மின்சாரத்தை சேமித்து வைத்து, தேவைப்படும் போது அதை பயன்படுத்திக் கொள்ளும் வசதியை பேட்டரிகள் தருகின்றன. தற்போது பயன்படுத்தப்பட்டு வரும் பாலிமர், லித்தியம் பேட்டரிகளுக்கு பதிலாக "அல்கே' (பச்சை பாசி) மூலம் பேட்டரிகள் தயாரிக்கும் ஆய்வுகள் நடந்து வருகின்றன.
தண்ணீரில் வளரக்கூடிய, முடி போன்ற இழைகளாலான இந்த பாசிகள், பார்ப்பதற்கு அருவருப்பாகவும், நாற்றம் கொண்டதாகவும் இருக்கும்.
தற்போது பயன்பாட்டில் உள்ள பேட்டரிகள் அளவில் பெரியதாகவும், எடை அதிகம் கொண்டதாகவும் உள்ளன. மேலும், இந்த பேட்டரிகளின் பயன்பாடு குறிப்பிட்ட கால அளவிற்குள் தான் உள்ளன. அவற்றை மீண்டும் பயன்படுத்த முடியாது. இதனால், இவை சுற்றுச் சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்துகின்றன.
இதை கருத்தில் கொண்டு, சுற்றுச்சூழலை பாதிக்காத, மெல்லிய, எடை குறைவான, உலோகம் இல்லாத, வளையக்கூடிய, விலை குறைந்த, எளிதாக...