May 21, 2010

நீர்மேல் நடக்கும் வீடியோநீர்மேல் நடக்கும் வீடியோ

யூடியூப்பில் வெளியாகியிருக்கும் இளைஞர்களின் சாகச வீடியோ காட்சி ஒன்று இணையவாசிகள் மத்தியில் நம்ப முடியாத உணர்வை ஏற்படுத்தி, பிரம்மிப்பில் ஆழ்த்தியுள்ளது.

வாட்டர் வாக்கிங் அதாவது நீர்மேல் நடப்பது என்று பெயர் சூட்டப்பட்டுள்ள இந்த வீடியோ காட்சி யூடியூப்பில் லேட்டஸ்ட் ஹிட்டாக முடிசூட்டப்பட்டுள்ளது. வீடியோ பகிர்வு தளமான யூடியூப் இணையவாசிகள் மத்தியில் பிரபலமாக இருக்கிறது. வீடியோ காட்சிகளை பதிவேற்றவும், மற்றவர்கள் பதிவேற்றிய வீடியோ காட்சிகளை பார்க்கவும் யூடியூப் உதவுகிறது. 


கூகுல் நிறுவனத்தால் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் வாங்கப்பட்ட யூடியூப் வீடியோ பதிவு தளங்களில் பிரபலமானதாகவும், முன்னணி தளமாகவும் விளங்குகிறது. யூடியூப்பில் இடம் பெறும் வீடியோ கோப்புகளில் அலுப்பூட்டும் காட்சிகள் அதிகம் என்றாலும் அவற்றுக்கு மத்தியில் புன்னகைக்க வைக்கக்கூடியதும், பிரம்மிப்பில் ஆழ்த்தக்கூடியதுமான காட்சிகள் அவ்வப்போது இணையவாசிகளை கவர்ந்து உலகம் முழுவதும் பிரபலமாகி விடுவது உண்டு. 

அந்தவகையில் இப்போது யூடியூப்பில் இளைஞர்களின் சாகச வீடியோ காட்சி ஒன்று பிரபலமாகி இருக்கிறது. பார்ப்பவர்களை யெல்லாம் வியப்பில் ஆழ்த்தியுள்ள அந்த வீடியோ காட்சியானது இதுவரை பல்லாயிரக்கணக்கானோரால் பகிரப்பட்டு, லட்சக்கணக்கானோரால் ரசிக்கப்பட்டுள்ளது. 

3 இளைஞர்கள் தண்ணீர் மேல் வேகமாக நடந்து செல்லும் காட்சியை அந்த வீடியோ சித்தரிக்கிறது. இதுவரை யாரும் பார்த்தறியாத செயற்கறிய செயல் எனும் வர்ணனையோடு அல்ப் கார்ட்னர் மற்றும் அவரது நண்பர்கள் இந்த வீடியோ காட்சியை பதிவேற்றியுள்ளனர். போர்ச்சுகல் நாட்டில் உள்ள ஏரி ஒன்றில் தண்ணீர் மீது இந்த 3 இளைஞர்களும் மின்னல் வேகத்தில் நடந்து செல்லும் காட்சி உண்மையிலேயே வியப்பில் ஆழ்த்தக்கூடியதாக இருக்கிறது.
முதல் பார்வைக்கு பிரம்மிப்பை உண்டாக்கும் இந்த காட்சி உண்மையிலேயே நிகழ்த்தப்பட்டதா அல்லது ஏதாவது ஏமாற்று வேலையா என்னும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் காட்னர் மற்றும் அவரது நண்பர்கள் இந்த காட்சிக்கு பின்னே எந்த ஏமாற்று வேலையும் கிடையாது. இது முழுக்க முழுக்க சாகசம் என்று உற்சாகமாக கூறுகின்றனர். 

