
ஆப்பிள் நிறுவனம் ஐ–போன் தயாரித்து மொபைல் போன் பயன்பாட்டிலும் விற்பனையிலும் தனி சாதனை படைத்த பின்னர் மற்ற கம்ப்யூட்டர் தயாரிப்பு நிறுவனங்களும் மொபைல் போன் தயாரிப்பில் இறங்கியுள்ளனர்.
மொபைல் போன் நாளுக்கு நாள் முழுமையான ஒரு கம்ப்யூட்டராக இயங்கும் வகையில் வடிவமைக்கப்படும் இந்நாளில் கம்ப்யூட்டர் நிறுவனங்கள் மொபைல் போன் தயாரிப்பில் இறங்கினால் இன்னும் பல கம்ப்யூட்டர் வசதிகளைப் பெரிய அளவில் மொபைல் போன்களில் எதிர்பார்க்கலாம்.
இன்டர்நெட் பிரவுஸ் செய்திடும் வசதி, இரு வழி வீடியோ கான்பரன்ஸ் வசதி, ஹை டெபனிஷன் மூவி என கம்ப்யூட்டர் இன்று வெற்றி கண்டிருக்கும் வசதிகள் பல மொபைல் போன்களில் கிடைக்கும் வாய்ப்புகள் உறுதியாகியுள்ளன.
இதனால் ஏற்கனவே மொபைல் போன் சந்தையில் தங்களை உறுதிப் படுத்திக் கொண்டு வெற்றிகரமாக இயங்கி வரும் நிறுவனங்களுக்கு இந்த கம்ப்யூட்டர்...