
ஆண், பெண் என்ற பிரிவெல்லாம் இப்போது போயே போச்சு! ஆணுக்குரிய அனைத்து வேலைகளையும் பெண்கள் செய்கின்றனர். ஆனால் பெண்ணுக்குரிய அனைத்து குணங்களையும் ஆண்கள் பெற்றிருக்கின்றனரா என்றால் அதுதான் இல்லை என்கிறது ஒரு உளவியல் ஆய்வு.
எந்த இடத்திலும், எந்த சூழ்நிலையையும் தனக்கு ஏற்றாற்போல் மாற்றிவிடும் பக்குவமும், திறமையும் பெண்களுக்கு மட்டுமே உண்டு. யாரையும் பார்த்த மாத்திரத்தில் அவர்களின் குணங்களை ஓரளவு புரிந்து விடும் ஆற்றலும் அவர்களுக்கு உண்டு. மற்றவர்களை கவர்ந்திழுக்கும் வசீகரமும் பெண்களிடம் இருந்தால் இன்னும் சிறப்பு.
அழகும், அறிவும், அடுத்தவர்களை புரிந்து கொள்ளும் குணங்களும், நல்ல பழக்க வழக்கங்களும் உள்ள பெண்களுக்கு எப்போதுமே முன்னேற்றம் என்பது தொட்டு விடும் தூரம்தான். அப்படி வெற்றி ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு முன்னேறும் ஸ்மார்ட் பெண்களின் சிறப்புக்...