இப்படி தண்ணீர் மேல் நடக்கும் நம்ப முடியாத செயலை ஒரு புதிய விளையாட்டு என்று வர்ணிக்கும் கார்ட்னர் இந்த விளை யாட்டிற்கு நீர்மலையேறுதல் என்று புதியதோர் பெயரையும் சூட்டியுள்ளார். நீர்மேல் நடப்பது சாத்தியமில்லாதது போல் தோன்றினாலும் உண்மையில் தண்ணீர் புகாத ஷýவை அணிந்து கொண்டால் தண்ணீர் மேல் நடக்கலாம் என்றார் அவர்.
இத்தகைய ஷýவை அணிந்து கொண்டு தண்ணீர் மேல் கால் வைத்ததும் நிற்காமல் மின்னல் வேகத்தில் ஓடுவது போல நடந்து கொண்டே இருக்க வேண்டும் என்று அவர் மேலும் கூறுகிறார். தையல் இயந்திரத்தின் செயல்பாட்டை போல கால்கள் படுவேகமாக நடக்கும் போது இது எளிதில் சாத்தியம் என்கிறார் அவர். இப்படி போர்ச்சுகல் ஏரியில் அவர்கள் 10 அடிகளை வைத்து நடந்து காட்டியிருக்கின்றனர். மெய்யோ பொய்யோ தெரியாது. ஆனால் இந்த சாகச விளையாட்டு இன்டெர்நெட்டில் ஆச்சர்ய அலைகளை பரப்பி வருகிறது.

நிலவுக்கு ரோபோ அனுப்பும் மாணவர்கள்

13 1/2 கோடி பரிசு அறிவிப்பு மனிதன் நிலவில் கால்பதித்து 40 ஆண்டுகள் ஆகின்றன. அதன்பிறகு எத்தனையோ விண்வெளி ஓடங்கள் நிலவுக்கு அனுப்பப்பட்டு உள்ளன.

தற்போது ஸ்பெயின் நாட்டு மாணவர்கள் குழு நிலவுக்கு ஒரு ரோபோவை அனுப்ப திட்டமிட்டுள்ளது. இதற்கான ரோபோ தயாராகிவிட்டது. காஸ்டல்டிபெல்ஸ் ஸ்கூல் ஆப் டெக்னாலஜி பள்ளி மாணவர்கள் குழு இந்த ரோபோவை வடிவமைத்துள்ளது. 

`பிக்கோ ரோவர்’ என்பது இந்த ரோபோவின் பெயராகும். இந்த ரோபோ 250 கிராம் எடை கொண்டது. பந்து போன்ற வடிவம் உடையது. நவீன கேமரா, கம்ப்யூட்டர், சிறிய மோட்டார், பேட்டரி ஆகியவை இருக்கும். 

இந்த ரோபோவானது கோளவடிவில் இருந்தாலும் பூமிபோல 33 டிகிரி சாய்வாக இருக்கும். இதன் மேல் அரைக்கோளத்தில் இருக்கும் கேமரா சுழன்று படம் எடுக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. அதற்கேற்ப அடிப்பாகமும், சக்கரங்களும் ரோபோ எடையை சமநிலைப்படுத்தும் படியாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. 

நிலவில் உள்ள பாறைகள், மணல் ஆகியவற்றை இந்த ரோபோ ஆய்வு செய்து படங்களை அனுப்பி வைக்கும். இந்த ரோபோ எப்போது நிலவுக்கு கிளம்புகிறது என்று அறிவிக்கப்படவில்லை. ஆனால் மாணவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக இதற்கு பரிசுத் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. பரிசுத் தொகை எவ்வளவு தெரியுமா? 131/2 கோடி ருபாய். 

ரோபோ நிலவுக்குச் சென்று வெற்றிகரமாக செயல்பட்டு அது அனுப்பும் புகைப்படம் மற்றும் தகவல்கள் பூமிக்கு கிடைத்துவிட்டால் பரிசுத்தொகை மாணவர் குழுவுக்கு வழங்கப்படும். `கூகுள் லூனார் எக்ஸ்பிரைஸ்’ என்று இந்த பரிசுத் திட்டத்திற்கு பெயரிடப்பட்டுள்ளது. இது தவிர அரசுசாரா அமைப்பும் சன்மானம் வழங்குவதாக அறிவித்துள்ளது.

