
`வெடிகுண்டு’ விஞ்ஞானம் வளர வளர ஆயுதங்களும் பெருகி வருகின்றன. ஒளியையும், காற்றையும் எதிர்காலத்தில் ஆயுதமாகப் பயன்படுத்துவார்கள் என்று பிரபல ஜோதிடர் நாஸ்டர்டாமஸ் கணித்துக் கூறி இருக்கிறார்.
வளர்ந்து வரும் அறிவியல் நவீனங்களும் அதை உண்மைப்படுத்தும் விதத்திலேயே ஆயுதங்களைக் குவித்து வருகின்றன.
சமீபத்தில் அமெரிக்கா, ஒளியை சிறிய அளவிலான ஆயுதமாக பயன்படுத்தும் யுக்தியை கண்டுபிடித்து உள்ளது. ஆனால் அது ராணுவவீரர்களின் மருத்துவ உதவிக்கு பயன்படும் கத்தி என்று அமெரிக்கா அறிவித்தது. இதேபோல விதவிதமான ஆயுதங்கள் பல நாடுகளிடம் இருக்கின்றன. இந்தப் பட்டியலில் புதிதாகச் சேர இருக்கிறது பாக்டீரியா வெடிகுண்டு.
பாக்டீரியா என்பது நுண்ணுயிரியாகும். இதில் சைனோ பாக்டீரியா என்ற ஒரு வகை பாக்டீரியாக் களில் சிறிய மாற்றங்களை ஏற்படுத்தி பெட்ரோலியம் தயாரிக்கிறார்கள்...