
அதிக எடை கொண்ட நடுத்தர வயதினரைப் பல்வேறு நோய்கள் சீக்கிரம் தாக்கும் என்றும், அதன் விளைவாக அவர்கள் வெகு விரைவிலேயே மரணத்தைத் தழுவ வேண்டி வரும் என்றும் புதிய ஆராய்ச்சி ஒன்று தெரிவிக்கிறது.
சுவீடன் நாட்டைச் சேர்ந்த நடுத்தர வயதினரான ஆயிரத்து 758 பேரிடம் சமீபத்தில் ஓர் ஆய்வு நடத்தப்பட்டது. இந்த ஆய்வு அறிக்கை, அமெரிக்க இதயக் கழகத்தின் பத்திரிகையில் வெளியிடப்பட்டது.
அந்த அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது,
பொதுவாக உடல் வளர் சிதை மாற்றத்தின் அடிப் படையில் இயங்கி வருகிறது. இந்த வளர்சிதை மாற்றம் என்பது நமது உணவு மற்றும் உடற்பயிற்சியின் அடிப்படையில் நடப்பது. சரியான சத்தான உணவு உட்கொள்ளாதது, முறையான தேவையான உடற்பயிற்சி செய்யாதது போன்றவற்றால் வளர்சிதை மாற் றத்தில் கோளாறு ஏற்படும். அந்தக் கோளாறால் நீரிழிவு, தொப்பை போடுதல், ரத்தத்தில் சர்க்கரை அளவு கூடுதல்,...