இரண்டு இமயங்களின் கூட்டனியில் கூகுள் தொலைக்காட்சி

தொலைக்காட்சியிலே அனைத்து வசதிகளையும் கொண்டு வர இருக்கும் கூகுளின் அடுத்தக்கட்ட முயற்ச்சியில் இண்டெல் மற்றும் சோனி இணைந்து பல கூடுதல் வசதிகளைத் தர இருக்கிறது

கூகுளின் அடுத்த தலைமுறைக்கான தொலைக்காட்சியில் கிடைக்கும் சலுகைகளைப் பார்த்தால் ய்ர்ரும் டிஷ் பக்கம் போகமாட்டார்கள் என்றே தோன்றுகிறது. 

வீட்டில் ஒரே ஒரு தொலைக்காட்சி இருந்தால் போதும் அதுவும் கூகுள் தொலைக்காட்சி என்றால் அதனால் கிடைக்கும் பலன் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்லும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அந்த வகையில் ஒரே தொலைக்காட்சியில் கம்ப்ப்யூட்டர் முதல் தொலைபேசி போன், டிஷ் மற்றும் இன்னும் பல சலுகைகளை கொண்டு வந்து மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தப்போகிறது. 

வெளிவரும் காலம் 2015 ஆம் ஆண்டு  சற்று அதிகமாக உள்ளது. 

கூகுள் வழங்கும் சேவைகளை ஒப்பிட்டுப் பார்த்தால் வெளிவரும் நேரம் சரிதான். ஐபாட்டில் இருந்து ஐபேட் வரை அனைத்து சலுகைளையும் கொடுக்கும் இதற்காக கூகுள் தற்போது ஒதுக்கி இருக்கும் தொகை 1.9 பில்லியன் டாலர்.

May 02, 2010

இந்திய மாணவர்கள் தயாரித்த செயற்கை கோள்

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான `இஸ்ரோ’ தனது விண் வெளி ஆய்வுப் பணிகளில் கல்லூரி மாணவர்களையும் இணைத்துள்ளது. இதன்படி பெங்களூர் மற்றம் ஐதராபாத் ஆகிய நகரங்களைச் சேர்ந்த 7 பொறியியல் கல்லூரி மாணவர்கள் சேர்ந்து `ஸ்டுட் சாட்’ என்ற பெயரில் ஒரு சிறிய செயற்கைகோளை உருவாக்கி உள்ளனர்.

`ஸ்டுடன்ட் சாட்டிலைட்’ என்பதன் சுருக்கமே `ஸ்டுட் சாட்’ என்பதாகும். (Student Satel lite&STUD SAT) 
சுமார் 55 லட்சம் ருபாய் செலவில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த செயற்கைகோள் 10x10x13.5 சென்டி மீட்டர் அளவு கொண்டது. இதன் எடை சுமார் 850 கிராம். இந்த செயற்கைகோளில் தகவல் தொடர்பு கருவி, பேட்டரி, கண்ட்ரோல் கருவிகள் மற்றும் சக்திவாய்ந்த கேமிரா ஆகியவை இணைக்கப்பட்டுள்ளன. 

விரைவில் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து மற்ற செயற்கை கோள்களுடன் மாணவர்கள் செயற்கைக் கோளும் விண்ணில் செலுத்தப்படுகிறது. இதில் மாணவர்கள் செயற்கை கோள் பூமியில் இருந்து சுமார் 680 கிலோ மீட்டர் உயரத்தில் விண்ணில் நிலைநிறுத்தப்படும். அங்கு சுற்றி வந்தபடியே இந்த செயற்கை கோள் பூமியை படம் பிடித்து தரையில் உள்ள கட்டுப்பாட்டு அறைக்கு அனுப்பும். இந்தபடங்களை மாணவர்கள் தங்களது கல்வி மற்றும் ஆராய்ச்சிப்பணிகளுக்கு பயன்படுத்துவார்கள். 

