August 24, 2011

கணணயில் தட்டச்சு வேகத்தை அதிகப்படுத்துவதற்கு

கணணியில் தட்டச்சு செய்யும் வேகத்தை அதிகப்படுத்தி நமக்கு உதவுவதற்காக ஒரு இலவச மென்பொருள் உள்ளது. கணணி பயன்படுத்தும் அனைவருக்குமே இருக்கும் ஒரு ஆசை என்னவென்றால் அதிகவேகமாக தட்டச்சு செய்ய வேண்டும் என்பது தான். இதற்காக நாம் தட்டச்சு வகுப்பிற்கு செல்ல நேரம் இல்லை என்று சொல்ல வேண்டாம், அனைவருக்கும் தட்டச்சு வேகத்தை அதிகப்படுத்த நமக்கு ஒரு இலவச மென்பொருள் உதவுகிறது. இத்தளத்திற்கு சென்று மென்பொருளை இலவசமாக தரவிறக்கிக் கொள்ளலாம். மென்பொருளை இயக்கி நாம் தட்டச்சு செய்ய தொடங்க வேண்டியது தான், ஆரம்பத்தில் வேகம் அதிகம் இல்லாமல் இருந்தாலும் தினமும் நமக்கு நேரம் கிடைக்கும் போது பயன்படுத்தினால் போதும். விசைப்பலகையில் இருக்கும் எல்லாவகையான பொத்தான்களையும் அழுத்தும் வண்ணம் பயிற்சி அமையப் பெற்றிருக்கிற...

வேர்ட் டிப்ஸ்

எளிதில் பைல் பெற்றுத் திறக்க வேர்ட் தொகுப்பில் பைல் ஒன்றைத் திறக்க Open மெனுவில் கிளிக் செய்கிறோம். அந்த விண்டோவில் கிடைக்கும் பட்டியலில் அனைத்து டாகுமெண்ட் பைல்களும் கிடைக்கின்றன. ஆனால் நாம் விரும்பும் பைலை, இந்தக் குவியலில் தேடி எடுக்க நேரமாகிறது. இதனைத் தவிர்க்க என்ன செய்யலாம்? இதற்கான சுருக்கு வழி ஒன்று உள்ளது. வேர்ட் Open டயலாக் பாக்ஸைத் திறந்து காட்டி, அதன் கர்சர் , File Name என்ற கட்டத்தில் நிற்கிறது. நீங்கள் N என்ற எழுத்தில் தொடங்கும் டாகுமெண்ட் பைல்களின் பட்டியலை மட்டும் பெற விரும்பினால், N*.doc என டைப் செய்து என்டர் தட்டவும். உடன், அந்த ட்ரைவில் உள்ள டைரக்டரிகள், அல்லது போல்டர்கள் முதலாவதாகவும், பின்னர் N என்ற எழுத்தில் தொடங்கும் பைல்கள் அடுத்ததாகவும் கிடைக்கும். இனி இதில் நீங்கள் விரும்பும் பைலைத் தேர்ந்தெடுத்து திறக்கலாம். அதிக பைல்களை ஒரு போல்டரில் வைத்திருக் கையில் இந்த...

ஏ.வி.ஐ. பைல்கள்

Audio Video Interleave என்பதன் சுருக்கமே இது. ஆடியோ மற்றும் வீடியோ சமாச்சாரங்களைக் கம்ப்யூட்டரில் பயன்படுத்த கேட்கையில் இந்த பெயர் அடிக்கடி கேட்கப்படும். கம்ப்யூட்டரில் வீடியோ வினைக் காண்கையில் இந்த மல்ட்டிமீடியா பார்மட் பயன் படுகிறது. மைக்ரோசாப்ட் இதனை 1992ல் அறிமுகப்படுத்தியது. AVI பைல்கள் ஆடியோ மற்றும் வீடியோ என்ற இருவகை தகவல்களை உள்ளடக்கியவை. இரண்டையும் ஒரே நேரத்தில் இயக்கும் தன்மை கொண்டவை. இந்த வகையில் சில முன்னேற்றங்களும் பின் நாளில் ஏற்பட்டன. இது தற்போது மிகவும் பழமையான பார்மட்டாகக் கருதப்பட்டாலும் இன்னும் பெரும்பான்மையான கம்ப்யூட்டர் களில் பயன்படுத்தப் படுகின்றன. புதிதாகப் பல பார்மட்டுகள் இருந்தாலும் எது உங்களுக்கு மற்றும் கம்ப்யூட்டருக்கு வசதியோ அதனைத் தேர்ந்தெடுத்துப் பயன்படுத்துவது நல்லது.&nb...

