November 11, 2009

நானோ தொழில் நுட்பத்தினால் மரணத்தை வெல்ல முடியும்

இன்னும் 20 ஆண்டுகளில், நானோ டெக்னாலஜியின் மூலம் மனிதன் மரணமடையாத நிலையை அடைய முடியும், என பிரிட்டன் விஞ் ஞானி தெரிவித்துள்ளார்.தற்போது எந்த துறையை எடுத்தாலும், நானோ டெக்னாலஜி பற்றி பேசப்படுகிறது. இந்த தொழில்நுட்பத்தின் மூலம் மருத்துவத்துறையில் பல்வேறு சாதனைகள் படைக்கப்படுகின்றன.இதே தொழில்நுட்பத்தை பயன்படுத்தி நமது உடலில் பழுதடையும் பாகத்தை மாற்றியமைக்க செய்ய முடியும். இதன் மூலம் நமக்கு வயோதிகம் ஏற்படுவதை தடுக்கவும் முடியும்.முடிவில் மரணமே ஏற்படாமல் செய்யவும் முடியும், என்கிறார் பிரிட்டன் விஞ்ஞானி ரே குர்ஸ்வீல்.ரத்தத்தில் உள்ள செல்களின் பரப்பளவு கொண்ட "நானோ போட்' என்ற பொருள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.இந்த நானோபோட்டை பயன்படுத்தி கட்டியை அழிக்கலாம்; உடம்பில் துளையிடாமலேயே அறுவை சிகிச்சை செய்யலாம்; ரத்தம் உறைவதை தடுக்கலாம்.இதே தொழில்நுட்பத்தை பயன்படுத்தி...

Cookies என்றால் என்ன?

பல வினாக்கள் கொண்ட ஒரு இணையதளத்தைப் பார்வையிடுகிறீர்கள். முதல் வினா முதல் பக்கத்திலும் இரண்டாவது மூன்றாவது வினாக்கள் அடுத்தடுத்த பக்கங்களிலுமுள்ளதாக வைத்துக் கொள்வோம்.இரண்டாவது பக்கதிற்குச் செல்லும்போது முதல் பக்கத்தில் இருந்த கேள்விக்கான விடையைத் தெரிவு செய்தவரே இரண்டாம் பக்கத்தை தற்போது பார்வையிடுகிறார் என்பதை அந்த இணைய தளம் சேமிக்கப்பட்டுள்ள வெப் செர்வர் அறிந்து கொள்கிறது.இவ்வாறு பல இணைய பக்கங்களிலுள்ள கேள்விகளுக்கு பதிலளித்த பின்னர் கடைசியாக அனைத்து விடைகளுக்குமான புள்ளிகளை மொத்தமாக சொல்லி விடுகிறது அந்த இணைய தளம். இது எவ்வாறு சாத்தியம்?மேற் சொன்ன செயற்பாட்டின் போது வெப் சேர்வருக்கு உதவுகிறது நமது கணினியில் சேமிக்கப்பட்டிருக்கும் ஒரு சின்னஞ் சிறிய டெக்ஸ்ட் பைல். இதனையே குக்கீ எனப்படுகிறது.சில இணைய தளங்களைப் பார்வையிடும்போது அந்த வெப் சேர்வர்...

சரியாக தூங்காவிட்டால் மூளையை பாதிக்கும்

தொழில் சம்பந்தமான பணிகளால் இரவில் நன்றாக தூங்கவில்லையா? இரவில் வெகுநேரம் கண்விழித்து படிக்கிறீர்களா? இது பிற்காலத்தில் ஆபத்தை ஏற்படுத்தும் என்று மருத்துவ ஆய்வு தெரிவிக்கிறது.மூளையின் நுட்பமான பகுதிகளின் செயல்பாடுகள் குறித்து அமெரிக்க வாஷிங்டன் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் ஆய்வு நடத்தினார்கள்.எலிகளை நீண்ட நேரம் தூங்க விடாமல் செய்து அவற்றின் மூளை செயல்பாடுகள் எப்படி இருக்கின்றன என்று ஆய்வு செய்தனர்.அப்போது எலியின் மூளையில் தசைகள், பீட்டா செல்கள் பாதிக்கப்பட்டன. இதன்மூலம் “அல்சிமர்” நோய் ஏற்படுவதும் தெரிகிறது.எனவே இரவில் சரியாக தூங்காவிட்டால் மூளையை பாதிக்கு...

