February 07, 2010

மொபைலில் தமிழ் தளங்களை காண ஸ்கைபயர் உலாவி

பொதுவாக மொபைல் உலாவிகளில் இணையதளங்கள் முழுமையாக தெரியாது. இணைய பக்கங்களில் உள்ள வீடியோக்களை காண முடியாது. இணையதளங்களின் வசதியை முழுமையாக உபயோகிக்க முடியாது. இது போன்று சில குறைபாடுகள் மொபைல் உலாவியில் உண்டு. ஸ்கைபயர் (Skyfire). கணினியில் இணையதளங்கள் தெரிவது போன்று ஸ்கைபயர் மொபைல் உலாவியில் இணையதளங்கள் தெளிவாக தெரிகின்றன. யூடியுப் போன்ற வீடியோ தளங்களில் வீடியோக்கள் உலாவியின் உள்ளேயே ப்ளே ஆகின்றன. மொத்தத்தில் ஓரளவுக்கு கணினியில் பிரவுசிங் செய்வது போன்ற அனுபவத்தை ஸ்கைபயர் தருகிறது. ஸ்கைபயரின் மேம்படுத்தப்பட்ட புதிய பதிப்பு 1.5 சிம்பியன் இணையங்குதளத்தை உபயோகிக்கும் மொபைல் போன்களுக்கு என்று வெளியாகி உள்ளது. இது தொடுதிரை (Touch Screen) மொபைல்களையும் ஆதரிப்பது சிறப்பம்சம்.  தமிழர்களாகிய நமக்கு ஸ்கைபெயரில் சிறப்பம்சம் என்னவெனில் தமிழ் இணையதளங்கள்...

ஸ்பைஸ் மொபைல்ஸ் டூயல் சிம் கேமரா போன்கள்

தொடர்ந்து பல நிறுவனங்கள் மொபைல் இணைப்பு சேவையினை மிகக் குறைந்த கட்டணத்தில் தர முன்வருவதால் பலர் ஒன்றுக்கு மேற்பட்ட சிம்களை வைத்துக் கொண்டு, தங்கள் மொபைல் அழைப்புகளை வகைப்படுத்தி வருகின்றனர். அவ்வாறு திட்டமிடுவதற்கு இரண்டு சிம்கள் உள்ள மொபைல் போன் ஒரு வரப்பிரசாதமாகும். ஸ்பைஸ் எம் 7070: இந்த மொபைலில் இரண்டு ஜி.எஸ். எம். சிம்களை குழப்பமின்றி எளிதாகப் பயன்படுத்தலாம். இது ஒரு டிஜிட்டல் கேமரா மொபைல். இந்த கேமரா 5 மெகா பிக்ஸெல் திறனுடன், 8 எக்ஸ் டிஜிட்டல் ஸூம், டூயல் எல்.இ.டி. பிளாஷ், ஆட்டோ போகஸ் லென்ஸ் ஆகிய வசதிகள் கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளது.  இதன் மூலம் குறைவான ஒளியில் கூட தெளிவான போட்டோக்களை ஒருவர் எடுக்க முடியும். மேலும் இதில் உள்ள ஃபேஸ் டிடக்ஷன் வசதி தானாக போகஸ் செய்து கொண்டு புகைப்படங்களை எடுக்கிறது. கூடுதலாக பல ஷாட் மோட்களும் தரப்பட்டுள்ளன....

குழந்தைகளுக்கு பாதுகாப்பான சைபர் டெஸ்க்டாப் கம்ப்யூட்டர்

சிறிய வயது உள்ள குழந்தைகள் முதல் படிக்கும் மாணவர்கள் வரை அனைவருக்கும் பயன்படும் வகையில் இந்த டெஸ்க்டாப் கம்ப்யூட்டர் உள்ளது. முற்றிலும் வண்ணமயமாக்கப்பட்ட குழந்தைகள் விளையாடும் பிளே ஸ்டேசன் போல் உள்ளது. முதலில் இதன் ஹார்டுவேர் கான்பிக்ரேசன் பற்றி பார்ப்போம். Intel Pentium Dual Core E5200 CPU 19”inch touchscreen LCD 500GB HDD 4GB RAM DVD super drive Intel GMA 3100 3D Graphic Card Realtek HD audiO   Windows 7 OS இந்த டெஸ்க்டாப் கம்யூட்டருக்கு பிரிமியர் கிட்ஸ் சைபர்நெட் ஸ்டேசன் (Premier Kids Cybernet station) என்று பெயர் வைத்துள்ளனர். தண்ணீர் கீபோர்டில் பட்டால் கூட எந்த பழுதும் ஏற்படாது என்பதில் இருந்து மானிட்டரை தொட்டு இன்புட் கொடுக்கலாம் என்பதுவரை அனைத்தும் கொஞ்சம் வித்தியாசமாக தான் உள்ளது. இண்டெர்நெட்டில் ஆபாச இணையதளங்களை...

