November 30, 2009

டேட்டா ஸ்டோரேஜ் புதிய கண்டுபிடிப்பு

அமெரிக்காவில் இயங்கும் ஜெனரல் எலக்ட்ரிக் (GE) நிறுவனத்தின் கன்ஸ்யூமர் எலக்ட்ரானிக்ஸ் பிரிவு டேட்டா ஸ்டோரேஜ் தொழில் நுட்பத்தில் புதிய வழி ஒன்றைக் கண்டுபிடித்துள்ளது.

இதன்படி நாம் கற்பனையில் எண்ண முடியாத அளவிலான டேட்டாவினை ஒரு சிடியில் பதிந்து எடுத்துச் செல்ல முடியும். இதனை holographic storage technology என இந்நிறுவனம் அழைக்கிறது.

இதன் மூலம் 100 டிவிடிக்களில் உள்ள டேட்டாவினை ஒரு டிஸ்க்கில் பதிய முடியும். இந்தக் கணக்கின் படி ஒரு டிஸ்க்கில் 470 ஜிபி அளவில் டேட்டாவினை எழுத முடியும். இது ஏறத்தாழ அரை டெரா பைட் ஆகும்.


இந்த ஆண்டிலேயே மக்களுக்குக் கிடைக்க இருக்கும் இந்த அரிய தொழில் நுட்பம் இன்னும் பல சோதனைகளுக்குட் படுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது. அனைத்து சோதனைகளையும் தாண்டிய பின்னரே இதற்கு அங்கீகாரமும் அனுமதியும் வழங்கப்படும்.

ஹோலோகிராபிக் ஸ்டோரேஜ் என்னும் தொழில் நுட்பத்தின் அடிப்படையில் இது செயல்படுகிறது என ஜி.இ. நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்த தொழில் நுட்பம் மூலம் ஒரு முறை எழுதிய இடத்திலேயே மேலும் மேலும் டேட்டாவினை எழுதும் வழிகளை இது அமைத்துத் தருகிறது. தற்போது உள்ள சிடி, டிவிடிக்களில் லேயர் லேயராகத்தான் டேட்டாக்கள் திணிக்கப்படுகின்றன.

ஒன்றின் மேலாக ஒன்று எழுதப்படுவதில்லை. 1960 ஆம் ஆண்டிலேயே இந்த தொழில் நுட்பம் குறித்துப் பேசப்பட்டாலும் இப்போதுதான் மக்களுக்குப் பயன் தரும் வகையில் இது வெளிவருகிறது.


இந்த தொழில் நுட்பம் குறித்து மேலும் அறிய http://en.wikipedia.org/wiki/Holographic_memory என்ற முகவரியில் உள்ள இணைய தளம் செல்லவும்.

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Bluehost Review