January 31, 2010

பீர் குடித்தால் பெண்களுக்கு மார்பக புற்று நோய் வராது

பீர் குடிப்பது ஆண்களின் உடல் நலத்தை பாதிக்காது என்ற கருத்து நிலவுகிறது. தற்போது இது பெண்களின் உடல் நலத்துக்கும் நல்லது என்ற புதிய தகவல் வெளியாகியுள்ளது.

குறிப்பாக தினமும் ஒரு கோப்பை பீர் அருந்தும் பெண்கள் மார்பக புற்று நோயால் பாதிக்கப்பட மாட்டார்கள் என்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆய்வை ஜெர்மனியில் உள்ள ஹெய்டல் பர்க் கேன்சர் ஆய்வு மையம் நடத்தியுள்ளது. பீர் மதுபானத்தில் உள்ள சக்தி வாய்ந்த மூலக் கூறுகள் மார்பக புற்று நோயில் இருந்து பெண்களை காப்பாற்று வதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். 

பொதுவாக பீர் மது பானத்துக்கு மனமூட்டுவதற்காக ஒருவகை மலரை பயன்படுத்துவார்கள். அதில் உள்ள ஷான்தோகியூமோல் உடல் உறுப்பில் இருந்து டெஸ்போஸ்டெரோன் மற்றும் ஆஸ்ட்ரோஜெனை அதிக அளவில் சுரக்காமல் தடுக்கிறது. 

அது பி.எஸ்.ஏ. என்ற புரோட்டீன் அதிக அளவில் உற்பத்தியாகாமல் தடுத்து நிறுத்துகிறது. அது மார்பக புற்று நோய் வராமல் பெண்களை பாதுகாக்கிறது. இந்த ஆய்வு தற்போதுதான் முதல் கட்டத்தில் உள்ளது. தொடர்ந்து நடைபெறும் ஆய்வின் மூலம் மார்பக புற்று நோய் மட்டுமின்றி புற்று நோய் வராமல் தடுக்க பீர் உதவும் என்று தெரிய வரும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மைக்ரோமேக்ஸ் புதிய வகை செல்போன் அறிமுகம்

மைக்ரோமேக்ஸ் நிறுவனம் செல்போன் தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறது. இந்நிறுவனம் தற்‌போது, புதிய ரக எம்.டி.வி., எக்ஸ் 360 என்ற பிராண்ட் பெயரில் செல்போனை அறிமுகம் செய்துள்ளது.

இந்த செல்போன் புளூடூத் வசதி, 3டி மியூசிக், 8 ஜி.பி., நினைவகத்திறன், வீடியோ ரெக்காடர், இரண்டு சிம்கார்ட் வசதி, ஜி.பி.ஆர்.எஸ்., உள்ளிட்ட பல சிறப்பம்சங்கள் இடப்பெற்று உள்ளன. 

எம்.டி.வி., நிறுவனத்துடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்த செல்போனை அறிமுகப் படுத்தி உள்ளதாக, மைக்ரோமேக்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Bluehost Review