April 09, 2010

துபையில் குளோனிங் ஒட்டகம் உருவாக்கம்

துபையில் உள்ள குளோனிங் ஆய்வகத்தில் ஒட்டகம் உருவாக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு இந்த மையத்தில் முதலாவது ஒட்டகம் குளோனிங் முறையில் உருவாக்கப்பட்டது. தற்போது இரண்டாவது ஒட்டகம் உருவாக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

ஆண் ஒட்டகமாக உருவாக்கப்பட்ட இதற்கு பின் செகான் என பெயர் சூட்டப்பட்டுள்ளது. 

இது பிப்ரவரி 23-ம் தேதி அதிகாலை 3 மணிக்கு உருவாக்கப்பட்டதாக ஆய்வக விஞ்ஞானிகள் தெரிவித்தனர். சுமார் 383 நாள்களுக்குப் பிறகு இது உருவானது. காளை மாடு ஒன்றின் செல் மூலம் இந்த ஒட்டகம் உருவாக்கப்பட்டுள்ளது. 

முதல் முறையாக உயிருடன் உள்ள ஒரு விலங்கின் செல்லிலிருந்து குளோனிங் முறையில் ஒட்டகம் உருவாக்கப்பட்டுள்ளது இதுவே முதல் முறையாகும். இதற்கு முன்னர் கடந்த ஆண்டு இறந்த ஒட்டகத்தின் கரு செல் மூலம் ஒட்டகம் உருவாக்கப்பட்டது. அப்போது பெண் ஒட்டகம் உருவானது. இதற்கு இன்ஜாஸ் என பெயரிடப்பட்டுள்ளது. இந்த ஒட்டகம் நலமுடன் உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்தனர். 

தோல் செல் மூலம் கரு உருவாகி அதன் மூலம் ஒட்டகம் குளோனிங் முறையில் எளிதாக உருவாக்கப்பட்டதாக இம்மையத்தில் உள்ள விஞ்ஞானிகள் தெரிவித்தனர். 

துபையில் உள்ள குளோனிங் ஆய்வு மையம் (சிஆர்சி) 21 ஆண்டுகளுக்கு முன் உருவாக்கப்பட்டது. இம்மையம் 2008-ம் ஆண்டு கரு நுண்ணுயிரி பெருக்கம் மூலம் இரட்டை ஒட்டகக் குட்டிகளை உருவாக்கி சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.

மனிதர்கள் நிலவில் குடியேறலாம் : இஸ்ரோ விஞ்ஞானி

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு, நிலாவுக்கு சந்திரயான்-1 விண்கலம் அனுப்பி வைக்கப்பட்டது. அது, நிலாவில் தண்ணீர் இருப்பதை ஏற்கனவே கண்டுபிடித்தது.

இந்நிலையில், நிலவின் மேற்பரப்புக்கு அடியில் குழிவான சுரங்கப்பாதைகள் இருப்பதை சந்திரயானில் உள்ள இந்திய கேமரா படம் பிடித்துள்ளது. எரிமலை வெடித்ததால் `லாவா' எனப்படும் எரிமலைக்குழம்பு வெளியானதை தொடர்ந்து, இந்த சுரங்கப்பாதைகள் உருவானதாக தெரிய வந்துள்ளது. 

இந்த சுரங்கப்பாதைகளில், எதிர்காலத்தில் மனிதர்கள் வசிக்கும் வாய்ப்பு இருப்பதாக, ஆமதாபாத்தில் உள்ள இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் மூத்த விஞ்ஞானி டாக்டர் ரங்கநாத் ஆர்.நவல்குண்ட் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, விஞ்ஞானிகள் மேலும் ஆய்வு செய்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

நின்ற இதயம் மீண்டும் இயங்குமா?

பொதுவாக மாரடைப்பால் பாதிக்கப்படுபவர்களின் உடல் குளிர்ந்து விடும். அதன்பிறகு அவர்களின் இதயத்துடிப்பு அடங்கி உயிர் இழந்து விடுவார்கள்.
தற்போது அப்படி நின்ற இதயத்தையும் மீண்டும் இயக்க வைக்க முடியும், அதனால் ஒருவரை உயிர் பிழைக்க வைக்க முடியும் என்று நிரூபித்துள்ளனர். 

மாரடைப்பு ஏற்பட்டவுடன், பாதிக்கப்பட்ட நபரின் மூக்கின் வழியாக `ரினோசில்’(இது பேட்டரியால் இயங்கக் கூடியது) என்ற புதிய கருவியின் மூலம் மூளையில் சிறிய அளவில் குளிர்ச்சியை ஏற்படுத்தி நின்ற இதயத்தை மீண்டும் இயக்க வைத்தனர். 

