August 26, 2011

யூடியுப் வீடியோக்களை HD வடிவில் தரவிறக்கம் செய்வதற்கு

இணையத்தில் வீடியோக்களை பகிரும் தளமான யூடியுப்பில் இருந்து வீடியோக்களை தரவிறக்கம் செய்ய நிறைய மென்பொருட்களும், இணைய தளங்களும், நீட்சிகளும் உள்ளன. ஆனால் இந்த மென்பொருள் சற்றே வித்தியாசமானதும், பயனுள்ளதும் கூட. இந்த மென்பொருள் மூலம் ஒரு குறிப்பீட வீடியோவை பல அளவுகளில் பல போர்மட்டுகளில் தரவிறக்கம் செய்து கொள்ளலாம். மற்றும் இந்த மென்பொருளில் கூடுதல் வசதியாக தொடர்பு வீடியோக்களை யூடியுப் தளத்திற்கு செல்லாமலே இங்கிருந்தே தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.மென்பொருளின் பயன்கள்:1. ஒரே நேரத்தில் பல வீடியோக்களை தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.2. முற்றிலும் இலவசமான மென்பொருள்.3. தொடர்பு வீடியோக்களை தரவிறக்கம் செய்ய வேண்டுமென்றால் மீண்டும் யூடியுப் தளத்திற்கு செல்ல தேவையில்லை.4. வீடியோக்களை வேகமாக தரவிறக்கம் செய்கிறது.5. வீடியோக்களை FLV, MP4 போர்மட்களில் பல்வேறு அளவுகளில் தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.6. வீடியோக்களை...

2013ம் ஆண்டு முதல் வான்வெளியில் இருந்து பூமியின் அழகை ரசிக்கலாம்

2013ஆம் ஆண்டு முதல் ஆகாயத்தில் பறந்தபடி பூமியையும், தினமும் உதிக்கும் சூரியனின் அழகையும் பார்த்து ரசிக்க முடியும்.பூமிக்கு மேல் தொங்கி கொண்டு உலக காட்சிகளை பார்ப்பது என்பது நம்மை சிலிர்க்க வைக்கும் சாகசமாக இருக்கும். இந்த வித்தியாசமான பயணத்திற்கு ஆகும் செலவு 5 மணி நேரத்திற்கு 90 ஆயிரம் பவுண்ட் என கணக்கிடப்பட்டுள்ளது.பூமியின் கடைசி வளைவு பகுதியை ஹீலியம் நிரப்பப்பட்ட பலூன் கலத்தில் இருந்து பார்த்து ரசிக்கலாம். இப்படி பயணம் செய்பவர்கள் சூரிய உதயத்தை பார்க்கும் முதல் மனிதர்களாகவும் இருப்பார்கள்.பூமிக்கு மேல் 22 மைல் பயணம் செய்பவர்கள் செல்லும் கலம் 2 பைலட்டுகள் மற்றும் 4 பயணிகள் அமரும் வகையில் உள்ளது. இந்த கலத்துடன் 423 அடி விட்டம் கொண்ட ஹீலியம் பலூனும் இணைக்கப்பட்டு இருக்கும்.ஹீலியம் காற்று ஒரு பொருளை உயரத்தில் கொண்டு செல்லக்கூடிய தன்மை படைத்தது...

உங்களது கருத்துகளை பகிர்ந்து கொள்வதற்கு

பிரபலங்கள் மட்டும் தான் பேட்டி கொடுக்க வேண்டுமா என்ன, நீங்களும் தான் பேட்டி தரலாம் என்கிறது டைப்கேஸ்ட் இணையதளம். பேட்டி தர விருப்பம் தான் ஆனால் பேட்டிக்கான கேள்விகளை கேட்க யாராவது வேண்டாமா என்று கேட்டால் அதற்கான வழியையும் இந்த தளமே காட்டுகிறது. மிகவும் சுவாரஸ்யமான சேவை தான். எளிமையானதும் கூட.யார் வேண்டுமானாலும் உங்களை பேட்டி காண வழி செய்யும் சேவை என்று பெருமை பட்டு கொள்லும் டைப்காஸ்ட் ஒருவர் தனது ரசிகராலோ நண்பர்களாலோ அல்லது வாசகர்களாலோ பேட்டி காணப்பட வழி செய்கிறது. அதிலும் எப்படி தெரியுமா நேரடி பேட்டிக்கு வழி செய்கிறது.பேட்டிக்கு நான் தயார் என ஆர்வம் கொள்பவர்கள் இந்த தளத்தில் உறுப்பினராக வேண்டும். பெயரையும் மின்னஞ்சல் முகவரியையும் சம்ர்பித்து உறுப்பினரான பின் பேட்டிக்கான பக்கம் அளிக்கப்படுகிறது.அந்த பக்கத்தில் பேட்டிக்கான தலைப்பு மற்றும் விளக்கத்தை குறிப்பிட்டு பேட்டிக்கு ஆயுத்தமாகலாம். பேட்டி...

