
IBM நிறுவனம் மனித மூளையைப் போல் சுற்றுச்சூழலை விளங்கிச் செயற்படும், மற்றும் சிக்கலான விடயங்களை உணர்ந்துகொள்ளும் தன்மையுடன் ஒரு சிப்பினை உருவாக்கியுள்ளது.கடந்த அரை நூற்றாண்டுகளாகக் கணினிகளை நிகழ்ச்சி நிரற்படுத்துவதற்காகவே உருவாக்கப்பட்ட சிப்களிற்குப் பதிலாக இந்தப் பரீட்சார்த்த சிப்பானது புதியதொரு கணினித் தலைமுறையை உருவாக்கப்போகின்றது. இவை ‘அறிவாற்றல் மிக்க கணினிகள்’ என்று அழைக்கப்படுகின்றன.இந்த சிப்கள் SyNAPSE எனும் திட்டத்திற்குள் ஒரு படி முன்னேற்றகரமான செயற்பாடாக உருவாகியுள்ளது. போக்குவரவு வெளிச்சங்களில் தோற்றம், ஒலிகள், நுகர்வுகள் மற்றும் ஆபத்துக்களின் முன்னர் பாதுகாப்பற்ற நிலையை வெளிப்படுத்தவும் கூடிய தன்மை இருப்பதைக் கற்பனைசெய்து பாருங்கள். அல்லது தமது சூழலைப் புரிந்துகொண்டு செயற்படும் சேர்வர்கள், மடிக்கணினிகள், கையடக்கக் கணினிகள்...