
இணையத்தின் பெரும் சக்தியான கூகிள் தனது புதிய இயங்குதளமான கூகிள் குரோம் ஓஎஸ்சை திறந்த வெளி (Open Source) மென்பொருளாக 19 நவம்பர் 2009 அன்று அறிமுகப்படுத்தி உள்ளது. கூகிள் புதிய இயங்குதள தயாரிப்பில் ஈடுபட்டு இருப்பதாக அதற்கு கூகிள் குரோம் ஓஎஸ் என்று பெயரிட்டு கடந்த ஜூலை மாதம் அறிவிப்பு வெளியிட்டு இருந்தது. நேற்று அதற்கான திறந்தவெளி நிரலை வெளியிட்டு உள்ளது.
கூகிள் குரோம் ஓஎஸ் என்பது என்ன? அது என்னவெல்லாம் சேவை வழங்க போகிறது என்பதை சற்றே விளக்கமாக பார்ப்போம்.
கணினியை பொறுத்தவரை சராசரி பயனர் என்ன பயன்பாடுகளுக்கு உபயோகிக்கிறார்? நம்மையே எடுத்து கொள்ளுவோம். கணினியை துவக்கிய பின் நேரடியாக இணைய உலாவியை திறந்து கொள்ளுகிறோம். ஈமெயில், யூடியுப், நண்பர்களுடன் அரட்டை, தளங்களை வாசித்தல் என்று பெரும்பாலும் நமது நேரத்தை இணையத்தில் செலவு செய்கிறோம். முடிந்தவுடன்...