இணையத்தில் காதல் தேடல்

எல்லோரும் இண்டெர்நெட்டில் பழைய காதலிகளையும் காதலன்களையும் தேடிக்கொண்டிருப்பதாக சமீபத்திய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.ஆஸ்க்ஜீவ்ஸ் தேடியந்திரம் சார்பில் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.இந்த ஆய்வின் படி இண்டெர்நெட் பய‌ன்ப‌டுத்துபவர்களில் பாதிபேர் தஙளுடைய முன்னாள் காதலன்/காதலிகளை தேடுகின்றனராம்.ஃபேஸ்புக் ,டிவிட்டர் போன்ற வலைப்பின்னல் தளங்களின் மூலம் அந்தரங்க விவரங்களை பகிர்ந்து கொள்வதும் நண்பர்களை தேடுவதும் சுலபமாக இருக்கிறது.தொடர்பு விட்டுப்போன பழைய நண்பர்களை தேடவேண்டும் என்றால் இந்த தளங்களை பயன்படுத்திக்கொள்ளலாம்.இதே போல‌வே ப‌ல‌ரும் த‌ங்க‌ள‌து ப‌ழைய‌ காத‌ல‌ர்க‌ளை தேடிக்க‌ண்டுபிடிக்க‌ முய‌ல்வ‌தாக‌ தெரிய‌ வ‌ந்துள்ள‌து.ஆனால் அவ‌ர்க‌ள் தேடுவ‌த‌ற்கான‌ கார‌ண‌ங்க‌ள் தான் உண்மையிலேயே சுவார‌ஸிய‌மான‌வை.37 ச‌த‌வீத‌ம் பேர் முன்னாள் காத‌ல‌ர்க‌ள் த‌ற்போது எப்ப‌டி...

கட்டற்ற இலவச மென்பொருள்களின் தேவையும் சில கருத்துகளும்

கடந்த வாரத்தில் எங்கள் பகுதியில் மைக்ரோசாப்ட் நிறுவனம் தனது அசல் மென்பொருள்கள் தான் பயன்படுகிறதா என்று சோதனை நடத்தியது. கரூரில் அதிகமாக டெக்ஸ்டைல்ஸ் தொழிற்சாலைகள் தான் உள்ளன. இந்த ஆலைகளின் சங்கத்திற்கு மைக்ரோசாப்ட் ஆணையிட்டுவிட்டு சென்றதால் அனைத்து ஆலைகளுக்கும் அசல் மென்பொருள்களையே பயன்படுத்துமாறு சுற்றறிக்கை அனுப்பப்பட்டது. இதனால் எல்லா தொழிற்சாலைகளும் கதிகலங்கி போய் உள்ளன.ஏன் என்றால் ஒரு விண்டோஸ் XP வாங்கவேண்டும் எனில் ரூபாய் 6700 ஆகிறது. MS-Office மென்பொருள் வாங்கவேண்டுமெனில் ரூபாய் 10,000 ஆகிறது. இதுவே சேர்த்து மொத்தம் 17,000 ரூபாய் ஆகிறது.ஒரு தொழிற்சாலையில் குறைந்தது 30 கணினிகள் இருந்தாலும் 5 லட்சம் ரூபாய் ஆகிறது. தொழிற்சாலைகளே நஷ்டத்தில் ஓடிக்கொண்டிருக்கும் நேரத்தில் செலவு செய்து இயங்குதளமும் அலுவலக மென்பொருளையும் வாங்குவதற்கு யோசனை செய்யத்தான்...