மொஸில்லா தடுக்கும் ஆட்ஆன் புரோகிராம்கள்

தன்னுடைய பயர்பாக்ஸ் பிரவுசர் தொகுப்பு 8 னை, மற்ற சாப்ட்வேர் தொகுப்புடன் தரப்படும் ஆட் ஆன் புரோகிராம்களைத் தடுக்கும் வகையில் வடிவமைக்க இருப்பதாக மொஸில்லா அறிவித்துள்ளது. பிரவுசரைப் பயன்படுத்துபவர்கள், அனுமதித்த பின்னரே, அத்தகைய ஆட் ஆன் தொகுப்புகள் இயங்க முடியும். சில சாப்ட்வேர் தொகுப்புடன் வரும் ஆட் ஆன் புரோகிராம்கள், பிரவுசரைப் பயன்படுத்துபவர்கள் எதிர்பாராத வகையில் சில விளைவுகளை ஏற்படுத்து கின்றன. எடுத்துக் காட்டாக, ஸ்கைப் புரோகிராமில் இணைத்துத் தரப்பட்டிருந்த ஆட் ஆன் புரோகிராம், பயர்பாக்ஸ் பிரவுசர் பல முறை கிராஷ் ஆகும் விளைவினைத் தோற்றுவித்தது. இதனால், அதனை அடியோடு விலக்க மொஸில்லா நடவடிக்கை எடுத்தது. 2009 ஆம் ஆண்டில் மைக்ரோசாப்ட், சத்தமில்லாமல், பயர்பாக்ஸ் பிரவுசரில் ஒரு ஆட் ஆன் புரோகிராமினை இணைத்தது. இதனை ஹேக்கர்கள் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்தத் தொடங்கினார்கள். இது போல சாப்ட்வேர் புரோகிராமுடன்...

தொடர்ந்து பயன்படும் தொழில் நுட்பங்கள்

பொதுவாக, ஒரு தொழில் நுட்பம் பயன்பாட்டிற்கு வந்த பின்னர், அது மேம்பாடு அடையும் பொழுது, புதிய தொழில் நுட்பம் அதன் இடத்தைப் பிடித்துக் கொள்ளும். பத்து அல்லது இருபது ஆண்டுகள் மட்டுமே, எந்த தொழில் நுட்பமும் பயன்பாட்டில் இருக்கும். பின்னர், பழையதாகி, பயன்பாட்டிற்கு வேகமற்றதாக ஒதுக்கப்படும். திரைப்படம், தொலைபேசி, ரேடியோ, தொலைக்காட்சி பெட்டி என நாம் அன்றாடம் பயன்படுத்தும் பல சாதனங்களில் இயங்கும் தொழில் நுட்பங்கள் இதற்கு சாட்சியாகும். கம்ப்யூட்டர் உலகில் இயங்கும் தொழில் நுட்பங்களின் வளர்ச்சியை எடுத்துக் கொண்டால், அறிமுகப் படுத்தப்பட்டுப் பல ஆண்டுகள் ஆன பின்னரும், இன்னும் பல அடிப்படைத் தொழில் நுட்பங்கள், உயிர்த்துடிப்புடன் இயங்கி வருகின்றன. இன்னும் 30 ஆண்டுகளுக்காவது இவை சிறந்த பயன்பாட்டில் இருக்கும் என்றும் எதிர்பார்க்கப் படுகின்றன. அவற்றை இங்கு காணலாம். கம்ப்யூட்டர் உலகில் மறைந்த தொழில் நுட்பங்களும்...

