
பயங்கரவாதம், குண்டுவெடிப்பு, துப்பாக்கிச் சூடுகள் போன்றவை ஏற்படுத்தும் அதிர்வலைகள் பயங்கரமானவை. வன்முறைச் செயல்களைத் தடுக்க மருத்துவ ரீதியிலான அணுகுமுறையும் தேவையாகும்.
'மானோ அமைன் ஆக்சிடேஸ்ஏ' என்பது மூளையில் உண்டாகிற ஒரு என்சைமாகும். மூளையில் இந்த என்சைமின் அளவு குறையும் போது மனிதன் வன்முறைச் செயல்களைச் செய்ய தூண்டப்படுகின்றான்.
மூளையில் இந்த என்சைமின் அளவு குறைவதை கார்பன் ஐஐ என்ற ஐசோடோப்பைப் பயன்படுத்தி அளவிட முடியும். வன்முறைச் செயல்களில் ஈடுபடுவோரிடம் இந்த என்சைமின் அளவு குறைவது கண்டறியப்பட்டுள்ளது.
அமெரிக்கா மற்றும் பிரிட்டனில் நடந்த ஆய்வுகளில் இது உறுதி செய்யப்பட்டுள்ளது. குற்றவாளிகளை நோயாளிகளாக கருதி ஒருங்கிணைந்த சிகிச்சை முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும் என அமெரிக்கா மற்றும் பிரிட்டன் விஞ்ஞானிகளின் கூட்டறிக்கை கூறுகிறத...