
விண்வெளியில் கோடிக்கணக்கான விண்கற்கள் சுற்றி வருகின்றன. அவை எப்போதாவது பூமி ஈர்ப்பு விசைக்குள் வந்து பூமியை நோக்கி வேகமாக வரும். ஆனால் வரும் வேகத்தில் அவற்றில் தீப் பிடித்து நடுவானிலேயே சாம்பலாகி விடும்.
அளவில் சிறிய கற்கள் இப்படி சாம்பலாகி விடுவது உண்டு. பெரிய கற்களாக இருந்தால் எரிந்து சாம்பலாகாமல் அதன் மீது பகுதி பூமியில் விழுவதும் உண்டு. அதுவும் சிறிய அளவே இருப்பதால் பெரிய பாதிப்புகள் எதுவும் சமீப காலங்களில் ஏற்படவில்லை.
இப்போது மிகப் பெரிய ராட்சத கல் ஒன்று பூமியை நோக்கி வந்து கொண்டிருக்கிறது. அது விண்ணில் தீப்பிடித்தாலும் கூட கல் பெரிய அளவில் இருப்பதால் பூமிக்கு பெரும் சேதம் ஏற்படலாம் என்று விஞ்ஞானிகள் எச்சரிக்கிறார்கள்.
இந்த கல் 350 மீட்டர் குறுக்களவு உள்ளது. அதன் சுற்று வட்ட பாதையில் இருந்து விலகி கொஞ்சம் கொஞ்சமாக பூமி...