August 24, 2011

வேர்ட் டிப்ஸ்

எளிதில் பைல் பெற்றுத் திறக்க 
வேர்ட் தொகுப்பில் பைல் ஒன்றைத் திறக்க Open மெனுவில் கிளிக் செய்கிறோம். அந்த விண்டோவில் கிடைக்கும் பட்டியலில் அனைத்து டாகுமெண்ட் பைல்களும் கிடைக்கின்றன. ஆனால் நாம் விரும்பும் பைலை, இந்தக் குவியலில் தேடி எடுக்க நேரமாகிறது. இதனைத் தவிர்க்க என்ன செய்யலாம்? இதற்கான சுருக்கு வழி ஒன்று உள்ளது.

வேர்ட் Open டயலாக் பாக்ஸைத் திறந்து காட்டி, அதன் கர்சர் , File Name என்ற கட்டத்தில் நிற்கிறது. நீங்கள் N என்ற எழுத்தில் தொடங்கும் டாகுமெண்ட் பைல்களின் பட்டியலை மட்டும் பெற விரும்பினால், N*.doc என டைப் செய்து என்டர் தட்டவும். உடன், அந்த ட்ரைவில் உள்ள டைரக்டரிகள், அல்லது போல்டர்கள் முதலாவதாகவும், பின்னர் N என்ற எழுத்தில் தொடங்கும் பைல்கள் அடுத்ததாகவும் கிடைக்கும். இனி இதில் நீங்கள் விரும்பும் பைலைத் தேர்ந்தெடுத்து திறக்கலாம். அதிக பைல்களை ஒரு போல்டரில் வைத்திருக் கையில் இந்த கட்டளை உங்களுக்குப் பயன் தரும். டாகுமெண்ட் பைல்கள் மட்டுமின்றி, வேறு எக்ஸ்டன்ஷகள் கொண்ட பைல்களையும் பட்டியலிட்டுக் கேட்கலாம். எடுத்துக்காட்டாக, டெக்ஸ்ட் பைல் ஒன்றைத் திறக்க வேண்டும் எனில் பொதுவாக *.txt எனக் கொடுத்துப் பெறலாம். இந்த வகைப் பைல்களில் கு என்ற எழுத்தில் தொடங்கும் பைல் மட்டும் வேண்டும் எனில், S*.txt என டைப் செய்து பட்டியலைப் பெறலாம்.

பக்க எண்கள் சொற்களாக
வேர்ட் தொகுப்பில் உருவாக்கப்பட்ட டாகுமெண்ட்களில் பக்க எண்களை எளிதாக இடுகிறோம். மெனு பாரில் சென்று இன்ஸெர்ட் கிளிக் செய்து Page Numbers தேர்ந்தெடுத்தால் கிடைக்கும் மெனுவில் நம் விருப்பப்பட்ட இடத்தில் பக்க எண்கள் தோன்றும்படி செய்துவிடலாம். இந்த பக்க எண்கள் இலக்கங்களாகத் தான் இருக்கும். இவற்றை எண்களுக்கான சொற்களாக வைத்துக் கொள்ளச் சிலருக்கு ஆவலாக இருக்கும். அந்த ஆசையைப் பூர்த்தி செய்திட கீழ்க்கண்டபடி செயல்படவும்.

1. வழக்கம்போல பக்க எண்களை இணைக்கவும்.

2. அதன் பின் பக்க எண்ணுக்குரிய பீல்டைத் தேர்ந்தெடுக்க வேண்டும். இதற்கு பக்க எண் அருகே கர்சரைக் கொண்டு சென்று இருமுறை கிளிக் செய்திடவும். பக்க எண் பேஜ் ஹெடர் அல்லது புட்டரில் தான் இருக்கும். இப்போது அந்த இடம் முழுவதும் தேர்ந்தெடுக்கப்பட்டு புள்ளிகள் கொண்ட கோடுகளால் கட்டம் கட்டப் பட்டு காட்டப்படும். இதில் எண் இருக்கும்.

3. இனி இந்த எண்ணுக்கான பீல்டைத் தேர்ந்தெடுக்க வேண்டும். அது எங்கே இருக்கிறது என்று கேட்கிறீர்களா? இந்த எண் அருகே கர்சரைக் கொண்டு சென்று ஷிப்ட்+எப்9 அழுத்தவும். எண்ணுக்கான பீல்டு கிடைக்கும். பீல்டு தேர்ந்தெடுக்கப்பட்டு கிரே கலரில் காட்டப்படும். பீல்டில் PAGE என்று தெரியும். இது தான் அதனுடைய குறியீடு.

4. இனி இந்த குறியீட்டிற்குப் பதிலாக \* CardText என டைப் செய்திடவும்.

5. பின் மீண்டும் எப்9 கீ அழுத்தினால் எண் இலக்கமாக இருப்பது மாற்றம் பெற்று எழுத்தில் கிடைக்கும். எடுத்துக் காட்டாக முதல் பக்கத்தில் 1 - என்பதற்குப் பதிலாக One என இருக்கும். 

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Bluehost Review