
விண்டோஸ் 95, 98, 2000, எக்ஸ்பி, விஸ்டா, விண்டோஸ் 7 எனப் பல நிலைகளில் ஆப்பரேட்டிங் சிஸ்டங்களை மைக்ரோசாப்ட் தந்தாலும், அவை இயங்கும் வேகம் இன்னும் அதிகமாக இருக்க வேண்டும், சிறிது கூடக் குறையக் கூடாது என்பதுதான் நம் விருப்பமாக எந்தக் காலத்திலும் உள்ளது.
தொடக்கத்தில் உள்ள ஒரு சிஸ்டத்தின் வேகம் போகப் போகக் குறைவது பலருக்கு ஏமாற்றத்தைத் தருகிறது. இதில் இந்த சிஸ்டங்களைப் பயன்படுத்துபவர்களின் கவனக் குறைவும் உள்ளது. அவையும் சேர்ந்தே சிஸ்டத்தின் வேகக் குறைவிற்குக் காரணமாய் அமைந்துள்ளது.
ஒரு சில நடவடிக்கைகளை மேற்கொண்டால் நிச்சயம் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை புயல் வேகத்தில் இயங்க வைக்கலாம் என்பதே உண்மை. அந்த சில நடவடிக்கைகளை இங்கு காணலாம். இந்த நடவடிக்கை குறித்த டிப்ஸ்கள், சிஸ்டம் வடிவமைப்பவர்கள், சிஸ்டம் அட்மினிஸ்ட்ரேட்டர்கள், நெட்வொர்க் அட்மினிஸ்ட்...