January 07, 2010

My Computer திறக்க அதிக நேரம் எடுத்துக் கொள்கிறதா?

நீங்கள் Windows XP இயங்குதளம் உபயோகித்துக் கொண்டிருக்கீறீர்களா? My Computer -ல் க்ளிக் செய்து வெகு நேரம் காத்திருக்க வேண்டியுள்ளதா?
இதோ உங்களுக்கான தீர்வு..,
My Computer ஐ திறந்து கொண்டு அதில் உள்ள Tools மெனுவில் Folder Options வசதியை க்ளிக் செய்யுங்கள்.

இனி திறக்கும் Folder Options விண்டோவில் View டேபிற்குச் சென்று, அங்கு Files and Folders இற்கு கீழாக உள்ள “Automatically search for network folders and printers” என்பதற்கு நேராக உள்ள Check Box ஐ uncheck செய்து விடுங்கள்.

இனி My computer முன்பை விட வேகமாக திறக்கும்.

மனித வயிற்றுக்கு நிகரான ஓர் கருவி கண்டு பிடிக்கப்பட்டுள்ளது

மனித வயிற்றுக்கு நிகரான ஓர் கருவியை விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. நோர்விச்சின் உணவு ஆய்வு நிறுவகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்களினால் இந்த புதிய கருவி கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

குறித்த கருவி மனித வயிற்றினால் மேற்கொள்ளப்படும் சகல தொழிற்பாடுகளையும் துல்லியமாக மேற்கொள்வதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மனித சமிபாட்டுத் தொகுதியின் இயக்கம் தொடர்பில் ஆய்வுகளை நடத்தும் நோக்கில் இந்த புதிய கருவி உருவாக்கப்பட்டுள்ளது.

இந்தக் கருவியை கண்டு பிடிப்பதற்கு சுமார் பத்து ஆண்டு காலம் தேவைப்பட்டதாக ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

மனித வயிறு உணவு சமிபாடு தவிர்ந்த ஏனைய பல தொழிற்பாடுகளை ஆற்றுவதாகவும், இதனால் குறித்த கருவியின் உருவாக்கம் மருத்துவ உலகில் புதிய மாற்றங்களை ஏற்படுத்தும் எனவும் நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
உணவு எவ்வாறு சமிபாடடைகின்றது என்பதனை கண்டறியும் நோக்கிலேயே முதலில் இந்தக் கருவி உருவாக்கத் திட்டமிடப்பட்டதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

எனினும், மருந்துப் பொருட்கள் உட்கொள்ளப்பட்டதன் பின்னர் எவ்வாறான செயற்பாடு நடைபெறுகின்றது என்ற முக்கியமான ஆய்வினை இந்தக் கருவியினைக் கொண்டு கண்டறிய முடியும் என சுட்டிக்காட்டியுள்ளனர்.

இந்த ஆய்வு முடிவுகளின் மூலம் மருந்துப் பொருள் பாவனை மற்றும் மருந்துப் பொருட்களின் செயற்பாடு தொடர்பில் புதிய தகவல்களை வெளியிட முடியும் என குறிப்பிட்டுள்ளனர்.

இந்தக் கருவியை சந்தையில் விற்பனை செய்யக் கூடிய வகையில் தயாரிப்பதே தமது அடுத்த இலக்கு என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Bluehost Review