September 19, 2010

பிரபஞ்சத்தை உருவாக்கியவர் கடவுள் அல்ல இயற்பியலே : ஸ்டீபன் ஹாக்கிங்

இந்த பிரபஞ்சத்தை உருவாக்கியது கடவுள் அல்ல, இயற்பியல்ன் கோட்பாடுகளின் விளைவுகளே காரணம் என்று கூறியுள்ளார் உலகப் புகழ் பெற்ற இங்கிலாந்து இயற்பியலாளர் பேராசிரியர் ஸ்டீபன் ஹாக்கிங். Muscular dystrophy எனும் உடலியல் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவரான ஹாக்கிங், விண்வெளியியல் ஆய்வுக்கு ஆற்றிய சேவை மிகப் பெரியது. பிளாக் ஹோல்ஸ் குறித்த இவரது ஆய்வு மிகப் பெரியது. இவர் எழுதிய 'த பிரீப் ஹிஸ்டரி ஆப் டைம்' என்ற புத்தகம் மிகப் பிரபலமானது.பிரபஞ்சம் உருவானதற்குக் காரணமான பிங் பாங் குறித்த கருத்தையும் மற்றும் அதற்கு முந்தைய காலகட்டத்தையும் இதில் அவர் விளக்கியுள்ளார்.இங்கிலாந்தின் சன்டே டைம்ஸ் இதழின் சிறந்த புத்தக வரிசையில் தொடர்ந்து 237 வாரங்கள் முதலிடத்தில் இருந்து சாதனை படைத்தது இந்தப் புத்தகம். தற்போது ஹாக்கிங் புதிய தகவலை வெளியிட்டுள்ளார். அது இந்த பிரபஞ்சததை கடவுள் உருவாக்கவில்லை. மாறாக, இயற்பியலின் விதிகளே...

பெண்களுக்கும் வரும் நோய்கள் என்னென்ன?

பெண்களுக்கும் வரும் இதய நோய்களை கீழ்கண்ட வகையில் பிரிக்கலாம். 15 முதல் 25 வயது வரை: 15 வயது பெண்களுக்கு பெரும்பாலும், உடலில் ஹார்மோன் மாற்றத்தினாலும், பூப்பெய்து விட்ட பயமும், எதிர்கால படிப்பு, வாழ்வு பற்றிய சிந்தனைகளால் படபடப்பு, மூச்சிரைப்பு, மயக்கம் போன்றவை தோன்றும்.இவற்றை எளிதில் குணப்படுத்தலாம். 10 சதவீதம் பேருக்கு இதயத்தில், “மைட்டிரல் வால்வு புரலாப்ஸ்’ ஆகலாம். கிராமப்புற, ஏழ்மை நிலையிலுள்ள இளம் பெண்களுக்கு, “மைட்டிரல் ஸ்டினோசிஸ்’ என்ற வால்வு நோய் இருக்கலாம். பெரும்பாலும் குடும்ப, சமூக ரீதியாக குழப்பத்தால் ஏற்படும் விளைவுகள் இவை.25 முதல் 45 வயது வரை: திருமணம் செய்தவுடன் புகுந்த வீட்டில் ஏற்படும் கலாசார குடும்ப சூழ்நிலை மாற்றத்தினால் ஏற்படும் மனமாற்றம் பயம், வெறுப்பு, படப்படப்பு ஏற்பட்டு, நாளடைவில் ரத்த அழுத்தம் ஏற்படலாம். வேலை செய்யும்...

முதல் பார்வையிலே காதல் வருமா?

பார்த்தவுடன் காதல் பற்றிக் கொண்டதாக பலரும் கூறுகிறார்கள். இப்படி முதல்பார்வையிலேயே காதல் வந்துவிடுமா? அப்படி வந்தால் அது காதல்தானா? ஒருவரது தோற்றம்தான் நம்மை முதலில் ஈர்க்கும். ஏனெனில் நமது பார்வைக்கு முதலில் தோன்றுவது அவரது உருவம்தான். அவரது அழகு, நடை, உடை, பாவனைகள் இவற்றைத்தான் நாம் முதலில் பார்க்கிறோம். அது பிடித்திருந்தால் பார்த்த மாத்திரத்திலேயே அவர் நம்மை ஈர்த்து விடுவார். அப்படி பிடித்து போய்விட்டால் உங்கள் பார்வை அவரைத் துரத்துவதுபோல ஆர்வத்தோடு பார்க்கும். குளுமை வீசி கவர்ந்திழுக்க முயற்சிக்கும். இந்த பார்வையை எதிர்கொள்ளும் ஆணோ, பெண்ணோ யாராக இருந்தாலும் அவர்களுக்குள்ளும் உங்களை பற்றிய ஒரு அபிப்பிராயம் எழுவதும் இயல்பே. அதை அவர் எடுத்துக் கொள்ளும் விதத்தில்தான் உங்களது காதல் அரும்புவதும், கருகுவதும் இருக்கிறது. பார்வையில் பலவிதம் இருக்கிறது....

ரோபோடிக் துறையில் புதிய புரட்சி: இலத்திரனியல் தோல்

தொடுகையை உணரக்கூடிய இலத்திரனியல் தோலினை கலிபோர்னிய பேர்கலி பல்கலைக்கழக உயிரியல் விஞ்ஞானிகள் குழுவொன்று உருவாக்கியுள்ளது. மேற்படி இலத்திரனியல் தோலானது எந்திரனியல் (ரோபோடிக்) மற்றும் உறுப்பு மாற்று சிகிச்சைகளில் புதிய அத்தியாயமொன்றை உருவாக்குமென தெரிவிக்கப்படுகின்றது. தற்போது ஆய்வுகூட பரிசோதனை அளவிலேயே இருக்கும் மேற்படி தோலானது, மனித தோலைப் போன்று மிக வேகமாக தொடுகைகளை உணர்வதாக தெரிவிக்கப்படுகின்றது. அமுக்கத்தை உணரக் கூடிய உயர் உணர்திறனை கொண்டமையே இதற்குக் காரணம் எனக் கூறப்படுகிறது. இலத்திரனியல் தோலானது சிலிக்கோன், நெனோ வயர்கள் மற்றும் ஜேர்மானியம் என்பவற்றால் ஆக்கப்பட்டுள்ளது. மேலும் நெனோ ஸ்கேல் ட்ரான்ஸ்சிஸ்டர் மற்றும் இலகுவான இறப்பர் என்பனவும் இதில் உபயோகப்படுத்தப்பட்டுள்ளன. இதனை மிகவும் மலிவாக உருவாக்க முடியுமெனவும், இதன் இயக்கத்திற்கு மிகக் குறைந்த அளவிலான மின்சக்தியே ( வோல்டேஜ்) தேவையெனவும்...

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Bluehost Review