
பொதுவாக கம்ப்யூட்டர் மற்றும் இன்டர்நெட்டில் நாம் சந்திக்கும் ஆபத்துக்கள் குறித்து ஆய்வு நடத்தி வரும் ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த லாவா சாப்ட் (Lavasoft) நிறுவனம், வரும் ஆண்டில் ஐந்து வகையான ஆபத்துகள் இருக்கும் எனப்பட்டியலிட்டுள்ளது.
விண்டோஸ் 7 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் மீது தாக்குதல், அப்ளிகேஷன் சாப்ட்வேர் தொகுப்புகளில் தாக்குவதற்கு ஏதுவான இடம் பார்த்து நுழைதல், நாசம் விளைவிக்கும் தொகுப்புகள் தயாரிப்பு, விண்டோஸ் தவிர மற்ற ஆப்பரேட்டிங் சிஸ்டங்களின் பயன்பாடு அதிகரித்தல் மற்றும் மொபைல் போன்களில் மால்வேர் புரோகிராம்கள் என இவற்றை வரிசைப்படுத்தியுள்ளது.
(லாவா சாப்ட் நிறுவனம் 1999ல் தொடங்கப்பட்டது. இதனை ஒரிஜினல் ஆண்ட்டி ஸ்பைவேர் நிறுவனம் என அழைப்பார்கள். இதனுடைய இலவச ஆட்–அவேர் புரோகிராம் கம்ப்யூட்டர் பயன்படுத்துபவர்களிடையே பிரபலமானது. இதுவரை 40 கோடிக்கு...