வைரஸ் பரவலை தடுக்க மைக்ரோசாப்ட்டின் 'பாதுகாப்பு கவசம்'

கடந்த வாரம் சீனாவில் கூகுள் நிறுவன செயல்பாடுகளை பெருமளவில் பாதித்த வைரஸைப் போல, தற்போது இன்டர்நெட் எக்ஸ்புளோரரை குறி வைத்து பரவி வரும் வைரஸ் தாக்குதலிலிருந்து தனது வாடிக்கையாளர்களைக் காக்க புதிய வகை சாப்ட்வேரை களம் இறக்கியுள்ளது மைக்ரோசாப்ட் நிறுவனம். இதுகுறித்து மைக்ரோசாப்ட் நிறுவனம் கூறுகையில், கூகுள் உள்பட சீனாவில் இயங்கி வரும் 20க்கும் மேற்பட்ட நிறுவனங்களைக் குறி வைத்து கடந்த வாரம் வைரஸ் தாக்குதல் நடத்தப்பட்டது.  குறி்ப்பாக இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசர் மூலமாக இந்த வைரஸ் பரப்பப்பட்டது.  இதையடுத்து எக்ஸ்புளோரர் பிரவுசரை பயன்படுத்துவோரைக் காக்க மைக்ரோசாப்ட் நிறுவனம் ஒரு புதிய சாப்ட்வேரை வெளியிட்டுள்ளது. இதை நிறுவிக் கொண்டால் இந்த வைரஸ் தாக்குதலிலிருந்து தப்பிக்க முடியுமாம்.  இதுகுறித்து உலகின் முன்னணி பாதுகாப்பு சாப்ட்வேர்...

ஹக்கர்களின் அட்டகாசம் யூடியுப்யையும் விடவில்லை

நாளுக்கு நாள் பெருகிவரும் ஹக்கரின் அட்டகாசம் இப்போது யூடியூப் வரை சென்றுள்ளது. சென்ற வாரம் தான் டிவிட்டரை ஒரு வழிபடுத்தினார்கள் அதற்குள் இரண்டு நாட்களுக்கு முன் யூடியுப்பையும் ஒரு கை பார்த்துள்ளனர். இரண்டு நாட்களுக்கு முன் யூடியுப் இணையதளத்தை திறந்தால் YouTube is currently experiencing some downtime issues, reporting a “Http/1.1 Service Unavailable” error or a a 500 Internal Server  error. இப்படி ஒரு செய்தி தெரிந்தது உலகத்தின் பல பகுதிகளில் இருந்தும் யூடியுப் இணையதளத்தை திறந்தவர்கள் ஒன்றும் புரியாமல்  விழித்தனர் ஒருத்தர் டிவிட்டரில் எனக்கு இங்கு யூடியூப் தெரியவில்லை என்று ஒரு டிவிட்டை தட்டி விட விஷயம் காட்டுத்தீ போல பரவ ஆரம்பித்தது. சரியாக 20 நிமிடம் ஒன்றும் செய்ய முடியவில்லை அடுத்து உடனடியாக நம் கூகுள் இந்த பிரச்சினையை பெரிதாகும்...

