2013ஆம் ஆண்டு முதல் ஆகாயத்தில் பறந்தபடி பூமியையும், தினமும் உதிக்கும் சூரியனின் அழகையும் பார்த்து ரசிக்க முடியும்.

பூமியின் கடைசி வளைவு பகுதியை ஹீலியம் நிரப்பப்பட்ட பலூன் கலத்தில் இருந்து பார்த்து ரசிக்கலாம். இப்படி பயணம் செய்பவர்கள் சூரிய உதயத்தை பார்க்கும் முதல் மனிதர்களாகவும் இருப்பார்கள்.
பூமிக்கு மேல் 22 மைல் பயணம் செய்பவர்கள் செல்லும் கலம் 2 பைலட்டுகள் மற்றும் 4 பயணிகள் அமரும் வகையில் உள்ளது. இந்த கலத்துடன் 423 அடி விட்டம் கொண்ட ஹீலியம் பலூனும் இணைக்கப்பட்டு இருக்கும்.
ஹீலியம் காற்று ஒரு பொருளை உயரத்தில் கொண்டு செல்லக்கூடிய தன்மை படைத்தது ஆகும். இந்த கலத்திற்கு ப்ளூன் என்ற பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த கலம் விண்வெளி பகுதியை அடைய ஒரு மணி நேரம் ஆகும்.
அதன் பின்னர் 3 மணி நேரம் பூமிக்கு மேல் பயணம் செய்த பின்னர் மீண்டும் அது திரும்பும். இந்த ஹீலியம் கலத்தை ஸ்பெயின் தொழிலதிபர் ஜோஸ் மரியானோ லோபஸ் உருவாக்கி உள்ளார்.