May 02, 2010

இந்திய மாணவர்கள் தயாரித்த செயற்கை கோள்

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான `இஸ்ரோ’ தனது விண் வெளி ஆய்வுப் பணிகளில் கல்லூரி மாணவர்களையும் இணைத்துள்ளது. இதன்படி பெங்களூர் மற்றம் ஐதராபாத் ஆகிய நகரங்களைச் சேர்ந்த 7 பொறியியல் கல்லூரி மாணவர்கள் சேர்ந்து `ஸ்டுட் சாட்’ என்ற பெயரில் ஒரு சிறிய செயற்கைகோளை உருவாக்கி உள்ளனர்.

`ஸ்டுடன்ட் சாட்டிலைட்’ என்பதன் சுருக்கமே `ஸ்டுட் சாட்’ என்பதாகும். (Student Satel lite&STUD SAT) 
சுமார் 55 லட்சம் ருபாய் செலவில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த செயற்கைகோள் 10x10x13.5 சென்டி மீட்டர் அளவு கொண்டது. இதன் எடை சுமார் 850 கிராம். இந்த செயற்கைகோளில் தகவல் தொடர்பு கருவி, பேட்டரி, கண்ட்ரோல் கருவிகள் மற்றும் சக்திவாய்ந்த கேமிரா ஆகியவை இணைக்கப்பட்டுள்ளன. 

விரைவில் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து மற்ற செயற்கை கோள்களுடன் மாணவர்கள் செயற்கைக் கோளும் விண்ணில் செலுத்தப்படுகிறது. இதில் மாணவர்கள் செயற்கை கோள் பூமியில் இருந்து சுமார் 680 கிலோ மீட்டர் உயரத்தில் விண்ணில் நிலைநிறுத்தப்படும். அங்கு சுற்றி வந்தபடியே இந்த செயற்கை கோள் பூமியை படம் பிடித்து தரையில் உள்ள கட்டுப்பாட்டு அறைக்கு அனுப்பும். இந்தபடங்களை மாணவர்கள் தங்களது கல்வி மற்றும் ஆராய்ச்சிப்பணிகளுக்கு பயன்படுத்துவார்கள். 

செயற்கை கோளை தயாரித்த மாணவர்கள் குழு இதை சிலவாரங்களுக்கு முன்பு இஸ்ரோ அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். அவர்கள் அதை ராக்கெட்டில் பொருத்தும் பணியை செய்து வருகிறார்கள்.

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Bluehost Review