விண்டோஸ் 7 தரும் புதிய வசதிகள்

விண்டோஸ் 7 சிஸ்டத்திற்குப் பலரும் மாறி வருகின்றனர். புதிய கம்ப்யூட்டர் வாங்கும் அனைவரும், விண்டோஸ் 7 சிஸ்டம் தான் இருக்க வேண்டும் எனக் கேட்டு வாங்கிப் பயன் படுத்தி வருகின்றனர்.எனக்கு விண்டோஸ் எக்ஸ்பியே போதும் என பன்னாட்டளவில் இருந்த தயக்கம் மறைந்து, தற்போது விண்டோஸ் 7 ஆப்பரேட்டிங் சிஸ்டம் வேகமாக இடம் பிடித்து வருகிறது. இந்த சிஸ்டம் தரும் சில புதிய வசதிகள் இங்கு பட்டியலிடப் பட்டுள்ளன. 1. பின் அப் (Pin Up): நீங்கள் அடிக்கடி பயன்படுத்தும் போல்டர்களை, டாஸ்க் பாரில் வைத்து இயக்க விண்டோஸ் 7 வழி கொண்டுள்ளது. நீங்கள் விரும்பும் போல்டரில், மவுஸை வைத்து, ரைட் கிளிக் செய்து, அப்படியே டாஸ்க் பாருக்கு இழுத்து விட்டுவிடவும். 2. அப்ளிகேஷன் புரோகிராம் ஒன்றினை இயக்கிக் கொண்டிருக்கையில், எளிதாக அதில் வேலை செய்திட, இன்னொரு விண்டோவிலும் அதே அப்ளிகேஷன் புரோகிராமினை இயக்க விரும்புவீர்கள். இதற்கு அந்த அப்ளிகேஷன்...

மறைந்துவிடுமா பெர்சனல் கம்ப்யூட்டர்?

சென்ற ஆகஸ்ட் 12ல் தன் முப்பது வயதை எட்டிய பெர்சனல் கம்ப்யூட்டர், வரும் காலத்தில் இல்லாமல் போய்விடும் என்று பலரும் எண்ணத் தொடங்கி யுள்ளனர். 1981 ஆம் ஆண்டில், ஐ.பி.எம். பெர்சனல் கம்ப்யூட்டரை வடிவமைத்த குழுவில் இடம் பெற்ற வல்லுநர் மார்க் டீன் இந்தக் கருத்தினை முன் வைத்துள்ளார். இன்னும் புதியதாக ஒரு தொழில் நுட்பம், பெர்சனல் கம்ப்யூட்ட ரின் இடத்தைப் பிடிக்கும் என்று அறிவித்துள்ளார். ஸ்மார்ட் போன்கள் மற்றும் டேப்ளட் பெர்சனல் கம்ப்யூட்டர்கள், இதன் இடத்தைப் பிடிக்கும் வாய்ப்புகளைப் பெற்றவையாக இருந்தாலும், புதிய வழிகளில் கணிப்பொறி செயல்பாடு திருப்பப்பட்டு, புதிய சாதனங்கள் வடிவமைக்கப்படலாம் என இவர் கணித்துள்ளார். கம்ப்யூட்டரில் தற்போது மேற்கொள்ளப்படும் பணிகள், இனி பெர்சனல் கம்ப்யூட்டர் போன்ற ஒரு சாதனத்தின் வழி மட்டும் என முடங்காது, அனைத்து டிஜிட்டல் சாதனங்களிலும் மேற்கொள்ளப்படும். அப்போது பெர்சனல் கம்ப்யூட்டர்...

விண் ஆம்ப் புதிய பதிப்பு

விண் ஆம்ப் புரோகிராம் ஆடியோ மற்றும் வீடியோ பயன்பாட்டிற்கு, அதிகம் பயன்படுத்தப்படுகிறது. மைக் ரோசாப்ட் விண்டோஸ் இயக்கத்துடன் தரும், விண்டோஸ் மீடியா பிளேயர், சில பார்மட்டுகளை இயக்குவதற்குத் தயாராக இல்லை. வி.எல்.சி. பிளேயர் இந்தக் குறையினைத் தீர்த்தாலும், பலவகையான வசதிகளைத் தருவதால், இன்றும் விண் ஆம்ப் புரோகிராம் பலரின் ஆடியோ வீடியோ தேவைகளை நிறைவேற்றும் புரோகிராமாக உள்ளது. எடுத்துக் காட்டாக மியூசிக் பைல் என எடுத்துக் கொண்டால், விண் ஆம்ப் MIDI, MOD, MPEG1 ஆடியோ லேயர்கள் 1 மற்றும் 2, AAC, M4A, FLAC, WAV, OGG Vorbis, மற்றும் Windows Media Audio ஆகிய வற்றை இயக்குகிறது. இத்துடன், மியூசிக் சிடியிலிருந்து, இசையை இறக்கி இயக்கிச் செயல்படுகிறது. சிடிக்களில் மியூசிக் பைல்களை எழுதும் வசதி இதில் உள்ளதையும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். வீடியோ என்று வருகையில், பல்வகையான பார்மட்டுகளை இதில் கையாளலாம். Windows...

