7500 வருடங்களுக்கு முன்னர் பூமியில் வாழ்ந்ததாக கருதப்படும் இராட்சத 'எருது'னுடைய மண்டையோடும் பாக எலும்புகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
சாதாரன மனிதனின் உயரத்தை விட (6 அடிக்கு மேல்) பெரிதாக தோற்றமளிக்கும் எருது வகையை சேர்ந்த இவ்விலங்குகள், பிரித்தானியா, மற்றும் சுற்றுப்புற சூழலில் 7500 வருடங்களுக்கு முன்னர் வாழ்ந்ததாகவும், சுமார் 4000 வருடங்களுக்கு முன்னர்
அழிந்து போனதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அழிந்து போனதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இவ் எலும்புக்கூடுகள் நல்ல நிலைமையில், இவ்வளவு நாள் இருந்து வந்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளதாக புருடோவினை மையமாக கொண்டியங்கும், சுற்றுப்புற சூழல் ஆராய்சி நிலையத்தின், இயக்குனர் ரியான் மோலி தெரிவித்துள்ளார்.
'ஔரோச்' என இவ்விலங்குகள் அழைக்கப்படுகின்றன. கண்டுபிடிக்கப்பட்ட எலும்புகளின் ரேடியோ காபன் வெளிப்பாடுகளினை ஆராய்ந்ததன் மூலம் 5670-5520 BC காலப்பகுதியில் இவை வாழ்ந்திருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது. இவ்விலங்குகள் அக்காலத்தில் வாழ்ந்த மனிதர்களினால் இரவு நேர உணவுக்காக வேட்டையாடப்பட்டிருக்கலாம் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
தற்சமயம், நியூகாஸ்ட்டில் பிரதேசத்தில் அமைந்திருக்கும் நூதனசாலைக்கு இவ் ஔரோச்களின் மண்டயோடுகள் எடுத்துச்செல்லப்பட்டுள்ளன.
ஏற்கனவே பிரித்தானியாவின் நோர்த் அம்பேர்லேண்ட் பிரதேசத்தில் இரு இராட்சத சிவப்பு நிறக்கரடிகளின் எலும்புகளும் கண்டுபிடிக்கப்பட்டிருந்தமையினால், ஔரோச்களின் புதிய கண்டுபிடிப்புக்கள், அக்காலத்தில் பூமியில் வாழ்ந்த இராட்சத விலங்குகள் பற்றிய ஆய்வில் புதிய திருப்பத்தினை கொண்டு வந்திருப்பதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.