
இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான `இஸ்ரோ’ தனது விண் வெளி ஆய்வுப் பணிகளில் கல்லூரி மாணவர்களையும் இணைத்துள்ளது. இதன்படி பெங்களூர் மற்றம் ஐதராபாத் ஆகிய நகரங்களைச் சேர்ந்த 7 பொறியியல் கல்லூரி மாணவர்கள் சேர்ந்து `ஸ்டுட் சாட்’ என்ற பெயரில் ஒரு சிறிய செயற்கைகோளை உருவாக்கி உள்ளனர்.
`ஸ்டுடன்ட் சாட்டிலைட்’ என்பதன் சுருக்கமே `ஸ்டுட் சாட்’ என்பதாகும். (Student Satel lite&STUD SAT) சுமார் 55 லட்சம் ருபாய் செலவில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த செயற்கைகோள் 10x10x13.5 சென்டி மீட்டர் அளவு கொண்டது. இதன் எடை சுமார் 850 கிராம். இந்த செயற்கைகோளில் தகவல் தொடர்பு கருவி, பேட்டரி, கண்ட்ரோல் கருவிகள் மற்றும் சக்திவாய்ந்த கேமிரா ஆகியவை இணைக்கப்பட்டுள்ளன.
விரைவில் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து மற்ற செயற்கை கோள்களுடன் மாணவர்கள் செயற்கைக் கோளும் விண்ணில் செலுத்தப்படுகிறது....