April 09, 2010

துபையில் குளோனிங் ஒட்டகம் உருவாக்கம்

துபையில் உள்ள குளோனிங் ஆய்வகத்தில் ஒட்டகம் உருவாக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு இந்த மையத்தில் முதலாவது ஒட்டகம் குளோனிங் முறையில் உருவாக்கப்பட்டது. தற்போது இரண்டாவது ஒட்டகம் உருவாக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

ஆண் ஒட்டகமாக உருவாக்கப்பட்ட இதற்கு பின் செகான் என பெயர் சூட்டப்பட்டுள்ளது. 

இது பிப்ரவரி 23-ம் தேதி அதிகாலை 3 மணிக்கு உருவாக்கப்பட்டதாக ஆய்வக விஞ்ஞானிகள் தெரிவித்தனர். சுமார் 383 நாள்களுக்குப் பிறகு இது உருவானது. காளை மாடு ஒன்றின் செல் மூலம் இந்த ஒட்டகம் உருவாக்கப்பட்டுள்ளது. 

முதல் முறையாக உயிருடன் உள்ள ஒரு விலங்கின் செல்லிலிருந்து குளோனிங் முறையில் ஒட்டகம் உருவாக்கப்பட்டுள்ளது இதுவே முதல் முறையாகும். இதற்கு முன்னர் கடந்த ஆண்டு இறந்த ஒட்டகத்தின் கரு செல் மூலம் ஒட்டகம் உருவாக்கப்பட்டது. அப்போது பெண் ஒட்டகம் உருவானது. இதற்கு இன்ஜாஸ் என பெயரிடப்பட்டுள்ளது. இந்த ஒட்டகம் நலமுடன் உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்தனர். 

தோல் செல் மூலம் கரு உருவாகி அதன் மூலம் ஒட்டகம் குளோனிங் முறையில் எளிதாக உருவாக்கப்பட்டதாக இம்மையத்தில் உள்ள விஞ்ஞானிகள் தெரிவித்தனர். 

துபையில் உள்ள குளோனிங் ஆய்வு மையம் (சிஆர்சி) 21 ஆண்டுகளுக்கு முன் உருவாக்கப்பட்டது. இம்மையம் 2008-ம் ஆண்டு கரு நுண்ணுயிரி பெருக்கம் மூலம் இரட்டை ஒட்டகக் குட்டிகளை உருவாக்கி சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Bluehost Review