December 24, 2009

மேப் மற்றும் ப்ரொஷக்டர் இணைந்த கருவி : வெளிநாடுகளுக்கு செல்பவர்களுக்கு முக்கியமானது

நண்பர் அல்லது உறவினர் வெளிநாட்டில் இருந்தால் அவர்களை பார்க்க செல்லும் போது யாராவது விமான நிலையத்திற்க்கு வந்து நம்மை அழைத்து செல்வது வழக்கம். ஆனால் இனி அது தேவையில்லை. நீங்கள் எங்கு சென்றாலும் அவர்களின் வீட்டை எளிதாக கண்டுபிடிக்கலாம். எப்படி என்று பார்ப்போம் மேப் மற்றும் ப்ரொஷக்டர் இணைந்த கருவி ஒன்று புதிதாக வரவிருக்கிறது. பார்ப்பதற்கு நாம் பயன்படுத்தும் பென் டிரைவ் போன்று இருக்கும். இதில் நாம் எந்த நாட்டிற்கு எந்த இடத்திற்கு போக வேண்டும் என்பதை இதில் இருக்கும் மேப்பில் சேமித்து வைத்து நாம் எந்த இடத்திற்கும் செல்லலாம் அதுவே வழிகாட்டும் ப்ரொஷக்டர் மேப் -ஐ பெரிதுபடுத்திக்காட்டும். போகும் வழியை அடிக்கடி சரிபார்த்துக்கொள்ளலாம் எற்கனவே நாம் குறித்து வைத்த இடத்திற்கு செல்ல வேண்டிய பாதையை அம்புக் குறியிட்டு காட்டும். இதன் பின்னனியை கொஞ்சம் ஆராய்ந்து...

பறக்கும் பட்டத்திலிருந்து பிறப்பிக்கப்படும் மின்சாரம் : புதிய கண்டுபிடிப்பு

காற்றின் சக்தியைச் சரியாகப் பயன்படுத்தினால் உலகின் மின்தேவையைவிட 100 மடங்கு அதிக மின்சாரத்தை உற்பத்தி செய்யமுடியும் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். காற்றைக்கொண்டு மின்சாரம் பிறப்பிப்பதற்கு காற்றாலைகளை அமைத்து காற்றாடிகள் மூலமே (Wind turbines) இதுவரை காலமும் மின்சாரம் பெறப்பட்டு வருகிறது. புவி மேற்பரப்பிலிருந்தான உயரம் அதிகரிக்கும்போதே காற்றின் வேகம் அதிகரித்து பெறக்கூடிய மின்சாரமும் அதிகரிக்கும். ஆனால் அவ்வளவு உயரத்துக்கு காற்றாடிகளை அமைப்பது என்பது முடியாத காரியம். எனவேதான் புவி மேற்பரப்பிலிருந்து அதிக உயரத்தில் இருக்கும் காற்றின் சக்தியை பயன்படுத்துவதற்காக பட்டத்தைப் பயன்படுதும் புதிய முறை ஒன்றைக் கண்டுபிடித்துள்ளார்கள். இதற்கு Kitegen எனப் பெயரிட்டுள்ளார்கள். பட்டத்தை மேலே பறக்கச்செய்வதற்கு இரு பெரிய சுழல்விசிறிகளோடு பிரத்தியேகமாக...

உலகின் மிகப் பெரிய திரை கொண்ட முதல் தரமான மொபைல்

எச்.டி.சி. நிறுவனத்தின் அதி நவீன தொழில் நுட்பத்துடன், அனைத்து வசதிகளையும் தரும் வகையில் மிகச் சிறப்பான மொபைலாக எச்.டி.2 மொபைல் வெளிவந்துள்ளது. விண்டோஸ் இயக்கத்தில் புதியமுறை டச் போனாக வடிவமைக்கப்பட்டு, நாம் இதுவரை மொபைல் ஒன்றில் பெறத் துடித்த அனைத்து அனுபவங்களையும் தருவதாக இந்த மொபைல் உள்ளது. 2009 ஆம் ஆண்டின் மிகச் சிறந்த போனாக எச்.டி.சியின் எச்.டி.2 (HTC HD 2)தேர்ந்தெடுக்கப்படும் வாய்ப்பு உள்ளது. முதலில் நம்மை ஆச்சரியப்படுத்துவது இதுவரை நாம் காணாத 4.3 அங்குல அகல டச் சென்சிடிவ் திரை. கெபாசிடிவ் டச் என அழைக்கப்படும் தொழில் நுட்பம் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் ப்ராசசிங் வேகம் 1 கிகா ஹெர்ட்ஸ் என்பதால், மிக மென்மையாகத் திரையைத் தொட்டாலே, அதற்கான செயல்பாடு உடனடியாக மேற்கொள்ளப்படுகிறது. எச்.டி.சி. நிறுவனத்தின் தாரக மந்திரமான “இது என்னுடையது;...

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Bluehost Review