செயற்கை கோளை தயாரித்த மாணவர்கள் குழு இதை சிலவாரங்களுக்கு முன்பு இஸ்ரோ அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். அவர்கள் அதை ராக்கெட்டில் பொருத்தும் பணியை செய்து வருகிறார்கள்.

எல்.ஜி.யின் புதிய சாக்லேட்எல்.ஜி.நிறுவனம்

2006 ஆம் ஆண்டில் தன் சாக்லேட் சிரீஸ் மொபைல் போன்களை அறிமுகப்படுத்தியது. இப்போது மேலும் இரண்டு சாக்லேட் போன்களைக் கொண்டு வந்துள்ளது. அவற்றில் அண்மைக் காலத்தில் வந்தது எல்.ஜி. சாக்லேட் பி 20.

சாக்லேட் சிரீஸ் போன்கள் அனைத்துமே ஸ்டைலான வடிவமைப்பு கொண்டவை. கண்ணாடி பளபளப்பு, பியானோ கருப்பு மற்றும் ஸ்லிம்மான வடிவம் என இந்த போனும் அசத்துகிறது. போனின் முன்புறத்தில் இரண்டாவது கேமரா உள்ளது. மற்ற இடம் எல்லாம் சரியான கருப்பில் முதல் பார்வையில் தெரிவதில்லை. 

போன் செயல்படத் தொடங்குகையில் தான் ஸ்கிரீன் வெளிச்சத்தில் கீழே உள்ள பட்டன்கள் தெரிகின்றன. இடது பக்கத்தில் கம்ப்யூட்டருடன் இணைக்க, சார்ஜ் செய்திட மற்றும் ஹெட்செட் இணைக்க ஒரே ஒரு போர்ட் தரப்பட்டுள்ளது. பின்புறம் கேமரா, எல்.இ.டி. பிளாஷ் தரப்பட்டிருப்பதும் உற்று நோக்கினால் மட்டுமே தெரிகிறது. 

இந்த பகுதி முழுவதும் வழுக்கிச் சென்று, பேட்டரி மற்றும் சிம் இடத்தைக் காட்டுகின்றன. மெமரி கார்ட் இடமும் இங்குதான் உள்ளது. போன் ஸ்லைட் ஆகி, கீ பேட் தட்டையாக குரோமியப் பூச்சு வரிகளுக்கிடையே காட்டப்படுகிறது. 

எண்களுக்கு மேலாக அழைப்பு ஏற்க, முடிக்க மற்றும் கிளியர் செய்திட கீகள் தரப்பட்டுள்ளன. கருப்பு வண்ண பின்னணியில் சிகப்பு வண்ணக் கலவையுடன், குரோமிய வரிகள் மிகவும் அழகான, ஸ்டைலான தோற்றத்தினைத் தருகின்றன. 

போனின் மெமரி 60 எம்பி. போனுடன் 2 ஜிபி மெமரி கார்ட் தரப்படுகிறது. அனைத்து கண்ட்ரோல் பட்டன்களையும் மிக எளிதாக இயக்கலாம். இந்த போனின் ஒரு சிறப்பம்சம், பல செயல்பாடுகளை(Multitasking) ஒரே நேரத்தில் மேற்கொள்வதுடன் ஒன்றிலிருந்து ஒன்றுக்கு மாறிக் கொள்வதற்கான வசதியுடன் இருப்பதுதான். 

