மனிதர்களின் கட்டுப்பாடற்றுத் தன்னியக்கமாகவோ அல்லது மனிதர்களின் தொலைக்கட்டுப்பாட்டின் மூலமாகவோ இயங்கும் வானூர்திகளே ஆளில்லா வானூர்திகள் (Unmanned Aerial Vehicles) என்றழைக்கப்படுகின்றன.
பெரும்பாலான ஆளில்லா வானூர்திகள் தொலைக்கட்டுப்பாட்டுக் கருவிகளின் மூலமே இயக்கப்படுவதன் காரணமாக இவ்வகை வானூர்திகள் தொலைக்கட்டுப்பாட்டு செலுத்தி வாகனம் (Remotely Piloted Vehicle) என்றும் அழைக்கப்படுகின்றன. இவ்வகையான வானூர்திகள் இராணுவப் பயன்பாட்டிலேயே பெருமளவிற் காணப்படுகினறன. இவை தாரை (jet) அல்லது தாட்பாழ் (piston) இயந்திரத்தின் மூலம் இயங்குகினறன.
பொதுவாக இவ்வகை வானூர்திகள் அவற்றின் வடிவமைப்பு, அளவு, கட்டமைப்பு மற்றும் குணவியல்புகளிற்கேற்ப வகைப்படுத்தப்படுகின்றன. ஆரம்பகாலங்களிலிருந்து ஆளில்லா வானூர்திகள் தொலைக்கட்டுப்பாட்டுக் கருவிகளின் மூலமாகவே இயக்கப்பட்டுவந்த...