ்பிரயோகம் மற்றும் அழுத்தங்களால் பாதிக்கப்படும் சிறுவர், சிறுமியர் விரைவில் முதுமையை அடைந்துவிடுகின்றனர் என அண்மையில் நடத்தப்பட்ட ஆய்வு மூலம் புலனாகியுள்ளது.
சிறுவர் பராயத்தில் ஏற்படக்கூடிய உடல், உள ரீதியான துஷ்பிரயோகங்களால் உடல் விரைவில் முதுமையடைந்து விடுகிறது என அமெரிக்க ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
அமெரிக்காவின் பிறவுண் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் மரபணுக்களில் மேற்கொண்ட ஆய்வுகளின் மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளது.
துஷ்பிரயோகங்களால் பாதிக்கப்பட்ட சிறுவர், சிறுமியரது கலங்கள் விரைவில் முது மையடைந்து விடுகின்றன எனத் தெரிவிக்கப் படுகிறது. உள ரீதியான அழுத்தங்களும் விரை வில் முதுமையடைவதற்கான ஓர் காரணி என ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர...