January 24, 2011

Virtual DJ: கலக்கல் கலவை இசையை உருவாக்கும் மென்பொருள்

வீடியோக்கள் மற்றும் ஆடியோக்களின் இசையை இணைத்து கலக்கல் கலவையாக மாற்றும் புத்தம்புதிய இசையை உருவாக்கும் டிஸ்க் ஜாக்கிகளுக்கான (Disk Jockey) இலவச மென்பொருள் இது. ஆப்பிள் மேக் மற்றும் விண்டோஸ் கணனிகளில் இயங்கும் வண்ணம் வடிவமைக்கப்படுள்ளது.
இந்த மென்பொருளை பயன்படுத்தி நாம் புதிய இசையை உருவாக்கலாம்.இது டிஸ்க் ஜாக்கிகளுக்கு மட்டுமில்லாமல் அனைவருக்கும் பொழுதுபோக்கு சாதனமாக பயன்படுகிறது.
இந்த வணீகரீதியில்லாமல் வீட்டுப் பயன்பாடானது(Home Edition).இது முற்றிலும் இலவசமானது. தரவிறக்கிப் பயன்படுத்தலாம்.
கணினியின் விசைப்பலகை மற்றும் மவுஸ் கொண்டு இதை இயக்கலாம்.யு எஸ் பி (Universal Serial Bus) கருவிகளுடன் ஒத்திசைவு கொண்டதால் இதை எங்கு வேண்டுமானாலும் உடனடியாக பயன்படுத்த முடியும்.
பல்வேறு நவீன கோப்புவடிவங்களுடன் இதை பயன்படுத்தும் வண்ணம் எளிமையாக்கப்பட்டுள்ளது.

பாலியல் கல்வி தேவை தானா?

பாலியல் கல்வி தேவை தானா? இப்போதும் பாலியல் என்பது ரகசியமாகவே உள்ளது.பாலியல் என்பது விவாதிக்கப்படவே கூடாத விஷயம் என்று நினைத்துப் பலர் ஒதுக்குகின்றனர். வெளிப்படையாகப் பேசவும் தயங்குகின்றனர்.
ஏனெனில் இது தேவையில்லாத ஒன்று என்ற மனோபாவத்தை நமது சமூகக் கலாசார அமைப்பு மக்களின் மனங்களில் ஏற்படுத்தி விட்டது.பாலியல் இயல்பான ஒன்று தான். பாலியல் தேவை மனித வாழ்விற்கு முக்கியத் தேவைகளில் ஒன்றாக இருப்பதுடன் இன்றியமையாததாகவும் உள்ளது.
பாலியல் சம்பந்தப்பட்ட உண்மைகளை மறைத்து வைப்பதால் அதன் மீது நாட்டம் உண்டாகி, அது என்னவென்று அறிந்து கொள்ள மேலும் ஆர்வம் ஏற்படுகிறது. இயற்கையாகவே, மறைத்து வைக்கப்பட்ட எந்தவொரு ரகசியத்திற்கும் கவர்ச்சி இருக்கும் என்பதும் அனைவரும் அறிந்ததே.
எனவே, பாலியல் பற்றி அறிய, படங்களும், ஒரு தவறான வழிகாட்டுதலை தருகின்றன. இது ஆண், பெண் இருபாலாரையும் மோசமான பாதைக்கு இழுத்துச் சென்று வேதனை தரும் பின் விளைவுகளுக்கு காரணமாகவும் அமைகிறது. 
பாலியல் அறிவை ஊட்டுவதில் குழந்தைப் பருவத்தில் பெற்றோர்க்கும்,இளம் வயதில் ஆசிரியர்களுக்கும் பெரும் பங்கு இருக்கிறது. மூன்றாவது மனிதர் மூலமாகவோ, மஞ்சள் பத்திரிக்கைகள் வழியாகவோ, மோசமான கதைகள் திரைப்படங்களின் மூலமாகவோ தவறான பாலியல் அறிவு பெறுவதை விட பெற்றோரும் ஆசிரியர்களும் பாலியல் உண்மைகளை அந்தந்த வயதிலேயே அறிவுறுத்துவது நன்மை பயக்கும்.
மேலும் பாலியல் அறிவைச் சிறு வயதிலேயே கற்றுக் கொடுத்தால்தான் அவர்கள் பருவம் அடையும்போது, பொறுப்புள்ளவராகவும் நல்ல சமூகத்தின் உறுப்பினர்களாகவும் விளங்க முடியும், பாலியல் தொடர்பான குற்றங்களும் குறையும்.பாலியல் பிரச்சனைகளால் ஏற்படும் கருத்து வேறுபாடுகள், சண்டைகள், தற்கொலைகள் குறையும். 

சைக்கிள் ஓட்டுவது "தலைவலி" க்கு நிரந்தர தீர்வு: ஆய்வுத் தகவல்

"தலைவலியும், பல்வலியும் உனக்கு வந்தால் தான் தெரியும்” என்பார்கள். இதற்குக் காரணம் அந்த வலியை அனுபவித்தால் தான் அதன் கொடுமை விளங்கும்.
மைகிரைன் தலைவலி என்னும் ஒற்றைத் தலைவலி மிகவும் கொடுமையானது. இதற்கான தீர்வைத் தான் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். 
அதாவது, சைக்கிளை எடுத்துக் கொண்டு தினமும் கொஞ்ச நேரம் உற்சாகமாய் ஓட்டுங்கள். சில மாதங்களிலேயே உங்கள் தலைவலி பறந்து போய்விடும் என சொல்லி வியக்க வைக்கின்றனர் ஸ்வீடன் நாட்டு ஆராய்ச்சியாளர்கள்.


கடந்த சில மாதங்களாக தலைவலியால் பாதிக்கப்பட்டிருந்த நபர்களைக் கொண்டு நடத்தப்பட்ட ஆராய்ச்சியில் தான் இந்த முடிவு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உடற்பயிற்சி செய்தால் தலைவலி அதிகமாகி விடும் எனும் தவறான கருத்தில் பலரும் உடற்பயிற்சி செய்ய மறுத்து வருகின்றனர்.
ஆனால் உண்மையில் சைக்கிள் ஓட்டும் பயிற்சியானது தலைவலி வரும் வாய்ப்பை 90 விழுக்காடு வரை குறைக்கும் என்கின்றனர் மருத்துவர்கள். இதற்கு காரணம்,நீங்கள் சைக்கிள் ஓட்டும் போது உங்கள் உடலில் எண்டோர்பின்கள் அதிகமாக சுரக்கின்றன. எண்டோர்பின்கள் வலி நிவாரணியாக செயல்படும் என்பதால் தலைவலி வராமலும் அது தடுத்து விடுகிறது என மருத்துவ விளக்கமும் அளிக்கின்றனர்.

வானத்தில் புதிய சூரியன் தோன்றும்: விஞ்ஞானிகளின் அதிர்ச்சித் தகவல்!


தற்போதைய உலகில் விண்ணில் பல அதிசயங்கள் நிகழ்ந்து வருகின்றது.இந்நிலையில் வானில் மிகவும் சக்தி வாய்ந்த வெளிச்சம் ஒன்று ஏற்பட உள்ளது.பூமி தோன்றிய நாள் முதல் இது மாதிரியான நிகழ்வு ஏற்பட்டதில்லை.
இந்த வெளிச்சமானது இரவை பகல் போன்று மாற்றும். இந்த நிகழ்வானது ஒரு வாரம் முதல் 2 வாரங்கள் வரை ஏற்படும் வாய்ப்பு உள்ளது.
அதிசக்தி வாய்ந்த விண் மீன் கூட்டமானது பூமியில் இருந்து 640 வெளிச்சம் ஆண்டுகள் தூரத்தில் உள்ளது. இந்த விண் மீன் கூட்டங்கள்  சிவப்பு நிறத்தில் ராட்சத வடிவிலானவை.

இவற்றின் ஆயுட்காலம் முடியும்போது அவை கூட்டம் கூட்டமாக வெடித்து சிதறும். இவ்வாறு வெடித்து சிதறும்போது வானில் சிவப்பு மற்றும் மஞ்சள் நிறத்தில் அதிசக்தி வாய்ந்த வெளிச்சம் தோன்றும்.


இது மற்றொரு சூரியன் புதிதாக தோன்றியதை போன்ற தோற்றத்தை உருவாக்கும். இச்சம்பவம் இந்த ஆண்டு இறுதியில் ஏற்படும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
அப்படி இல்லாவிட்டால் அடுத்த 10 லட்சம் ஆண்டுகளுக்கு பிறகு தான் உண்டாகும். இந்த தகவலை ஆஸ்திரேலியாவின் தெற்கு குவின்ஸ்லாந்து பல்கலைக் கழகத்தின் இயற்பியல் துறை தலைவர் பேராசிரியர் "பிராட்கார்டர்" தெரிவித்துள்ளார்.

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Bluehost Review