புளு டூத் காதணி

தொழிநுட்பம் என்பது எதோ தொழில்நுட்பமானது என நினைத்து விட வேண்டாம்.என்ன குழப்புவது போல தோன்றுகிறதா?குழம்ப ஒன்றுமில்லை. தொழில்நுட்பத்தை எதோ அன்னியமனது ,நமக்கு சம்பந்தமில்லாதது என கருத வேண்டாம் என்பதே விஷயம்.தொழில்நுட்பத்தின் உண்மையான பயன்பாடு அது நம்முடைய நடைமுறை வாழ்க்கை சார்ந்த்ததாக இருப்ப்தில் தான் இருக்கிறது .அதாவது தொழில்நுட்பம் அன்றாட வாழ்க்கையின் அனைத்து அம்சங்களிலும் பின்னி பினைந்திருக்க வேண்டும்.வ‌டிவ‌மைப்பாள‌ர்க‌ள் இத‌னை ம‌ன‌தில் கொண்டு செய‌ல்ப‌ட‌ வேண்டும்.தொழில்நுட்பத்தை நம் வீட்டுக்குள்ளே கொண்டு வருவதன் மூலம் வடிவமைப்பிலும் பயன்பாட்டிலும் புதுமையை உருவாக்கலாம்.இப்ப‌டி தொழில்நுட்ப‌ம் சார்ந்த‌ வாழ்விய‌ல் பொருட்க‌ளை உருவாக்கும் வித்த‌க‌ வ‌டிவ‌மைப்பு க‌லைஞ‌ர்க‌ள் ப‌ல‌ர் இருக்கின்ற‌ன‌ர்.இவ‌ர்க‌ளின் ப‌ட்டிய‌லில் சீனாவை சேர்ந்த‌ ஃபென்டி மெங்கையும்...

Wi-Fi தொழில்நுட்பம் ஏற்படுத்தியுள்ள அச்சுறுத்தல்கள்!

"ஒயர்லெஸ் ஃபிடெலிடி" என்ற தொழில் நுட்பம்தான் Wi-Fi தொழில் நுட்பம் என்று அழைக்கப்படுகிறது. லோக்கல் ஏரியா நெட்வொர்க் (LAN)) என்று அழைக்கப்படும் நெட்வொர்க்குகளின் ஒரு சில வகைகள் Wi-Fi தொழில் நுட்பம் என்று அழைக்கப்படுகிறது. அதாவது நெட்வொர்க்குகளுக்கும், கணினி, இணையத்தள இணைப்புகளுக்குமான கம்பிவட தொழில் நுட்பத்திற்கு அடுத்தகட்டமாக இந்தகம்பியற்ற இணைப்புத் தொழில்நுட்பம் தற்போது வெகு வேகமாக பரவலாகிவருகிறது.முறையான பாதுகாப்பு, தடுப்பு ஏற்பாடுகள் இல்லையெனில், Wi-Fi நெட்வொர்க்கை யார் வேண்டுமானாலும் அனுமதியின்றி பயன்படுத்தி எந்தவிதமான நாசவேளைகளிலும் ஈடுபடலாம் என்பதே தற்போது எழுந்துள்ள அச்சம்.இந்தியா தற்போது தகவல் தொடர்பியலில் புரட்சியை எதிகொண்டு வருகிறது. மிகப்பெரிய செல்பேசி சந்தையாக இந்தியா வளர்ந்து வரும் நிலையில் இந்ததொழில் நுட்பமும் இந்தியாவில் அதிக...

புவி வெப்பமடைதலால் சுனாமி, நிலநடுக்கங்கள் அதிகரிக்கும் - விஞ்ஞானிகள்

புவி வெப்பமடைதலால் பூமியின் மேற்பரப்பு மாற்றமடைகிறது. இதனால் நிலநடுக்கங்கள், எரிமலை வெடிப்புகள், பெரும் நிலச்சரிவுகள் அடிக்கடி நிகழும் வாய்ப்புகள் அதிகரித்துள்ளதாக புவியியல் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.தட்பவெப்ப மாற்றத்துடன் தொடர்புடைய புவியியல் மாற்றங்கள் மீத்தேன் வாயுவின் புகையனல் கக்குதலையும் உருவாக்கலாம். இந்த வெப்ப வாயு தற்போது உறைபனியில் திட வடிவத்தில் உள்ளது. மேலும் கடலடிப் படுகையிலும் மீத்தேன் திட வடிவில் உள்ளது. தற்போது காற்றில் இருக்கும் ஒட்டுமொத்த கரியமில வாயுவின் அளவைக்காட்டிலும் உறைபனியடியில் திட நிலையில் உள்ள இந்த மீத்தேன் அளவு பன்மடங்கு அதிகமாகும்."தட்பவெப்ப மாற்றங்கள் விண்வெளியையும், கடல்களையும் மட்டும் பாதிப்பதில்லை, பூமியின் மேல்பாறையையும் பாதிக்கிறது. ஒட்டுமொத்த பூமியும் ஒன்றையொன்று சார்ந்து இயங்குவது" என்று லண்டன் பல்கலைக்...

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Bluehost Review