
இரவில் குளிர்ச்சி தருவது நிலவு. ஆனால் சூரிய குடும்பத்திலேயே வெதுவெதுப்பான கிரகம் சந்திரன்தான். இருந்தாலும் நிலவின் குளிர்ச்சியான பகுதி தற்போது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.
நாசா விண்வெளி மையத்தின் எல்.ஆர்.ஓ. என்ற நிலவை ஆராயும் விண்கலம் இதை கண்டுபிடித்தது. நிலவின் தென் மேற்குப் பகுதிதான் மிகவும் குளிர்ச்சியாக உள்ளது. இரவில் மைனஸ் 294 டிகிரி செல் சியஸ் குளிருக்குச் செல்கிறது.
நிலவு 1.54 டிகிரி சாய்வாக இருந்து பூமியை சுற்றி வருகிறது. இதனால் பெரும்பாலான பகுதிகளில் வெப்ப மாற்றம் அதிகமாக வித்தியாசப்படுவதில்லை. நில நடுக்கோட்டுப் பகுதியில் மட்டும் சற்று அதிகமான வெப்பமும், அதிகமான குளிரும் நிலவுகிறது.
நிலநடுக்கோட்டுப் பகுதியில் பகலில் 127 டிகிரி செல்சியஸ் வெப்பமும், அதே பகுதியில் இரவு மிக அதிகமான குளிரும் ஏற்படுகிறது. சூரியன் 6 மாதகாலம் பூமியின் தென்...