Twitter மூலம் நட்சத்திரமான 16 வயது சிறுவன்

ட்விட்டரில் அரட்டையடித்து நேரம் வீணாக்கும் காங்கோன் போன்றவர்கள் இருக்கும் உலகில் உருப்படியான வேலைகளை செய்து பெயரெடுக்கும் நபர்களும் இருக்கத்தான் செய்கின்றார்கள். அமெரிக்காவில் இருக்கும் Adorian Deck எனும் 16 வயது மட்டுமே நிரம்பிய பாலகன் ட்விட்டர் கணக்கு ஒன்றை ஆரம்பித்து அதில் திகைக்கவைக்கும் தகவல்களைப் போடத்தொடங்கினான். OMGFacts (Oh My God) எனும் அடைபெயருடன் இவன் கடந்த செப்டம்பர் மாதம் ஆரம்பித்த ட்விட்டர் கணக்கில் அறிவியல், கணக்கியல், வரலாறு பூகோளம் போன்றவற்றில் இருந்து திகைக்கவைக்க கூடிய தகவல்களை வெளியிட்டு வந்தான்.  இந்த ட்விட்டர் கணக்கு பிரபலமாக பல பிரபலங்களும் இவனைப் பின்தொடரத்தொடங்கினமை மேலும் சிறப்பு. இதுவரை சுமார் 310,000 க்கும் மேற்பட்ட பின்தொடர்பவர்களைக் கொண்டுள்ள இந்தச் சிறுவன் ஒரு ட்விட்டர் நட்சத்திரம் ஆகிவிட்டா...

அதிக வேலை முளையை பாதிக்குமாம்!

இன்றைய சமுதாயத்தில் சொந்தமாக தொழில் செய்பவர்களாக இருந்தாலும் சரி… அடுத்தவர்களிடம் வேலை பார்ப்பவர்களாக இருந்தாலும் சரி… குறிப்பிட்ட அளவில்தான் உழைக்க வேண்டும். வாழ்க்கையே உழைப்பு ஆனால் பல்வேறு பிரச்சினைகள் ஏற்படும் என்கிறார்கள் ஆய்வாளர்கள். ஒரு வாரத்திற்கு 40 மணி நேரம்தான் உழைப்புக்கு செலவிட வேண்டும். உடல் உழைப்பை வெளிப்படுத்தி செய்யும் வேலையாக இருந்தாலும், சிந்தித்து செய்யும் வேலையாக இருந்தாலும் இந்த கால அளவை தாண்டி ஒருவர் வேலை செய்வது அவருக்கு நல்லதல்ல என்கிறது இந்த ஆய்வு.  வாரத்திற்கு 40 மணி நேரத்தையும் தாண்டி வேலை செய்தால், அதனால் ஏற்படும் பாதிப்பு உடனே தெரியாது என்று கூறியுள்ள ஆய்வை மேற்கொண்டவர்கள், நடுத்தர வயதை கடந்த பின்புதான் இந்த பாதிப்பு உங்களுக்கு தெரிய வரும். குறிப்பாக, முளையின் சுறுசுறுப்பு குறைய ஆரம்பிக்கும் என்றும் எச்சரிக்கிறார்கள்.  அவர்கள்...

டிவி க்களில் ஸ்கைப்

வாய்ஸ் ஓவர் புரோட்டோகால் தொழில் நுட்பத்தின் உதவியுடன் இன்டர்நெட் இணைப்பில் உள்ள இருவர், தங்களின் பெர்சனல் கம்ப்யூட்டர், மொபைல் போன், கார்ட்லெஸ் போன், வீடியோ போன் ஆகியவற்றின் மூலம் திரையில் ஒருவரை ஒருவர் பார்த்து உரையாடிக் கொள்ளலாம். இதனால் ஆயிரக்கணக்கான மைல்கள் தள்ளி இருப்பவர்கள் கூட ஒரே அறையில் அமர்ந்து பேசுவது போன்ற நிலை ஏற்பட்டு வருகிறது. இந்த வகையில் இலவச அப்ளிகேஷன் புரோகிராம்களைப் பல நிறுவனங்கள் அளித்து வந்தாலும், ஸ்கைப் இதில் முன்னணி இடம் பிடித்துள்ளது.  இனி இந்த வகைத் தொடர்பினை, "டிவி'க்கள் வழியாகவும் தருவதற்கு ஸ்கைப் முன்வந்துள்ளது. முதன் முதலாக "டிவி'க்களில் இந்த தொழில் நுட்பத்தினை ஸ்கைப் கொண்டு வருகிறது.  இதற்கான ஒப்பந்தத்தினை எல்.ஜி. மற்றும் பானாசோனிக் நிறுவனங்களுடன் மேற் கொண்டுள்ளது. இந்த இரு நிறுவனங்களும் இன்டர்நெட் வசதி...

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Bluehost Review