
உங்கள் கம்ப்யூட்டர் தூங்கி வழிகிறதா? பாயும் குதிரையாய் பல மாதங்களுக்கு முன் ஓடிய விண்டோஸ் இப்போது தவழ்கிறதா? ஒவ்வொரு டாகுமெண்ட்டும், ஒர்க்ஷீட்டும் எடிட் செய்து பிரிண்ட் எடுக்கும் முன் போதும் போதும் என்றாகிறதா? கவலைப்படாதீர்கள். சில விஷயங்களைக் கவனித்தால் போதும். வேகமாக ஓடாவிட்டாலும், நமக்கு எரிச்சல் தராத வேகத்தில் விண்டோஸ் இயங்கும். அவற்றை இங்கு காண்போம்.
கம்ப்யூட்டர் வேகமாகவும் அனைத்து திறனுடனும் இயங்க வேண்டும் என்றால், விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை மட்டும் மீண்டும் மீண்டும் ட்யூன் செய்து பயனில்லை. அதிக வேகம் தரக்கூடிய ஹார்ட்வேர் பாகங்கள் இணைக்கப்பட வேண்டும். இந்த வகையில் நாம் முன்னுரிமை தர வேண்டியது ராம் மெமரி மற்றும் கிராபிக்ஸ் கார்டு ஆகும். இவற்றை நாமே இணைப்பதாக இருந்தால், நம் உடலில் இருக்கும் ஸ்டேடிக் மின்சாரம் கம்ப்யூட்டரின் நுண்ணிய...