
ஆசியாவில் பாறைகளில் காணப்படும் நீர் நிலைகளில் இனவிருத்தியாகும் “ஏசியன் றொக் பூல் மொஸ்கியூட்டோ” எனப்படும் நுளம்பினம் மத்திய சுவிட்ஸர்லாந்தில் 1,400 சதுர கிலோமீற்றர்கள் தூரம் பரவியுள்ளது என சூரிச் பல்கலைக்கழகம் மேற்கொண்ட ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
3,500 இடங்களில் பரிசோதித்தபோது 122 இடங்களில் இவ்வகை நுளம்பினக் குடம்பிகள் காணப்பட்டுள்ளன. இது இவ்வின நுளம்புகளின் வேகமான பரம்பலையே வெளிப்படுத்துவதாக ஆய்விற்கு தலைமைதாங்கிய விஞ்ஞானி அலெக்சாண்டர் மத்திஸ் தெரிவித்தார்.
இவ்வகை நுளம்புகளின் பிறப்பிடம் ஜப்பான், கொரியா மற்றும் சீனா ஆகிய நாடுகளாகும். வடஅமெரிக்கா, பிரானஸ் மற்றும் பெல்ஜியத்தின் சில இடங்களிலும் இவ்வகையான நுளம்புகள் இனம்காணப்பட்டுள்ளன.

இந்த நுளம்பின் மூலம் பரவும் வெஸ்ட் நெயில் வைரசு பாரிய பாரிசவாதம், சுயநினைவை இழக்கச் செய்யக்கூடிய நோயினை ஏற்படுத்தும் அபாயத்துக்குரியது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.