
உலகிலேயே முதல் முறையாக இதயத்தில் ஏற்பட்ட ஏழுவிதமான கோளாறுகளை ஒரே நேரத்தில் அறுவை சிகிச்சை மூலம் சரிசெய்து சென்னை, மியாட் மருத்துவமனை டாக்டர்கள் சாதனை படைத்துள்ளனர்.
சென்னையைச் சேர்ந்தவர் நாராயணசாமி (53). மருந்து கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி லட்சுமி. நாராயணசாமிக்கு பிறவியிலேயே இதய பாதிப்பு இருந்தது. இதற்கு அறுவை சிகிச்சை செய்து கொள்ளவில்லை. கடந்த மாதம் அவருக்கு அதிகமான மூச்சுத்திணறல் ஏற்பட்டதால், மணப்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனைக்கு வந்தார். நாராயணசாமியை, மியாட் மருத்துவமனையின் இதய அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் பாஷி பரிசோதித்தார். இதில், அவருக்கு இரண்டு பெரிய ரத்த நாளங்கள் மகாதமணியில் இருந்து ரத்தத்தை நுரையீரலுக்கு கொண்டு செல்வதும், "வென்ட்ரிக்கல் செப்டம்' எனப்படும் இதய அறைகளுக்கு இடையே துளை இருப்பதும், "ஏட்ரியல் செப்டம்' எனப்படும்...