March 31, 2010

செவ்வாய் கிரகம் செல்லத் தயார்..

விண்வெளி ஆய்வில் பல்வேறு உலக நாடுகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றன. குறிப்பாக சீனாவும் இந்தியாவும் நிலவுப்பயணத்தில் அதிக கவனம் செலுத்துகின்றன. இந்த நிலையில் அமெரிக்கா, ரஷியா நாடுகள் சிவப்பு கிரகம் என்று அழைக்கப்படும் செவ்வாய் கிரகத்தை ஆராய்வதில் தீவிரம் காட்டுகின்றன. ஏற்கனவே அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு நிலையம் செவ்வாய் கிரகத்துக்கு ஆய்வுக் கலங்களை அனுப்பி உள்ளது. இந்த கலங்கள் அங்கு பல்வேறு ஆய்வுகளை செய்து தகவல்களை அனுப்பி வருகிறது.  இந்த தகவல்களின் அடிப்படையில் அடுத்த கட்டமாக செவ்வாய் கிரகத்துக்கு விண்வெளி வீரர்களை அனுப்பி ஆய்வு செய்யப்போகிறார்கள். இவர்கள் அங்கு தங்கி இருந்து பல்வேறு ஆய்வுப்பணிகளில் ஈடுபடப் போகிறார்கள். இந்த பயணத்துக்கு வீரர்களை தயார் செய்யும் பணிகள் ரஷியாவில் உள்ள விண்வெளி ஆய்வு நிலையத்தில் நடந்து வருகிறது.  ...

கணினிக்கு ரீஸ்டோரேஷன் அவசியமா? : ஓர் அலசல்

பொதுவாக விண்டோஸ் இயங்குதளங்களை பயன்படுத்த துவங்கிவிட்டாலே வைரஸ் தாக்கம்,இயங்குதளம் Crash ஆவது போன்ற பிரச்சனைகள் எப்போது எழும் என்றே கூறமுடியாது. “நேற்றிரவு கூட நன்றாக தானே கணினியை இயக்கினேன் ஆனால் இன்று காலையில் கணினி மக்கர் பண்ணுதேன்னு” நம்மில் எத்தனை பேர் புலம்புவோம் அல்லவா?இதுபோன்று விண்டோஸ் செயலிழந்து மக்கர் பண்ணும் போது தான் இந்த ரீஸ்டோரேஷனின் அவசியம் நமக்கு தெரிய வரும்.  ரீஸ்டோரஷன் என்றால் என்ன?  கணினி நல்ல நிலையில் இயங்கிக்கொண்டு இருக்கும்போது அதனை பேக்-அப் செய்து இதர பார்ட்டிஷனில் சேமித்து, கணினி மக்கர் செய்யும்போது சேமித்த கணினியின் பேக்-அப்பை கொண்டு கணினியின் இயல்பு நிலைக்கு கொண்டு வருவதே ரீஸ்டோரேஷன் ஆகும். இன்றைய பதிவில் நாம் அதனை பற்றிதான் விபரமாக அறிந்து கொள்ள இருக்கின்றோம். பொதுவாக கணினியை இரண்டு வகையாக பிரிப்போம்...

நோயைக் குணமாக்கும் ரிங்டோன்கள்

விதவிதமான ஒலிகள் கொண்ட மொபைல் ரிங்டோன்களுக்கு இடையே புதுமையாக வந்திருக்கிறது நோயைக் குணமாக்கும் ரிங்டோன்கள். ஜப்பான் நாட்டின் 'மாட்சுமி சுசுகி' என்ற நிறுவனத்தின் ரிங்டோன் தயாரிப்பாளர்கள் நீண்ட கால ஆய்வுக்குப் பிறகு இதை வடிவமைத்துள்ளனர். பலவிதமான அலைவரிசையில் இதமான இசைக்கருவிகளின் ஒலிகள் மற்றும் பறவைகளின் சப்தம் போன்ற இயற்கை ஒலிகளைக் கொண்டு  இந்த ரிங்டோன்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இதைக் கேட்பவர்கள் சோகமாய் இருந்தாலும் சுறுசுறுப்படைகிறார்கள். சோம்பலாய் இருந்தால் குதூகலம் அடைகிறார்கள். தாலாட்டு கேட்பதுபோல விரைவில் தூக்கம் தூண்டப்ட்டு நிம்மதியாக உறங்குகிறார்கள். ஜப்பானில் தற்போது அறுவடைக்காலம். இதனால் ஏற்படும் வைக்கோல் மற்றும் தூசு அழற்சியை இந்த ரிங்டோன்கள் கட்டுப்படுத்துகிறது. வேலைக் களைப்பால் பொலிவிழக்கும் தொழிலாளர்களின் முகங்களையும் இந்த ரிங்டோன்கள் கிளர்ச்சி பெறச் செய்கின்றன. எனவே இந்த...

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Bluehost Review