இந்த மருத்துவ ஆராய்ச்சியை ஸ்டாக்ஹோமை சேர்ந்த மருத்துவ பேராசிரியர் மாரட்கேஸ்டிரன் மற்றும் அவரது குழுவினர் மேற்கொண்டனர்.
ஐரோப்பாவில் உள்ள 14 ஆஸ்பத்திரிகளில் மாரடைப்பால் பாதிக்கப்பட்டு அனுமதிப்பட்டிருந்த 200 பேரிடம் ஆராய்ச்சி நடத்தப்பட்டது. இவர்களில் 182பேர் உயிர் பிழைத்தனர். அப்படி உயிர் பிழைத்தவர்களில் 83பேர் 66 வயது முதல் 71வயது உடையவர்கள்!

முடங்கிப் போகும் கம்ப்யூட்டர்களுக்கு வைத்தியர் ஏவிஜி ரெஸ்க்யூ

கம்ப்யூட்டர் பயன்படுத்தும் பலரும், கம்ப்யூட்டர் கிராஷ் ஆனவுடன் தான், அடடா எதிர்பார்க்க வில்லையே இப்படி ஆகும் என்று எண்ணுகிறார்கள்.

இது போன்ற எமர்ஜென்சி நேரத்தில் பயன்பட பூட் சிடி தயாரித்து வைக்கும்படி கம்ப்யூட்டர் மலரில் கூட எழுதி இருந்தார்களே என்று அங்கலாய்க்கிறார்கள். நண்பர்களுக்கு போன் போட்டு கேட்கிறார்கள். ஒன்றும் முடியாத நிலையில் ஏதோதோ செய்து இறுதியில் ரீ பார்மட் அல்லது விண்டோஸ் ரீ இன்ஸ்டலேஷன் அளவிற்குப் போகிறார்கள். 

கம்ப்யூட்டர் ஒரு டிஜிட்டல் இயந்திரம். எந்த நேரமும் அது முடங்கிப் போகும் என்பதே உண்மை. சரி, ஊதுகிற சங்கை ஊதி வைப்போம் என்ற கதையாக இதோ இன்னும் ஒரு காப்பாற்றும் சிடி தயார் செய்திடும் தகவலை இங்கு தருகிறேன்.

இதன் பெயர் ஏவிஜி ரெஸ்க்யூ சிடி. ஆம், நமக்கெல்லாம் இலவசமாக ஆண்ட்டி வைரஸ் தரும் ஏவிஜி நிறுவனமே இதனையும் தருகிறது. இதுவும் இலவசமே.
இந்த ரெஸ்க்யூ சிடி வைரஸ் பாதிப்பினால் முடங்கிப் போகும் கம்ப்யூட்டர்களுக்கு ஒரு சிறந்த டாக்டராக இயங்குகிறது. அது மட்டுமின்றி சிஸ்டம் அட்மினிஸ்ட்ரேட்டர்கள் மற்றும் ஐ.டி. நிர்வாகிகளுக்கும் உதவுகிறது. 

இதன் மூலம் சிஸ்டம் நிர்வாகம் செய்திடலாம், வைரஸ் மற்றும் ஸ்பைவேர்களால் பாதித்த கம்ப்யூட்டர்களை மீட்கலாம். எம்.எஸ். விண்டோஸ் மட்டுமின்றி, லினக்ஸ் சிஸ்டங்களையும் மீட்கலாம். யு.எஸ்.பி. ஸ்டிக் அல்லது சிடி வழியாக கிளீன் பூட் ஒன்றை மேற்கொள்ளலாம். 

இந்த ரெஸ்க்யூ சிடி என்பது லினக்ஸ் மூலம் வழங்கப்படும் இலவச போர்ட்டபிள் ஏவிஜி ஆண்ட்டி வைரஸ் தொகுப்பாகும். உங்களுடைய சிஸ்டம் பொதுவான வழிகளில் பூட் ஆகாத போது, இந்த சிடியைக் கொண்டு பூட் செய்திடலாம். அத்துடன் வைரஸ் பாதித்த கம்ப்யூட்டரைக் குணப்படுத்தி, வைரஸ்களை நீக்கும். இந்த வசதிகளைத் தருவதோடு கீழ்க்காணும் கூடுதல் செயல்பாடுகளையும் இது தருகிறது.

இரண்டு பேனல்களில் பைல் மேனேஜர் வசதி,எளிய விண்டோஸ் ரெஜிஸ்ட்ரி எடிட்டர் ஹார்ட் டிரைவ் ரெகவரி டெஸ்ட் டிஸ்க் ஆகச் செயல்பாடு நெட்வொர்க் (சர்வர், டொமைன், ஐபி முகவரி போன்றவை)வசதிகளைக் கண்டறியும் வசதி, 

இதனைப் பயன்படுத்த 512 எம்பி ராம் மெமரி, இன்டல் பெண்டியம் 300 எம்.எச்.இஸட் ப்ராசசர் இருந்தால் போதுமானது. விண்டோஸ் 2000க்குப் பின் வந்த அனைத்து விண்டோஸ் இயக்கங்கலிலும் செயல்படும்.

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Bluehost Review