April 16, 2010

எலும்புகளுக்குப் பதிலாக…

எலும்பு தேய்மானம் என்பது எல்லா வயதினருக்கும் ஏற்படும் பாதிப்பாக இருந்து வருகிறது. எலும்புகள் தேய்ந்துவிட்டால் உடல் இயக்கம் பெரிதும் பாதிக்கப்படும். இத்தகைய பாதிப்புகளுக்கு சிகிச்சை அளிக்க எலும்புகள் தானமாக கிடைப்பது அரிது.

இதுவரையில் டைட்டானியம் என்ற உலோகம் முலம் எலும்பு மாதிரிகள் செய்யப்பட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு பொருத்தப்பட்டு வந்தது. இது மிகவும் விலை உயர்ந்தது. மேலும் இவற்றில் சில குறைபாடுகளும் உண்டு. 

இந்த நிலையில் உலோகங்களைப் பயன்படுத்தாமல், செயற்கையாகவே எலும்புகளை தயாரித்து பயன்படுத்த முடியும் என்று விஞ்ஞானிகள் நிரு பித்துள்ளனர். ஸ்டெம் செல் முலம் எலும்புகளை வளர்த்து எடுக்கும் முறையில் கொலம்பியா பல்கலைக்கழக ஆய்வாளர்கள் வெற்றி கண்டுள்ளனர். 

ஆய்வகத்தில் சோதனைக் குழாயில் ஸ்டெம் செல் முலம் தாடை எலும்பை அவர்கள் வளர்த்துள்ளனர். இந்த முறையில் எந்த வடிவிலான எலும்பையும் வளர்க்க முடியும் என்று அவர்கள் கூறுகிறார்கள். 

எதிர்காலத்தில் எலும்பு தேய்மான சிகிச்சையில் இந்த முறை புதிய மறுமலர்ச்சியை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வீட்டிலேயே புற்றுநோய் ஸ்கேனர் : இந்தியர் சாதனை

புற்று நோய் மருத்துவ உலகிற்கு சவாலான கொடிய வியாதி. இதன் அறிகுறிகளை கண்டுபிடிப்பது கடினம். இந்த கொடிய வியாதியையும் எளிமையாக பரிசோதிக்க இந்தியர் ஒருவர் நவீன ஸ்கேனரை உருவாக்கி உள்ளார்.

ரத்தப் பரிசோதனை மூலமே எந்த வகையான புற்றுநோயையும் கண்டு பிடித்து விடும் அந்த நவீன ஸ்கேனர். டாக்டர்களிடம்கூட செல்ல வேண்டாம். நீங்களே பரிசோதித்துப் பார்க்கும் வகையில் எளிமையானது, விலை குறைவானது இந்த ஸ்கேனர். 

அசாம் மாநிலத்திலுள்ள வடகிழக்கு குன்றுகள் பல்கலைக்கழக (N.E.H.U) பேராசிரியர் ஆர்.என்.சாரன் இந்த கருவியை வடிவமைத்துள்ளார். பயோ மாலிகுலர் மார்க்கர் எனப்படும் இந்தக் கருவி கையாளுவதற்கு எளிமையானது. தனிநபர்கூட பரிசோதித்துப் பார்க்கலாம். சில துளிகள் ரத்தம் கொடுத்தால் போதும். சிறிது நேரத்தில் பல்வேறு தகவல்களை அட்டவணைப்படுத்தி காட்டிவிடும். 

கருப்பரிசோதனை, நீரிழிவு பரிசோதனை போன்ற சோதனைகளையும் செய்து கொள்ளலாம். இதற்கு 100 முதல் 150 ரூபாய்தான் செலவாகும். 20 ஆண்டுகால முயற்சிக்குப் பிறகு சாரன் இதை உருவாக்கி இருக்கிறார். 

'இந்தியர்களின் அடிப்படை நிலையை உணர்ந்து கொண்டு இதை வடிவமைத்ததாக அவர் பெருமிதம் கொள்கிறார். எளிமையான இந்த ஸ்கேனர் உலகம் முழுவதும் மிகுந்த வரவேற்பை பெறும். வருங்காலத்தில் அதிக எண்ணிக்கையில் புழக்கத்துக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Bluehost Review