November 19, 2009

நீங்கள் பளபளப்பாக மிளிர வேண்டுமா?


 சந்தனம், முல்தானிமட்டி கலந்த, "பேஸ் பாக்' உபயோகித்து வர, முகம் பொலிவாகவும், மிருதுவாகவும் மாறும்.

கடலைமாவுடன் சிறிது மஞ்சள் தூள், எலுமிச்சை சாறு, ஒரு மேசைக்கரண்டி பால் கலந்து முகத்தில் தடவி, காய்ந்தவுடன் மிதமான சுடுநீரில் கழுவ, முகம் மிருதுவாகும்..

ஒலிவ் எண்ணெயுடன் சர்க்கரை கலந்து உள்ளங்கைகளில் தேய்த்து கழுவ வேண்டும். இவ்வாறு செய்ய உள்ளங்கைகளின் கடினத் தன்மை மறைந்து மிருதுவாக மாறும். .

பச்சை உருளைக்கிழங்கின் சாற்றை முகத்தில் தடவி வர சூரியக் கதிர்களால் ஏற்படும் கருமை நிறம் மாறும்.

2 கரண்டி முள்ளங்கி சாற்றுடன் 2 கரண்டி மோர் சேர்த்து, முகத்தில் தடவி, ஒரு மணிநேரம் கழித்து, சுடுநீரில் முகத்தை கழுவ வேண்டும். தினமும் இதை செய்து வர, வெப்பத்தால் முகத்தில் ஏற்படும் தவிட்டு நிறமுள்ள புள்ளி மறையும்..

இளநீரை முகத்தில் தொடர்ந்து 6 மாதம் தடவி வர சின்னம்மையால் ஏற்பட்ட வடு மறையும்..

பூசணிக்காயை சிறு துண்டுகளாக்கி அதை கண்களை சுற்றி வைக்க கண்களைச் சுற்றி ஏற்படும் கருவளையம் மறையும்..

பப்பாளி பழத்தை அரைத்து, முகத்தில் தொடர்ந்து தடவி வர முகப்பரு, கரும்புள்ளி ஆகியவை மறையும்..

புளித்த மோரை முகத்தில் 15 நிமிடம் தடவி, மிதமான சுடுநீரில் கழுவ முகம் பொலிவு பெறும். இதை தொடர்ந்து 15 நாட்களுக்கு செய்து வர நல்ல பலன் கிடைக்கும்..

முழங்கை (முட்டி) கறுப்பாகவும், சொர சொரப்பாகவும் இருந்தால், தேங்காய் எண்ணெயுடன் எலுமிச்சை சாறு கலந்து தடவி வர மிருதுவாக மாறும்..

தேன் மற்றும் எலுமிச்சை சாறு கலந்த கலவையை உதட்டின் மீது தொடர்ந்து தடவி வந்தால், தரம் குறைந்த லிப்ஸ்டிக் பயன்படுத்துவதால் ஏற்படும் கருமை மறையும்.

தயிருடன் கடலை மாவு கலந்து முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்து கழுவ வேண்டும். இவ்வாறு செய்வதால் முகத்தில் ஏற்படும் சுருக்கம் மறையும்..

முட்டை கோஸ் சாறு, சிறிது ஈஸ்ட், ஒரு மேசைக்கரண்டி தேன் மூன்றையும் கலந்து, 20 நிமிடம் முகத்தில் தடவி, மிதமான சுடு தண்ணீரில் முகத்தை கழுவ வேண்டும். இதனால், முகச் சுருக்கம் மறைந்து முகம் பொலிவுடன் இருக்கும். .

சுண்ணாம்பை தண்ணீர் கலந்து காலையில் தடவினால், மாலைக்குள் முகப்பரு மறைந்து விடும்..

வெள்ளை முள்ளங்கி சாறுடன், 2 கரண்டி எலுமிச்சை சாறு, 2 கரண்டி தக்காளி சாறு சேர்த்து முகத்தில் தடவி 20 நிமிடம் கழித்து, மிதமான சுடுநீரில் கழுவ வேண்டும். இதை தொடர்ந்து செய்து வர, வெப்பத்தால் உண்டாகும் தவிட்டு நிறப் புள்ளி மறையும்..

உலர்ந்த சருமம் உள்ளவர்கள் கிளிசரினுடன் ரோஸ் வாட்டர் மற்றும் எலுமிச்சை சாறு கலந்து முகத்தில் தடவலாம்..