எந்தவொரு மென்பொருளின் துணையுமில்லாமல் அனிமேசன் படங்களை உருவாக்குவதற்கு

நமக்கு தோன்றும் எண்ணங்களை அனிமேசனாக கொடுத்தால் நன்றாக இருக்கும் என்று எண்ணுபவர்களுக்கு இணையதளம் வாயிலாக எந்த ஒரு மென்பொருள் துணையும் இன்றி எளிதாக நாமே அனிமேசன் உருவாக்கலாம். புதுவிதமாக நமக்கு தோன்றும் விதவிதமான எண்ணங்களுக்கு வடிவம் கொடுத்து நம் ஐடியாவை மல்டிமீடியா உதவியுடன் ஓன்லைன் மூலம் அனிமேசன் படமாக உருவாக்கலாம். நமக்கு உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது.இத்தளத்திற்கு சென்று Register என்பதை சொடுக்கி புதிதாக ஒரு பயனாளர் கணக்கு உருவாக்கி உள்நுழையலாம். ஐடியாக்களை Map ஆக உருவாக்குவதில் தொடங்கி கார்டூன் உருவாக்குவது, ஓடியோ எடிட் செய்வது மற்றும் வீடியோ எடிட் செய்வது என அத்தனையையும் நாம் ஓன்லைன் மூலம் செய்யலாம்.எப்படி பயன்படுத்துவது என்பதை வீடியோவுடன் காட்டி அசத்துகின்றனர். வீடியோ அல்லது ஓடியோ எடிட் செய்வதில் எவ்வளவு புதுமையான டூல்கள் உள்ளது என்பதையும், அழகான கார்டூன் ஒரு திறமையான கார்டூன் வடிவமைப்பாளர்...

rundll32 கோப்பின் செயல்பாடுகள்

விண்டோஸ் ஓபரேட்டிங் சிஸ்டத்தில் அமைதியாக எப்போதும் இயங்கும் ஒரு கோப்பு தான் rundll32.exe. எனவே இந்த கோப்பு இயங்குவதில் சிறிய பிரச்சினை ஏற்பட்டாலும் அது குறித்து நமக்கு பிழை செய்தி கிடைக்கிறது. இதன் தன்மையினையும் செயல்படும் விதத்தினையும் அறிந்து கொண்டால் இந்த கோப்பு குறித்த சந்தேகங்கள் தெளிவாகும்.rundll32.exe கோப்பு நம் கணணியில் டாஸ்க் மேனேஜரில் இயங்கிக் கொண்டிருப்பதனைப் பார்க்கலாம். RAM நினைவகத்தில் இந்த கோப்பு தங்கி இருந்து மற்ற கோப்புக்கள் செயல்பட உதவிடும்.ஒன்று அல்லது இரண்டு புரோகிராம்களுக்குள் பிரச்சினை ஏற்பட்டால் இந்த கோப்பின் பெயர், பிரச்சினை குறித்த பிழை செய்தியில் அடிபடுவது இயற்கையே. கணணி இயங்க அடிப்படையான டி.எல்.எல் கோப்புக்கள் இந்த ரன் டி.எல்.எல் 32 கோப்பு வழியாக இயங்குகின்றன.ஒரு டி.எல்.எல் கோப்பை நேரடியாக இயக்க முடியாது. இ.எக்ஸ்.இ அல்லது காம் கோப்புக்கள் இயக்கப்படுவது போல டி.எல்.எல்...

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Bluehost Review