August 23, 2011

கண்ணுக்கு புலப்படாத மாசுகளை அகற்றும் செய்மதி


கண்ணுக்குப் புலப்படாத மாசுக்களை அகற்றும் நுட்பமான பணியில் செய்மதிகளை ஈடுபடுத்த உள்ளதாக லண்டனின் லெய்செஸ்ரர் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர்.
இப்புதிய கருவி சூழல் மாசடைவினைத் தடுப்பதற்கு உதவுமென நம்புகின்றனர் விஞ்ஞானிகள். இக்கருவியானது 15 வருடத் திட்டத்தில் உருவாக்கப்பட்டு வருகின்றது.
இது பூமியின் சூழல் தரவுகளைச் சேகரிக்கும் Envisat எனும் செய்மதிக்குக் தரவுகளைச் சேமிக்கும் பணியில் கூடுதல் உதவிகளை வழங்கும் என்றும் கருதப்படுகின்றது.
800கி.மீ. அப்பாலிருந்தும் லண்டனின் அல்லது எந்தவொரு பெரிய நகரத்தினதும் வரைபடங்களை இதனால் பெறக்கூடியதாயிருக்கும் என்பதுடன் இதன்மூலம் எந்த நகரின் வான்பரப்பு நன்றாக அல்லது மோசமாக உள்ளது என அறியவும் முடியும். இதன் மூலம் எந்த நகரின் எந்த வீதியில் மாசு அதிகம் என்று கூடக் கண்டுபிடிக்கமுடியும்.
இதன்மூலம் அவ்வீதியின் மாசினைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியுமென்கின்றனர் விஞ்ஞானிகள். சூழல் மாசினால் வருடாந்தம் 2 மில்லியன் முற்கூட்டிய இறப்புக்கள் ஏற்படுவதாக உலக சுகாதார அமைப்புக் கூறுகின்றது.
தற்போது தம்மால் ஒரு நாட்டின்மீது அல்லது ஒரு பரந்த பகுதி மீது உள்ள நைதரசன்ஈரொட்சைட்டினை தான் அளக்கமுடியும் என்றும் இப்புதிய கண்டுபிடிப்பால் ஒரு நகரத்தையும் ஒரு வீதியின் மாசு மட்டத்தினையும் கூட அளக்க முடியும் என்கின்றனர் லெய்செஸ்ரர் பல்கலைக்கழக விஞ்ஞானிகள்.

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Bluehost Review