December 24, 2009

உலகின் மிகப் பெரிய திரை கொண்ட முதல் தரமான மொபைல்


எச்.டி.சி. நிறுவனத்தின் அதி நவீன தொழில் நுட்பத்துடன், அனைத்து வசதிகளையும் தரும் வகையில் மிகச் சிறப்பான மொபைலாக எச்.டி.2 மொபைல் வெளிவந்துள்ளது.
விண்டோஸ் இயக்கத்தில் புதியமுறை டச் போனாக வடிவமைக்கப்பட்டு, நாம் இதுவரை மொபைல் ஒன்றில் பெறத் துடித்த அனைத்து அனுபவங்களையும் தருவதாக இந்த மொபைல் உள்ளது. 2009 ஆம் ஆண்டின் மிகச் சிறந்த போனாக எச்.டி.சியின் எச்.டி.2 (HTC HD 2)தேர்ந்தெடுக்கப்படும் வாய்ப்பு உள்ளது.
முதலில் நம்மை ஆச்சரியப்படுத்துவது இதுவரை நாம் காணாத 4.3 அங்குல அகல டச் சென்சிடிவ் திரை. கெபாசிடிவ் டச் என அழைக்கப்படும் தொழில் நுட்பம் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் ப்ராசசிங் வேகம் 1 கிகா ஹெர்ட்ஸ் என்பதால், மிக மென்மையாகத் திரையைத் தொட்டாலே, அதற்கான செயல்பாடு உடனடியாக மேற்கொள்ளப்படுகிறது. எச்.டி.சி. நிறுவனத்தின் தாரக மந்திரமான “இது என்னுடையது; எனக்கு மிக நெருக்கமானது; எதிர்பாரததைத் தேடித்தருவது” என்பதனை முழுமையாக மேற்கொண்டிருக்கும் மொபைல் இது. இதனைப் பயன்படுத்தும் ஒவ்வொருவரும் தாங்கள் விரும்பும் வகையில் மெயில், காலண்டர், மெசேஜிங், பிரவுசர் என அனைத்தையும் அமைத்துக் கொள்ளலாம். முக்கிய இணைய தளங்கள், நெருங்கிய நண்பர்கள், உறவினர்கள் ஆகியோருக்கான ஷார்ட் கட்களை அமைத்து, அவற்றின் மீது செல்லமாக மெல்லத் தட்டி இணைப்பினைப் பெறலாம். நீங்கள் எந்த நாட்டுக்குச் சென்றாலும், அந்த நாட்டின் நேரத்திற்கேற்றபடி இதன் கடிகார நேரம் மாறும். வெளியே நிலவும் சீதோஷ்ணநிலையை திரையைப் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம்.

இமெயில், எஸ்.எம்.எஸ். போன் லாக், பேஸ்புக் அப்டேட்டிங் ஆகியவற்றை அந்த நபர்களின் போட்டோ தெரிவதைக் கொண்டு அறியலாம். 
அழைப்பு ஒன்று கிடைக்கையில் அதனை கான்பரன்ஸாக மாற்ற வேண்டும் என விரும்பினால், மற்றவர்களின் போட்டோக்கள் மீது சிறிய அளவில் தட்டினால் போதும். அனைவரும் கூடிவிடுவார்கள். இதன் தொடு உணர்ச்சியைச் சொல்லால் விவரிக்க முடியாதது. மெலிதாகத் தொட்டாலே, இணைய தளங்கள் விரிகின்றன; சுருங்குகின்றன. படங்கள் மற்றும் இமெயில்களும் அதே போல் இயங்குகின்றன. இதில் கிடைக்கும் பெரிய ஆன் ஸ்கிரீன் கீ போர்டு மூலம், வெகு வேகமாகவும் எளிதாகவும் மெசேஜ் டைப் செய்திட முடியும். இந்த போன் இருந்தால் வை–பி இணைப்பு கொண்ட லேப் டாப் எல்லாம் தேவையில்லை. இந்த போன் 3ஜி செல்லுலர் நெட்வொர்க்குடன் இணைந்து வேகமாகச் செயல்படுகிறது.

இதில் உள்ள 5 மெகா பிக்ஸெல் கேமரா அழகான படங்களை எடுத்துத் தருகிறது. 157 கிராம் எடையில் 120.5×67x11மிமீ பரிமாணங்களுடன் கைக்கு அடக்கமாக அமைக்கப்பட்டுள்ளது. எஸ்.எம்.எஸ். மற்றும் எம்.எம்.எஸ்., ஸ்பீக்கர் போன், பலவகை பார்மட்டுகளில் உள்ள ரிங் டோன்களைக் கையாளும் வசதி, 448 எம்பி ராம், மைக்ரோ எஸ்.டி. கார்ட் இணைப்பு வசதி, நெட்வொர்க் இணைப்பிற்கு ஜி.பி.ஆர்.எஸ்., எட்ஜ், 3ஜி, டபிள்யூ லான், புளுடூத் என அனைத்து தொழில் நுட்பங்கள், வீடியோ ரெகார்டிங், ஆர்.டி.எஸ். இணைந்த ஸ்டீரியோ எப்.எம். ரேடியோ, வாய்ஸ் மெமோ, பேஸ்புக் மற்றும் ட்விட்டர் அறிந்து செயல்படுதல், தொடர்ந்து 6 மணி 20 நிமிடங்கள் பேசும் வசதி, 12 மணி நேர இசை கேட்கும் வசதியைத் தரும் லித்தியம் அயன் 1230 ட்அட பேட்டரி என அனைத்து நவீன வசதிகளையும் கொண்டு இந்த போன் இயங்குகிறது.

டாட்டா டொகொமோ நிறுவனம் தன் வாடிக்கையாளர்களுக்கு இந்த மொபைல் பயன்படுத்தும் அனுபவத்தினைத் தருவதற்காகச் சிறப்பு ஏற்பாடுகளைத் தங்கள் விற்பனை மையங்களில் மேற்கொண்டுள்ளது. அத்துடன் அறிமுகச் சலுகையாக மாதம் 500 எம்பி டவுண்லோட் செய்திடும் வசதியுடன் ஆறு மாத இன்டர்நெட் இணைப்பினை இலவசமாகத் தருகிறது.

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Bluehost Review