
கடந்த 160 ஆண்டுகளில் இல்லாத விதமாக 2010ஆம் ஆண்டு மிகுந்த வெப்பம் நிறைந்ததாக இருக்கும் என இங்கிலாந்து வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
இதுதொடர்பாக இங்கிலாந்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தியில், “இயற்கைப் பருவநிலை மாற்றம் காரணமாக புவியின் வெப்பம் அதிகரிக்கும் என்ற போதிலும், 2010ஆம் ஆண்டில் மனித குலத்தால் ஏற்பட்ட பருவநிலை மாற்றம் காரணமாகவே வெப்பம் அதிகரிக்கும். இந்த வெப்பத்தின் அளவு கடந்த 1998இல் காணப்பட்டதை விட அதிகமாக இருக்கும்.
கடந்த 1961 முதல் 1990 வரையிலான காலகட்டத்தில் உலகம் அனுபவித்த சராசரி வெப்பத்தின் அளவை விட, 2010ஆம் ஆண்டில் உலகளவில் 0.6 டிகிரி வெப்பம் அதிகமாக (அதாவது 14.58 டிகிரி) காணப்படும்.
2010ஆம் ஆண்டு மட்டுமின்றி வரும் 2019 வரையிலான காலகட்டம் வரை வெப்பத்தின் தாக்கம் அதிகமாகவே இருக்கும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ள...