
தென் கொரியாவை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் ஆரஞ்சுப்பழம் மற்றும் சிசிலிப்பழம் போன்றவற்றை ஆராய்ச்சி செய்தனர். இதில் இருந்து செயற்கை தோல் மற்றும் அழகு சாதன பொருட்கள் தயாரித்துள்ளனர்.அவற்றில் இருந்து வெளியாகும் சிட்ரஸ் சீ 623-2 என்ற பாக்டீரியா மூலம் வேதியியல் மாற்றம் செய்யப்பட்டு செலுலஸ் ஜெல் ஆக மாற்றம் செய்யப்படுகிறது. அதில் இருந்து செயற்கை தோல் தயாரிக்கப்படுகிறது.
இது மனிதர்களின் உடலுக்கு பாதிப்பை ஏற்படுத்தாது. இதனால் ஏற்கனவே பாதிக்கப்பட்டுள்ள பகுதியில் இந்த செயற்கை தோல் பயன்படுத்துவதால் எந்தவித தொற்று நோயும் ஏற்படாது.
தீக்காயம் பட்ட இடத்தில் ஒரு வருடத்திற்குள் இந்த செயற்கை தோலை பொருத்த முடியும். தற்போது இது ஆய்வில் உள்ளது. இன்னும் ஓரிரு ஆண்டுகளில் உபயோகத்துக்கு வரும்.இந்த செயற்கை தோல் இயற்கையான பயோ பாலிமரில் இருந்து தயாரிக்கப்படுகிறது. இதனால்...