முகம் மிருதுவாகவும், ரோஸ் நிறத்துடனும் இருக்க ரோஜாப் பூ இதழ்களை அரைத்து, அதோடு பால் , பச்சை பயறு மாவு, மற்றும் ரோஸ் வாட்டர் கலந்து முகம் மற்றும் கழுத்தில் தடவி வர சருமம் பளபளக்கும்..

கரும்புள்ளி உள்ள இடத்தில்,பச்சை பயருடன் தயிர் சேர்த்து தடவ வேண்டும். அது காய்ந்ததும் கைகளால் மேலும் கீழும் நன்கு தேய்த்து பின் முகத்தை கழுவ வேண்டும். இவ்வாறு செய்தால் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் மறையும். .

கடலை மாவு, ஆறு மேசைக்கரண்டி பாலாடை, இரண்டு மேசைக்கரண்டி, எலுமிச்சம் பழச்சாறு 10 சொட்டு, கிளிசரின் ஒரு மேசைக்கரண்டி கலந்து தினம் ஒருமுறை முகம், கை, கழுத்து பகுதிகளில், தடவினால் வெயிலினால் ஏற்படும் கருமையை போக்கலாம். பப்பாளி சாற்றுடன் தேன் கலந்து முகத்தில் தடவி வந்தாலும் நல்லது..

வெள்ளரிச்சாறு, சந்தனப்பொடி, கடலைமாவு மூன்றையும் சம அளவு கலந்து முகம், கை கால்களுக்கு தினமும் போட்டு வந்தால் முகம் பிரகாசமாக இருக்கும்..

சர்வதேச ஆண்கள் தினம்


சர்வதேச ஆண்கள் தினம் (IMD - International_Men's_Day) பொதுவாக ஆண்டு தோறும் நவம்பர் (புரட்டாதித் திங்கள்) 19ம் நாள் கொண்டாடப்படுகிறது. இது 1999 இல் பிரேரிக்கப்பட்டு கொண்டாடப்பட்டு வருகிறது. ஐநாவால் அங்கீகரிக்கப்பட்ட தினமாகவும் இது விளங்குகிறது.

உலகில் ஆண்களைக் கெளரவப்படுத்தவும் ஆண்களின் உரிமைகள் மற்றும் பாதுகாப்புக் குறித்த விழிப்புணர்வு கருதி இது கொண்டாடப்படுகிறது.

இவ்வாண்டுக்கான ஆண்கள் தின நல்வாழ்த்துக்கள்.. உண்மையான ஆம்பிளையளுக்கு உரித்தாகட்டும்.

ஆண்கள் மீதான பாரபட்சங்களில் சில.

1. அடிப்படை மருத்துவப் பரிசோதனைகளுக்கு பெண்களைப் போன்று ஆண்கள் கிரமமாக உட்படுத்தப்படுவதில்லை. குறிப்பாக பெண்களில் பல வகை நோய்களைத் தடுக்கவும் கட்டாய ஸ்கிறீனிங் (screening) செயற்பாடுகள் இருக்கின்றன. ஆனால் ஆண்களுக்கு அப்படி இல்லை. இதனால் புரஸ்ரேட் புற்றுநோய் போன்ற நோய்களை ஆண்கள் ஆரம்பத்திலேயே கண்டறிய முடியாமல் உள்ளது. இதனால் ஆண்கள் மத்தியில் அநியாய மரணங்கள் ஊக்குவிக்கப்படுகின்றன.

2. வன்புணர்வு வழக்குகளில் அநேக தடவைகள் ஆண்கள் திட்டமிட்டு சிக்க வைக்கப்படுவது தீர்வின்றித் தொடர்கிறது.

3. குடும்ப வன்முறையில் பெண்களால் பாதிக்கப்படும் ஆண்களுக்கு நிவாரணம் பெற எந்த வழியும் இல்லை.

4. விவாகரத்துப் பெறும் தம்பதியரிடத்தில் சட்டரீதியாக குழந்தைகள் தந்தையரிடம் குறுகிய காலத்துக்கு மட்டுமே வாழ அனுமதிக்கப்படுகின்றனர்.

5. தொழில்ரீதியாக ஆண்கள் சில தொழிற்துறைகளில் திட்டமிட்டுப் புறக்கணிக்கப்படுவதும் பெண்களின் உடலழகு மட்டும் கருத்தில் கொள்ளப்பட்டு வேலை வழங்குதலும் என்ற பாரபட்சம் தொடர்கின்றமை.

