March 11, 2010

ஐபேடுக்கு போட்டியாக மைரோசாப்டின் கூரியர்

ஆப்பிளின் ஐபேடுக்கு போட்டியாக கூகுல் தனது டேப்லட் கம்ப்யூட்டரை களம் இறக்கலாம் என தொழில்நுட்ப உலகில் ஆருஃபம் கூறப்பட்டு வரும் நிலையில் மைக்ரோசாப்ட் தன் பங்குக்கு ஒரு டேப்லட் கம்ப்யூட்டரை அறிமுகம் செய்ய இருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது. மைக்ரோசாப்டின் டேப்லட்ற்கு கூரியர் என பெயரிடப்பட்டுள்ள‌தாக இந்த செய்தியை வெலியிட்டுள்ள ஸ்விட்ச்டு தளம் தெரிவிக்கிறது. ஐபேடை போல் அல்லாமல் இரட்டை திரையோடு அமைந்துள்ள இதனை ஸ்டைலஸ் கொன்டு இயக்கலாம். குறிப்பெடுக்கவும்  புத்த‌கண்க்க‌ளை ப‌டிக்க‌வும் அதிக‌ம் உத‌வ‌க்கூடிய‌ இதில் கேமிராவும் இணைக்க‌ப்ப‌ட்டுள்ள‌தாக‌ தெரிவிக்க‌ப்ப‌ட்டுள்ள‌து.மேலும் கால‌ண்ட‌ர் வ‌ச‌தியும் இணைக்க‌ப்ப‌டுள்ள‌து. இத‌ன் விலையும் ஐபேடை விட‌ குறைவாக‌ இருக்க‌லாம் என்று எதிர்பார்க்க‌ப‌டுகிற‌து.எப்போது வேண்டுமானாலும் இத‌ற்கான‌ அறிவிப்பு...

மார்பகப் புற்றுநோயை தடுக்கும் 'பாகற்காய்'

பாகற்காய் கசப்பானது என்றாலும், பலருக்குப் பிடித்தமான காய்கறி. தற்போது பாகற்காய் தரும் மற்றொரு இனிப்பான செய்தி, இது மார்பகப் புற்றுநோய்க்கு எதிர்ப்பு அரணாக அமையும் என்பது. இந்தக் கண்டுபிடிப்பை நிகழ்த்தியிருப்பவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒரு பெண் விஞ்ஞானி என்பது கூடுதல் மகிழ்ச்சியளிக்கும் விஷயம். மார்பகப் புற்று செல் வளர்ச்சியை பாகற்காய் குறிப்பிட்ட அளவு கட்டுப்படுத்துகிறது, எனவே இது மார்பகப் புற்றுநோய்க்கு எதிராக ஒரு தடுப்பு அமைப்பாகச் செயல்படும் என்பதுதான் புதிய கண்டுபிடிப்பின் சாரம். இந்தக் கண்டுபிடிப்புக்குச் சொந்தக்காரர், அமெரிக்காவின் செயின்ட் லூயிஸ் பல்கலைக்கழக நோயியல் துறை பேராசிரியை ரத்னா ரே. “மார்பகப் புற்றுநோயைத் தடுப்பதற்கு பாகற்காய் சாறை மருந்தாகப் பயன்படுத்த முடியும்” என்கிறார் இவர். ரத்னா ரேயின் இந்தக் கண்டுபிடிப்பு,...

விரைவில் வருகிறது 3டி டி.வி.

சினிமா தியோட்டர்களில் மட்டுமே பார்த்து வந்த 3டி எபக்டை, இனி டி.வி.,யிலும் பார்த்து கொள்ளலாம். இந்த முயற்சியில் தான் தற்போது சாம்சங் மற்றும் பானாசோனிக் நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. இந்நிறுவனங்கள் தயாரித்துள்ள 3டி டி.வி.,க்களை விரைவில் சந்தையில் விட உள்ளன. இதன் விலை 3000 டாலர் வரை இருக்கும் என்று எதிர்பாக்கப் படுகிறது. பானசோனிக் நிறுவனம் வெளியிட உள்ள 3டி டி.வி.,யில், 3 டி கண்ணாடிகள் தரப்படுகின்றன.  இது, தியேட்டர்களில் தரப்படுவதைப் போல பயன்படுத்தியதும் தூக்கியெறியும் ரகமல்ல. இவை அளவில் பெரியதாகவும், ரீசார்ஜ் செய்யக் கூடிய எலெக்ட்ரிக் கண்ணாடிகளாகவும் இருக்குமாம்.  ஹாலிவுட்டில் ஷ்ரெக், அவதார், அலைஸ் இன் வொன்டர்லேண்ட் என பெரும்பாலும் 3 டி படங்கள் வரத் தொடங்கிவிட்டதால் அவற்றுக்கு தொலைக்காட்சி உலகிலும் பெரிய மார்க்கெட்டை ஏற்படுத்த வேண்டிய...

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Bluehost Review