ஆனால் அப்ளிகேஷன்களை அதிகப்படுத்துகையில், போனின் செயல்பாட்டின் வேகம் சற்று குறைகிறது. கடிகாரம், அலாரம், காலண்டர், ரிமைண்டர், நோட்ஸ்,குயிக் காண்டாக்ட்ஸ், சீதோஷ்ண நிலை அறிவித்தல் ஆகியவற்றிற்கான விட்ஜெட்டுகள் தரப்பட்டுள்ளன. எம்பி3 பிளேயர் மற்றும் எப்.எம். ரேடியோ உள்ளன. 

GPRS & EDGE ஆகிய தொழில் நுட்பம் மூலம் நெட்வொர்க் இணைப்பு அருமையாகக் கிடைக்கிறது. 900ட்அட பேட்டரி தரப்பட்டு 5 மணி நேரம் டாக் டைம் கிடைக்கிறது. ஒரு முறை சார்ஜ் செய்தால் இரண்டு நாட்கள் பவர் தாக்குப் பிடிக்கிறது. 

இரண்டு மணி நேரம் பாடல்களைக் கேட்க முடிகிறது. ஜி.பி.ஆர்.எஸ். பயன்பாடு 20 முதல் 30 நிமிடங்கள் வரை கிடைக்கிறது. ஒரு ஸ்டைலான போன் வாங்க வேண்டும் என விரும்புபவர்களுக்கு இது ஒரு சரியான போன். விலை ரூ.10,000 எனக் குறிக்கப்பட்டுள்ளது

24 விண் கற்களில் தண்ணீர் : நாசா கண்டுபிடிப்பு

நிலவில் தண்ணீர் இருப்பதை இந்தியாவின் சந்திராயன் ஓடம் கண்டுபிடித்தது. இதே போல சூரியனை சுற்றி வரும் பல்வேறு கோள்களிலும் தண்ணீர் இருக்கிறதா? என்று ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன. 

சூரியனை சுற்றி வரும் கோள்களை தவிர ஏராளமான விண்கற்களும் விண்ணில் சுற்றி வருகின்றன. இவற்றில் பல கற்கள் ராட்சத அளவில் இருக்கின்றன. அதாவது 200 கிலோ மீட்டருக்கு மேல் அகலமாக இருக்கின்றன.
அந்த கற்களை அமெரிக்காவில் நாசா விண்வெளி விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகின்றனர். ஹவாய் தீவில் ராட்சத டெலஸ்கோப்பை அமைத்து உள்ளனர். அதன் மூலம் இந்த கற்களை ஆய்வு செய்தனர். 

அதில் தண்ணீர் இருப்பது தெரிய வந்தது. உறைந்த நிலையில் மேல் பகுதிகளில் தண்ணீர் இருந்தன. தண்ணீர் இருப்பதால் அவற்றில் உயிரினங்கள் வாழவும் வாய்ப்பு இருக்கலாம் என கருதப்படுகிறது.
அதுபற்றியும் ஆய்வு நடந்து வருகிறது.

MICROSOFT நிறுவனத்தின் WINDOWS 8

MICROSOFT நிறுவனத்தின் அடுத்த இயங்குத்தளம் WINDOWS 8 ஜூலை 2012 ல் வருகிறது.  இது WINDOWS 7 னை விட வேகமாகவும், பயனாளர்க்கு உதவியாகவும் என்று அந்த நிறுவனம் அறிவித்து உள்ளது.

விண்டோஸ் பயனாளர்க்கு புதிய வசதிகளை அறிமுகம் ஆகிறது.
விண்டோஸ் 8 128 BIT என்று எதிர்பார்க்கபடுகிறது . 

INTEL நிறுவனத்தின் உதவியுடன் USB 3.0 இதில் அறிமுகம் செய்யப்படுகிறது.
USB 2.0 வில் அதிக பச்சமாக 480 MBits/s. USB 3.0 வில் அதிக பச்சமாக 5 Gbits/S .
விண்டோஸ் 7 உள்ள குறைகளை கண்டறிந்து விண்டோஸ் 8 உருவாக்கப்படும் என்று அந்த நிறுவனம் அறிவித்து உள்ளது.

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Bluehost Review