மைக்ரோமேக்ஸ் எக்ஸ் 450

மொபைல் விற்பனைச் சந்தையில், பட்ஜெட் போன்களைத் தயாரிப்பவராகத் தனக்கெனத் தனி இடம் கொண்டுள்ளது மைக்ரோமேக்ஸ். மேலும் புதிது புதிதாய் வசதிகளை வாடிக்கையாளர் களுக்குத் தருவதிலும் மைக்ரோமேக்ஸ் முன்னணியில் உள்ளது. எடுத்துக் காட்டாக, அண்மையில் விற்பனைக்கு வந்துள்ள எக்ஸ் 450 மொபைல் போன், புளுடூத் ஹெட்செட் ஒன்றை இணைப் பாகக் கொண்டு வந்துள்ளது. அத்துடன் அதற்கெனத் தனியே புதுவிதமான யு.எஸ்.பி. போர்ட்டும் கொடுக்கப்பட்டுள்ளது. இதன் வடிவமைப்பு சற்று வித்தியாசமானது. ஓரங்களில் சற்று வளைவான தோற்றம் தரப்பட்டுள்ளது. பின்பக்க பேனலை மாற்றி நாம் விரும்பும் இன்னொரு வண்ணத்தில் அமைத்துக் கொள்ள பேனலும் தரப்படுகிறது. இது சற்று ரப்பர் கலந்து அமைக்கப் பட்டுள்ளதால், அழுத்தமாகப் பிடித்து போனைப் பயன் படுத்த முடியும். இதன் திரை ரெசல்யூசனில் 2.4 அங்குல அகலத்தில் உள்ளது. இதன் தெளிவான...

ஸ்மார்ட் போன் சந்தையை இழக்கும் நோக்கியா

1996 ஆம் ஆண்டிலிருந்து ஸ்மார்ட் போன் விற்பனைச் சந்தையில் முதல் இடத்தைப் பிடித்திருந்த நோக்கியா நிறுவனம், தற்போது சாம்சங் மற்றும் ஆப்பிள் நிறுவனங்களால், பின்னுக்குத் தள்ளப் படுகிறது. தற்போது சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் முதல் இடத்தைப் பிடித்துள்ளது. அடுத்த காலாண்டில், இரண்டாவது இடத்தை ஆப்பிள் நிறுவனம் எடுத்துக் கொள்ளும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன. அடுத்த 2012 ஆம் ஆண்டில், எச்.டி.சி. நிறுவனமும் இந்த இடத்தில் நோக்கியாவைப் பின்னுக்குத் தள்ளும் வாய்ப்புகள் உள்ளதாகவும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இந்த சரிவிற்க்குக் காரணம், ஆப்பிள் நிறுவனத்தின் ஐ போன் மற்றும் ஆண்ட்ராய்ட் போன்களே எனவும் இவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.&nb...

மேக்ஸ் மொபைல் தரும் ஸ்கோப் எம்.டி.150

இரண்டு சிம் இயக்கத்துடன், டச் ஸ்கிரீன் போனாக, மேக்ஸ் மொபைல் நிறுவனம் தன் ஸ்கோப் எம்.டி.150 போனை வடிவமைத்துள்ளது. இது கன் மெட்டல் அழகுடன் மிளிர்கிறது. 2.8 அங்குல டச் ஸ்கிரீன் தரப்பட்டுள்ளது. ஹோம் ஸ்கிரீனில் எளிதான இயக்கத்திற்காக பல விட்ஜெட்டுகள் தரப்பட்டுள்ளன.ஙிஅக மற்றும் ஆப்பரா மினி பிரவுசர், இணையத் தேடலுக்கு எளிதாக வழி காட்டுகின்றன. MaX 1.3 மெகா பிக்ஸெல் கேமரா, திட்டமிட்டு இயக்கக் கூடிய ஸ்டீரியோ எப்.எம். ரேடியோ, புளுடூத், எம்பி3 பிளேயர், வீடியோ பிளேயர், 1000 mAh திறன் கொண்ட பேட்டரி தரப்பட்டுள்ளது. இது ஜாவா இயக்கம் கொண்ட போன். இதில் கம்ப்யூட்டர் மற்றும் யு.எஸ்.பி. இணைப்பிற் கென தனி அமைப்பு கொடுக்கப் பட்டுள்ளது. யாஹூ மெசஞ்சர், யாஹூ மெயில் தரும் யாஹூ லாஞ்சர் பதியப்பட்டு தரப்படுகிறது. போனில் 2ஜிபி மெமரி கார்ட் இணைக்கப்பட்டுள்ளது. இதன் அதிகபட்ச...

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Bluehost Review