
விரும்பாத கர்ப்பத்தைத் தவிர்க்க பெண்கள் இனி மாத்திரை, பப்பாளியைத் தேடத் தேவையிருக்காது. ஏனெனில், ஆண்களுக்கான கருத்தடை மாத்திரை விரைவில் அறிமுகமாக உள்ளது.
இதுபற்றி எடின்பெர்க்கில் உள்ள குயின் மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தைச் சேர்ந்த இனப்பெருக்கவியல் மைய ஆராய்ச்சியாளர் மைக்கேல் வெல்ஷ் கூறியதாவது:ஆணின் உடலில் சுரக்கும் ஆன்ட்ரோஜன்தான் உயிரணுக்கள் உருவாக முக்கிய காரணம். அதை தற்காலிகமாக குறைக்கும் வழியை கண்டுபிடித்தால், பெண்ணின் தேவையற்ற கர்ப்பத்தை தவிர்க்கலாம் என்பதால் அதற்கான ஆராய்ச்சியில் இறங்கினோம்.
எலிகளை பயன்படுத்தி நடந்த ஆராய்ச்சிக்கு வெற்றி கிடைத்துள்ளது. இது மனிதனுக்கும் பொருந்தும் என்று நம்பலாம். எலிகளில் உயிரணுக்களை உருவாக்கும் ஜீன் ஒன்று மருந்து மூலம் நீக்கப்பட்டது. அந்த ஜீன் மறைந்ததும், உயிரணு உருவாவது குறைந்தது தெரிய வந்தது. இந்த...