6. ஆண்களை தவறான வழியில் செல்ல தூண்டும் பெண்களுக்கு சட்ட ரீதியான தண்டனை ஏதுமில்லாமை.. ஆண்கள் தவறாக வழிநடத்தப்படுவது தொடர்கின்றமை.

7. விபச்சாரம் என்ற வியாபாரத்தில் பெண்கள் ஆண்களை வலிந்து சிக்க வைத்தலில் இருந்து பெண்களை தடுக்க முயலாமை.

8. கல்வியில் பரீட்சையில் சித்தியடையும் ஆண்களின் சதவீதம் தொடர்ந்து குறைவடைவது தொடர்பில் தீர்வுகள் தேடப்படுவதில் அக்கறை செலுத்தாமையும் புறக்கணிப்பும்.

9. போதைப்பொருளுக்கு அடிமையாக்கி பின் ஆண்களை (கணவர்களை) பெண்கள் கைவிட்டுச் செல்லுதல். அப்படியான பெண்களுக்கு வழங்கப்படும் சலுகைகள்.. போதைப்பொருள் பாவனையில் இருந்து ஆண்களை விடுவிக்க பயன்படுத்தப்படுவது குறைவாக இருத்தல்.

10. காதல்.. டேற்றிங் என்ற போர்வைகளில் ஆண்களிடம் உள்ள சொத்து மற்றும் சுகத்தை பறித்துக் கொண்டு செல்லும் பெண்கள் மீது நடவடிக்கைகள் எடுக்கப்படாமை. குழந்தைகளைக் காட்டி பெண்களும் சொத்துப்பறித்தலை சட்டரீதியாக ஊக்குவித்தல்.

11. ஆண்கள் மீது பகிடி வதை புரியும் பெண்கள் மீது சட்டம் பாயாமல் தடுக்கப்படுகின்றமை.

12. ஆண்களுக்கு மன உழைச்சல் ஏற்படும் வகையில் செயற்படும் பெண்களுக்கு தண்டனைகளும் ஆலோசனைகளும்.. வழிநடத்தலும் வழங்கப்பட அக்கறை செலுத்தாமை.

13. வர்த்தக விளம்பரங்களில் பெண்களுக்கு அதிக முக்கியமளிக்கின்றமை.

14. விமானப்பணியாளர்களில் பெண்களுக்கு திட்டமிட்டு முன்னுரிமை அளிக்கப்படுகின்றமை.

15. அந்தரங்கச் செயலாளர்கள் என்று பெண்களை நியமிப்பதை வழக்கமாகக் கொண்டிருத்தல். அங்கு ஆண்களுக்குரிய சம தொழில் வாய்ப்பு புறக்கணிக்கப்படுதல்.

16. கடினமான வேலைகளில் ஆண்கள் தேர்வு செய்யப்பட்டு ஈடுபடுத்தப்படுதல்.

17. இராணுவத்தில் ஆண்களை காக்க ஆண்கள் இராணுவமும்.. பெண்களைக் காக்க பெண்கள் இராணுவமும் அமைக்காமல்.. ஆண்களையே போருக்கு இரையாக்குதல்.

18. வீடுகளில் பெண்களால் ஆண்களின் பேச்சுரிமை.. வதிவிட சுதந்திரம் பறிக்கப்படுவது குறித்து அக்கறை செய்யாமை.

19. ஆண்களின் ஊதியத்தை பெண்களுக்கு பறித்துக் கொடுக்கும் பாரபட்ச சட்டங்கள் ஆண்களின் அடிப்படை உரிமையை மீறுகின்றமை.

20. போரின் போது பெண்களை.. குழந்தைகளைக் காக்க இருக்கும் சிறப்பு ஏற்பாடுகள்.. ஆண்களைக் காக்க இல்லாமை.

21. ஆண்களின் சராசரி ஆயுட்காலம் குறைவடைந்துள்ளமைக்கான சரியான காரணிகளை இனங்காட்டி ஆண்களுக்கு கிரமமான ஆலோசனைகளை வழங்கி அவர்களின் ஆயுட்காலத்தை பெண்களுக்கு நிகராகக் கொண்டு வர முனையாமை.

22. குழந்தை ஒன்றை உருவாக்குவதில் உள்ள ஆணின் 50% பங்களிப்பு திட்டமிட்டு புறக்கணிக்கப்படுவதோடு.. குழந்தை பெற்றபின் குழந்தையை.. துணைவியை பராமரிக்க என்று ஆணுக்கு விசேட நீடித்த விடுமுறை வழங்கப்படுவதில் முழுமையான பாரபட்சம் காட்டப்படுதல்.

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Bluehost Review