February 21, 2010

கடன் அட்டை பின்(Pin) சிஸ்டம் மோசடி….

நாம் இப்போது வாங்கும் அனைத்து பொருள்களுக்கும் கடன் அட்டையை பயன்படுத்தி காசு கொடுக்கும் வசதி சிறு தெருக்களில் கூட வந்துவிட்டது இதற்காக அவர்கள் ஒரு பின் சிஸ்டம் உள்ள இயந்திரம் வாங்கி வைத்து நம் ஏடிஎம் அட்டையில் உள்ளதகவல்களை பயன்படுத்தி காசு எடுக்கின்றனர். ஆனால் ஒரு சில ஹக்கர்கள் நாம் பயன்படுத்தும் இந்த பின் சிஸ்டத்தின் தகவல்களை உலோகத்தில் ஏற்படும் பிழை மூலம் பின் சிஸ்டத்தின் தகவல்களை மாற்றியமைக்கப்பட்ட அட்டை மூலம் எளிதாக எடுத்து விடுகின்றனர் இதைப்பற்றி ஆராய்ந்து பார்த்ததில் சரியாக சில மொடல் பின் சிஸ்டம் உள்ள இயந்திரத்தில் இவர்கள் தாங்கள் பயன்படுத்தும் அட்டையுடன் வயர் இணைத்து கையடக்க ஹக்கிங் இயந்திரத்தில் சேர்த்துள்ளனர்.  இது எப்படி வேலை செய்கிறது என்று பார்த்தால் நாம் பயன்படுத்தும் அனைத்து வகை பின் சிஸ்டத்துக்கும் துணை செய்கிற மாதிரி இவர்கள்...

வாடகை வானூர்தி (Air Taxi)

உலகில் நாளாந்தம் அதிகரித்துச்செல்லும் சனத்தொகைப் பெருக்கம் போக்குவரத்து நெருக்கடியை நாளாந்தம் அதிகரித்த வண்ணமுள்ளது. நேரமே பணமாகிப் போய்விட்ட வர்த்தக உலகில் போக்குவரத்து நெரிசல் மக்களின் நாளாந்தச் செயற்பாடுகளைத் தாமதப்படுத்துவதென்பது வர்த்தக உலகை செயலற்றதாக்கிவிடும். இவ்வாறான பிரச்சினைகளிற்குத் தீர்வுகாண்பதற்காக இப்பிரச்சினைகளுடன் தொடர்புபட்ட பல்வேறு துறைகளைச்சேர்ந்த நிபுணர்கள் பல்வேறுபட்ட வழிகளில் முயற்சித்தவண்ணமுள்ளனர். இவ்வாறான முயற்சிகளின் விளைவுகளில் ஒன்றே வாடகை வானூர்தி (Air Taxi) ஆகும். இதுவரை பொதுப்பயன்பாட்டிற்குக் கொண்டுவரப்படாது பரிசோதனைச் செயற்பாட்டிலிருக்கும் இந்த வாடகை வானூர்திகளை மிக விரைவில் பொதுப்பயன்பாட்டிற்குக் கொண்டுவரும் முயற்சியில் நிபுணர்கள் உழைத்துக்கொண்டிருக்கின்றார்கள். சாதாரண மகிழுந்துகள் (Cars) போன்று வீதியால்...

விக்கிபீடியாவுக்கு கூகுல் நிதியுதவி

இணைய உலகின் லாபம் மிக்க நிறுவனமான கூகுல் இணையத்தின் கூட்டு முயற்சியின் அடையாளமாக விளங்கும் விக்கிபீடியாவுக்கு 2 மில்லியன் டாலர் நிதியுதவி வழங்கியுள்ளது. விக்கிபீடியாவை நிர்வகிக்கிம் விக்கிமீடியா அமைப்பின் தலைவரும் விக்கிபீடியாவின் நிறுவனருமான ஜிம்மி வேல்ஸ் இந்த தகவலை தனது டிவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார். அதனை தொடர்ந்து அதிகார பூர்வ தகவலும் வெளியிடப்பட்டது.  கூகுலின் இணை நிறுவனரான‌ சர்ஜி பிரைன் விக்கிபீடியாவை இணைய உலகின் மாபெரும் வெற்றிகளில் ஒன்று என குறிப்ப்ட்டுள்ளார். கூகுல் அளித்துள்ள நிதியுதவி விக்கிபீடியாவின் தகவல்களை தாங்கி நிற்பதற்கான தொழில்நுட்ப வசதியை உருவாக்க மற்றும் மேம்படுத்த பயன்படுத்தப்பட உள்ளது.  இணைய‌வாசிக‌ளின் ஆர‌வ‌ மிக்க‌ ப‌ய‌ன்பாட்டால் நாளுக்கு நாள் வ‌ள‌ர்ந்து கொண்டே வ‌ரும் விக்கிபீடியாவின் அதிக‌ரித்து வ‌ரும்...

உடல் எலும்புகள் பலமாக இருக்க....

உடல் எலும்புகள் பலமாக இருக்க வேண்டும் என்றால் சுண்ணாம்புச்சத்து தேவையான அளவு இருக்க வேண்டும். கூடவே, வைட்டமின் `டி’யும் தேவை. இந்த சத்துகள் பால், தயிர், மீன், முட்டை, வெண்ணை ஆகியவற்றில் நிறைய காணப்படுகின்றன. இவற்றுடன் தினசரி, முளைவிட்ட கொண்டைக் கடலையும் சாப்பிட்டு வரவேண்டும். சூரியக் குளியலும் அவசியம். டாக்டர் யோசனைப்படி வைட்டமின் `டி’யை மாத்திரையாகவும் எடுத்துக்கொள்ளலாம். சுண்ணாம்புச் சத்து அதிகம் கிடைக்க வேண்டும் என்றால் முட்டைகோஸ், தவிடு நீக்காத கோதுமை மாவில் செய்யப்பட்ட சப்பாத்தி, தண்டுக்கீரை, கேரட், ஆரஞ்சுப் பழம், பாதாம் பருப்பு, வால்நட் பருப்பு ஆகியவற்றையும் தெடர்ந்து உணவில் சேர்த்து வரவும். இதயம் வேகமாக துடித்தல், தூக்கமின்மை, தசைவலி, எரிச்சல் போன்ற பாதிப்புகள் தெரிந்தால் அது சுண்ணாம்புச் சத்துக் குறைபாட்டின் அறிகுறியேதான். ...

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Bluehost Review